23/07/2017

மீத்தேனை உள்ளே விட்ட எம்.ஜி.ஆர்...


தமிழகத்தில் மீத்தேன் (அதாவது ஹைட்ரோகார்பன்) கண்டறியும் ஆய்வு,
ONGC யால் முதன்முதலாக 1977 ல் எம்.ஜி.ஆர் அனுமதியுடன்  தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது..

1986 ல் முதன்முதலாக 75% மீத்தேன் கிடைக்கும் Natural gas எடுக்கும் பணி அவரது ஆட்சியிலேயே 1986 நரிமணத்தில் தொடங்கப்பட்டது.

அதே ஆண்டு களப்பாள் பகுதியிலும் தொடங்கப்பட்டது.(இன்றுவரை நடந்தும் வருகிறது).

1996 ல் மீத்தேன்(CH4) அதாவது ஹைட்ரோகார்பன் (CH) எடுக்க மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தமிழக அரசுக்கு கட்டளை இடுகிறது.

அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த தி.மு.க கட்சியைச் சேர்ந்த ஆ.ராசா அனுமதி கொடுத்தார்.

அதை நெடுவாசல் அமைந்துள்ள தொகுதியின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் அங்கீகரித்தார்.

இதை அந்த பகுதி எம்.எல்.ஏ வான கம்யூனிஸ்ட் கட்சி ராஜசேகர் எதிர்க்கவில்லை, ஒத்துழைத்தார்.

தற்போது அந்த நாசகார திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி மிக மூர்க்கமாக செயல்படுத்துவது அ.தி.மு.க..

அதை இயக்குவது மத்திய பா.ஜ.க மோடி அரசு.

அதற்கு ஆதரவாக செயல்படுகிறது தமிழக பா.ஜ.க.

எதிர்ப்பது போல நடிப்பது தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்.

ஆக
தி.மு.க
அ.தி.மு.க
கம்யூனிஸ்ட்
பா.ஜ.க
காங்கிரஸ்

அனைவரும் இதில் கூட்டாளிகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.