29/11/2020

உங்களுக்கு கிருஸ்துவ மதத்தையும் கிருஸ்துவ நண்பர்களையும் நன்றாகவே தெரியும்....

ஆனால் உங்களில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் மோர்மோனிஸம் (mormonism) என்கிற மதம்...

இது கிருஸ்துவ மதத்தில் உள்ள பெந்தெகோஸ்தே போன்ற பிரிவுகள் கிடையாது...

mormonism என்பது ஒரு மதம் அதேசமயம் கிருஸ்துவத்தை தழுவிய ஒரு மதம் என்ன குழப்பமாக இருக்கிறதா?

இவர்கள் இயேசு கிறிஸ்துவை நம்புவார்கள் அதே நேரத்தில் கிருஸ்துவ மதத்தை நம்பமாட்டார்கள்...

புனித பைபிளை ஏற்று கொள்வார்கள் அதே நேரத்தில் book of Mormon என்கிற புத்தகத்தை வேதமாக கருதுவார்கள்...

1820 களில் தான் இந்த மதம் அல்லது இயக்கம் உருவாகிறது...

இது எங்கயோ நாலு பேர் செய்யிறதை எல்லாம் ஏற்று கொள்ள முடியுமா என்று கேட்டால் அது தவறு..

அமெரிக்கவில் மட்டும் இவர்கள் கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் இந்த மதம் அல்லது இயக்கத்தில் உள்ளனர்..

மெக்ஸிகோ பிரேசில் பிலிப்பைன்ஸ் என்று இவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது...

இவர்களுடைய தடுக்கப்பட்ட உணவுகளில் முக்கியமானது...

டீ காபி போன்றவைகள்..

இந்த மோர்மன்ஸ் மதத்தவர்கள் நினைத்து கூட பார்க்க கூடாது.....

முக்கியமாக ஆல்கஹால் எதுவும் இவர்களுக்கு அனுமதி கிடையாது....

உருவ வழிபாடு சிலைகளை கடுமையாக எதிர்பவர்கள்..

ஆனால் இவர்கள் கிருஸ்துவ மதத்தின் ஒரு பிரிவினர் என்றே உலக அறிஞர்கள் கூறுகின்றனர்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.