1941 ல் (Office of Coordinator of Information-COI) என்ற பெயரில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் துவக்கினாலும் 1947 ல் அமெரிக்க அதிபர் ட்ருமன் என்பவரால் சி.ஐ.ஏ (Central Intelligence Agency) என பெயர் மாற்றப்பட்டு செயல்பாட்டுக்கு வருகிறது.
கொலைகாரர்களின் நிறுவனம்
என்றழைக்கப்படும் இந்த உளவு நிறுவனத்தால் 1987 வரை மட்டுமே 60 லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
1. 1953 ல் ஈரானில் அந்நிய பிரிட்டிஷ் எண்ணை நிறுவனத்தை தேசிய மயமாக்க முயன்ற, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரான் அதிபர் முகம்மத் மொசாதேக் (Mohammed Mossadegh) தூக்கி எறியப்பட்டு சர்வாதிகாரி ஷா என்பவர் அதிபராக அமெரிக்காவால் நியமிக்கப்படுகிறார்.
2. 1961 ல் ஐ. நா. வின் தலைமைச்செயலர் ஹம்மர்ஸ்ஜொல்ட் (Dag Hammarskjold) என்பவர் ஜாம்பியாவில் கனிமச்சுரங்கங்களை ஆக்கிரமிக்க நினைத்த பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு எதிரான அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதால் "விமான விபத்தில்" கொல்லப்பட்டார்.
3. 1967 அக்டோபர் 9 ல் அர்ஜென்டினா நாட்டுக்காரரான போராளி சே குவேரா பொலிவியா நாட்டில் கொல்லப்பட்டார்.
4. 1973 ல் சிலி நாட்டின் மக்கள் அதிபர் அலண்டே (Salvador Allende) கொல்லப்பட்டு பினோச்சே (Augusto Pinochet) என்ற சர்வாதிகாரி அதிபராக்கப்படுகிறார்.
5. எண்ணை நிறுவனங்களை தேசியமயமாக்க முனைந்த இராக்கின் சதாம் ஹுசேன், வெனிசூலாவின் ஹுகோ சாவேஸ் மற்றும் லிபியாவின் கடாபி வரை காலனியத்தை எதிர்க்கும் அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்களுக்கும் நிகழ்வது இந்த சதிவலையால் ஏற்படும் கொலைதான்.
6. தென் அமெரிக்காவில் மக்களுக்காக பாடுபட்ட சமூக சிந்தனை கொண்ட தலைவர்கள் சமீப காலமாக இறக்க காரணமாய் இருப்பது புற்று நோய். சர்வாதிகாரிகளுக்கு வராமல் அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்க்கும் சமூக சீர்திருத்த தலைவர்களுக்கு மட்டுமே இந்த புற்று நோய் வருவது ஒரு நவீன தொழிநுட்ப அமெரிக்க சதி என்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
2008 ல் சி.ஐ.ஏ பராகுவே (Paraguay) நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் அந்நாட்டு அதிபர் பெர்னாண்டோ லுகோ வினுடைய டி.என்.ஏ படிமங்களைப் பெற்றதை விக்கி லீக்ஸ் வெளியிட்டுருக்கிறது.
1. 2010 ஆகஸ்டில் பராகுவே நாட்டின் அதிபர் பெர்னாண்டோ லுகோ (60 வயது) புற்று நோயால் மரிக்கிறார்.
2. 2011 அக்டோபரில் பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இன்னாசியோ லுலா தா சில்வா (66) புற்று நோயால் மரிக்கிறார்.
3. 2013 மார்ச் 5 ல் வெனிசூலா நாட்டின் அதிபர் ஹுகோ சாவேஸ் (59) புற்று நோயால் மரிக்கிறார்.
4. 2012 ஜனவரியில் அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா கிர்நெருக்கும் (58) புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
5. கியூபா முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ மீதான 12 முறைக்கும் மேற்பட்ட சி.ஐ.ஏ வின் கொலை முயற்சிகள்.
இவை அனைத்தும் அமெரிக்க சி.ஐ.ஏ வின் அதிநுட்ப அறிவியல் படுகொலைகளே (Scientific Assassinations) என்கிறது சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம்.
8. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ப்ரெஞ்சுக்காலனியாக இருந்த அப்பர் வோல்டா (Upper Volta) என்ற நாட்டை நேரியவர்களின் நாடு (Land of Upright Men) என்ற பொருள் பொதிந்த புர்கினா பாசோ (Burkina Faso) என்ற பெயருள்ள நாடாக மாற்றிக்காட்டிய தாமஸ் சங்கரா என்ற இளம் போராளி ஆப்ரிக்காவின் சே குவேரா என்றழைக்கப்பட்டார். அவருடைய 5 வருட ஆட்சிக்குள்ளாக, 37 வது வயதிலேயே கொல்லப்பட்டார்.
தொடரும் கொலைகள் அடுத்த பதிவில்....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.