ஷிவ்கார் பாபூஜி டால்பேட் அவர்களின் விமான டிசைன் பற்றியது...
ரைட் சகோதரர்கள் உலகின் முதல் விமானத்தை கண்டுப்பிடித்த 8 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியரான ஷிவ்கார் பாபூஜி டால்பேட் விமானம் ஒன்றை உருவாக்கியதாகவும், அது சுமார் 1500 அடி உயரம் வரை பறக்க கூடியது என்றும் கூறுகிறது ஒரு சதி கோட்பாடு.
1895-ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான அந்த விமானத்திற்கு எந்த விதமான நிதி உதவியும் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டாம் என்று பரோடா மகாராஜாவிடம் பிரிட்டிஷ் அரசு கேட்டுக் கொண்டதாகவும் விளக்கம் அளிக்கிறது அந்த சதி கோட்பாடு.
முதல் விமான தொழில்நுட்பம் இந்தியரிடம் இருப்பதா என்று பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த வரலாற்று துரோகத்திற்க்கும், அப்படி ஒரு விமானம் பறந்தது என்பதற்கும் எந்த விதமான சான்றும் இல்லை என்பது குறிப்பிடத்தககது.
மேலும் ஷிவ்கார் பாபூஜி டால்பேட் (Shivkar Babuji Talpade) அவர்களின் விமான டிசைன் என்று கூறப்படும் அந்த விமான டிசைன் ஆனது மிகவும் பலவீனமானது போன்றும் தெரிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.