26/01/2018

முருகனும் விநாயகரும் அண்ணன் தம்பி மட்டுல்ல, இந்து கடவுள் தான் என்று அடித்துக் கூறுகின்றனர் சிலர்...


இந்து கடவுள் என்று கூறப்படும் விநாயகர், பார்வதி, சிவன், விஷ்ணு, கிருஷ்ணன், ராமருக்கு இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களிலும் கோவில்கள் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, தீபாவளி போன்ற இந்து மத பண்டிகையின் போது  29 மாநிலத்திலும் இந்துக்கள் அப்பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

விநாயகர் சிவப் பார்வதியின் மகன் என்று அனைத்து இந்து மதத்தைச் சேர்ந்த வடநாட்டுக்காரனும் கூறுகிறான். அப்ப, விநாயகர் இந்து கடவுள் தான்.

இந்து கடவுள் என்று கூறப்பட்ட முருகனுக்கு இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களின் தமிழ்நாட்டில் மட்டுமே கோவில்கள் உள்ளது. ஏன் மீதம் உள்ள 28 மாநிலங்களில் முருகனுக்குக் கோவில்கள் இல்லை? முருகன் உண்மையில் இந்து கடவுளாக இருந்திருந்தால், மற்ற இந்து கடவுள்களுக்கு எவ்வாறு அனைத்து மாநிலங்களிலும் கோவில் இருக்கிறதே, அவ்வாறே முருகனுக்கும் கோவில் இருந்துருக்கும் அல்லவா...

தைப்பூசம் இந்து மத விழா என்றால், இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர்த்து, மீதம் உள்ள 28 மாநிலங்களிலும் ஏன் இந்த இந்து மத தைப்பூசத்தைக் கொண்டாடுவதில்லை இந்துக்கள். தைப்பூசம் இந்து மத விழாவே கிடையது முதலில்... இது தமிழர்களுடைய பெருநாள். குறிஞ்சி நிலத்தை ஆண்ட மன்னன் முருகன் என்பதால் அவருக்கு விழா எடுக்கும் நிகழ்வே தைப்பூசம் (தொல்காப்பியம், திருமருகாற்றுப்படை)

ஒரு இந்திப் படத்தில் கூட முருகனைக் கடவுளாக காட்டியதில்லை வடநாட்டவர்கள் என்பது கூடுதல் சான்று. மேலும், முருகனைப் பற்றி வடநாட்டவரிடம் கேட்டால் தெரியவில்லை என்கின்றனர்.  அவர்களைப் பொறுத்தவரை சிவப் புத்திரன் என்றால் விநாயகர் மட்டுமே என்கின்றனர். இது என்ன புதுக் கதை என்கின்றனர். அப்படியென்றால், முருகன் இந்து கடவுள் இல்லை என்பது மட்டும் உறுதி.

முருகனைப் பொதுவாக தமிழ்க் கடவுளாகத் தமிழர்கள் எண்ணுகிறார். அதனால், தமிழர்கள் புலம்பெயர்ந்த இடங்களில் முருகன் திருத்தளத்தை நிறுவினர். முருகனைத் தமிழ்க் கடவுளாக வழிபடுகின்றனர்.

முருகன் கடவுளா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவர் குறிஞ்சி நிலத்தை ஆண்ட தமிழ் மன்னன் என்பதால், தமிழுக்கும் தமிழர்களுக்குத் தொடர்புடையவர் என்பது மட்டும் உறுதி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.