08/10/2017

ஹிட்லரை மன்னிப்பு கேட்கவைத்த தமிழன்...


ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்த தமிழனின் சாம்பலைக் கூட கொண்டு வராமல் அசட்டை செய்த இந்தி'யா...

நேதாஜிக்கு முன்பே ஆங்கிலேயரின் கீழ்  போர் செய்து ஜெர்மனிடம் தோற்று கைதியாக இருந்த இந்திய சிப்பாய்களை திரட்டி,

இந்தியாவை விடுவிக்க முதன்முதலாக படை அமைத்தவர்..

ஹிட்லரையே மன்னிப்பு கேட்க வைத்தவர்..

'எம்டன்' கப்பலின் தலைவராக சென்னைவரை வந்து கோட்டையைத் தாக்கியவர்..

மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, சுபாஷ்சந்திர போஸ் ஆகியோர் தாமே சென்று சந்திக்கும் அளவுக்கு பெரிய மனிதர்..

வீரத்தமிழன் செண்பகராமன்...

1934ல் மரணிக்கும் முன்பு கடைசி விருப்பமாக நான் பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில் கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டின் வளமிக்க வயல்களில் தூவிவிடு என்று மனைவியிடம் கூறியிருந்தார்...

இந்தியா 1947ல் போலி விடுதலை அடைந்த பிறகும் கூட பல ஆண்டு காலம் (மணிப்பூரைச் சேர்ந்த) அவரது மனைவி அலையாய் அலைந்து தான் அதை 1966ல் நிறைவேற்றினார்..

இந்தியர்களும் வரலாற்றில் நம் செண்பகராமன் பெயரையே இல்லாமல் அழித்துவிட்டனர்..

பல ஆண்டுகளுக்குப் பிறகு 2009ல் தான் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது (தமிழகத்தில்தான்)..

செம்பகராமன் யார் என்று பெரும்பாலான தமிழருக்கே தெரியாது ..

பெருமையில் வெடித்ததே நெஞ்சம்
செந்தமிழ் வீரனே செண்பகராமனே..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.