25/02/2018

திருட்டு கம்யூனிச த்தின் நாசவேலையும் தவறான சித்தரிப்பும்...


20.02.2018 அன்று தூத்துக்குடியில் கலவரம் செய்ய விறகு கட்டைகளுடன் வந்த இரவுடிகளை கதற விட்ட தூத்துக்குடியின் நேர்மையான,  இளம்தைரியமான ASP செல்வநாகரெத்தினம் IPS  அவர்களுக்கு  இராயல்சல்யூட்..

இவரை பற்றி தெரியாதவர்களுக்கு...

இவர் 2010 ம் ஆண்டு IPS வெற்றி பெற்று  வடமாநிலத்தில் (மணிப்பூர்) SP யாக நேர்மையாக பணிசெய்து அந்த மாவட்டமக்களால் அன்புடன் அனைவராலும் நேர்மையானவர் என்று ஆழைக்கபட்டவர், வடகிழக்கு மாவட்டங்களுக்கு சவாலாக இருந்த  நக்சல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியவர். மணிப்பூர் மாநிலத்தில் நக்சல்களின் ஆதிக்கத்தை ஒடுக்கி அமைதியைப் பேணியதால் DGP யிடம் மெச்சத்தகுந்த பணிக்கான விருதினை குறுகிய காலத்தில் பெற்றவர்.

பிறகு  தமிழக மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று மீண்டும் IPS எழுதி 2014 ம் ஆண்டு வெற்றி பெற்று  தற்போது  தூத்துக்குடியில்  தன்னுடைய தமிழகமக்களுக்காக நேர்மையான பணியை செய்ய வந்த காவல் துறையின்  திரு.செல்வநாக ரத்தினம் I.P.S, தூத்துக்குடி மக்களுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம்.

பணத்திற்கும், அரசியல் அதிகாரத்திற்கும் விலைபோகாத மக்களின் காவலரான இவரின் நேர்மையான செயலில் இன்னல் ஏற்படுத்த வேண்டி, சிவப்புத் துண்டு ஆதரிக்கும்  விதமாக "சினிமா போலீஸ்" என்று கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள் ஊடக செய்தியாளர்கள்

துப்பாக்கி வைத்திருக்கும் அவர் எதற்காக திரும்பி ஓடினார் என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

1.இந்த கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் மாநாடு என்ற பெயரில் பள்ளி மாணவர்களையும், மாணவிகளையும் சிவப்பு உடை அணிவித்து மாலை 3மணி வெயிலில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர், இவ்வாறு சென்றால் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்சனைகள் என தெரிந்து, ASP ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்து விட்டார், அனுமதி பெறாமல் ஊர்வலமாக சென்றது தவறு. அனுமதி பெற்றதாக ஊடகத்தில் சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது.

2.வெறும் 30 மீட்டர் தொலைவிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை ஊர்வலத்திற்காக இடைமறித்ததோடு, தாமதமாக வழிவிட்டனர்.

3.ஊர்வலம் என்ற பெயரில் மாலை பள்ளி விடும் வேளையில் குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்ற பெற்றோரையும், ஆசிரியர்களையும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

4.அங்கே பாதுகாப்பில் ஈடுபட்ட SI யை கெட்ட வார்த்தைகளால் பேசியதோடு ஊர்வலத்தை நடுவழியில் நிறுத்தினர்.

சற்று நேரத்தில் அங்கு சென்ற ASP, ஏன் பிரச்சினை செய்கிறீர்கள் என விசாரித்துக் கொண்டிருந்தார்.

இதனால் ASP மற்றும் அவர்களுடன் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தண்ணீர் பாக்கெட்டுகளை வீசி மேலும் பிரச்சினையை உண்டு செய்தனர்.

5.பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி நகர  டெல்டா போலீஸ் வாகனத்தையும் சேதப்படுத்தி ASP Gunman யின் துப்பாக்கியை பறிக்க முயன்றனர் எனவே இவர்களின் மீது லேசான தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த 2000 பேர் கொண்ட கம்யூனிஸ்டுகள்,10 காவலர்களுடன் வந்த ASP மற்றும் படையினரை திருப்பி தாக்கி கொல்ல முயன்றனர்.

ஊர்வலத்தில் அனேகம் மாணவ மாணவிகளை அனுமதியின்றி அழைத்து வந்ததால் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடாமல் , அமைதியான முறையில் தன்னுடைய படையினரை அழைத்து திரும்பி சென்றார் ASP.

இதனை தீர விசாரிக்காமல் ஊடக செய்தியாளர்கள் கம்யூனிஸ்டு தாக்கியதால் ASP ஓடுகிறார் என தவறான தகவலை மக்களிடம் பரவ செய்துள்ளனர்.

மேலும்  கம்யூனிஸ்டுகள் வெறிகொண்டு  தாக்கியதில் 4 காவலர்களின் மண்டை உடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வடகிழக்கு மாகாண நக்சல்களை ஒடுக்கியவருக்கு உங்களை ஒடுக்குவது கடினமல்ல...

உண்மையறிந்தோர் இவரை பாராட்டுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.