17/05/2018

தொப்பை குறைய எளிய பயிற்சி...


தொப்பை குறைய நிறைய பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட பயிற்சி உடனே பலன் தரக்கூடியவை. அவற்றில் இதுவும் மிக முக்கியமானது. இந்த பயிற்சி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுக்கவும்.

கைகளை மேல் நோக்கி வளைக்காமல் நேராக துக்கவும். பின்னர் மெதுவாக முன்னால் எழுந்து உட்காரவும். கைகள் முன்னோக்கி படத்தில் காட்டிய படி நீட்டியே இருக்க வேண்டும். கால்களை மடக்க கூடாது. இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 25 முறை செய்யவும்.

பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முதல் 40 முறை செய்யலாம். எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க அதிகரிக்க பலன் விரைவில் கிடைப்பதை காணலாம்.

இந்த பயிற்சியை தொடர்ந்த 3 மாதம் செய்து வந்தால் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.