கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி திடுதிப்பன கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறேன் அதனால் இனிமேல் இந்திய ஒன்றியத்தில் 500 மற்றும் 1000ரூபாய் நோட்டுகள் செல்லாதென்று மோடி அறிவித்தார்.
ஆனால் இன்றுவரை எவ்வளவு கருப்பு பணத்தை கண்டு பிடித்திருக்கிறீர்களென்று கேட்டால் கேட்பவர்களை தேசத்துரோகிகளென்றும் பிரிவினைவாதிகளென்றும் சொல்கிறார்களே ஒழிய எவ்வளவு கருப்பு பணத்தை மீட்டோமென்று இதுவரை அரசும் சொல்லவில்லை ரிசர்வ் பேங்கும் சொல்லவில்லை.
அதுபோக பணமதிப்பிழப்பு (Demonetization) நடவடிக்கையால் ஒரு நன்மையும் ஏற்படவில்லையென்று பாராளுமன்ற நிலைகுழு கடந்த மூன்று நாளைக்கு முன்னால் அறிவித்து விட்டது. இதுபோதக்குறைக்கு தற்போது வருட வருடம் ரிசர்வ் வங்கி எடுக்கும் சிக்கன நடவடிக்கையால் மிச்சமாகும் பணத்தை (surplus money) அரசுக்கு அது கொடுக்கும். அதன்படி 2015 வருடம் 65,896 கோடி ரூபாயும் 2016 ஆம் வருடம் 65,876கோடியும் கொடுத்திருந்தது. ஆனால் 2017ஆம் ஆண்டு வெறும் 30,659 கோடியை தான் கொடுத்திருக்கிறது. இது 2016ஆம் ஆண்டு கொடுத்ததில் பாதியளவு தான்.
ஆனால் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது நிதியமைச்சர் இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி கொடுக்கும் தொகை 75,000கோடியாக இருக்குமென தெரிவித்திருந்தார். ஆனால் அதில் பாதியளவுகூட கிடைக்கவில்லை. இதற்கு சரியான காரணத்தை ரிசர்வ் வங்கியும் சொல்லவில்லை. ஆனால் பொருளாதார நிபுணர்கள் தீடிரென்று நாட்டில் புழக்கத்தில் இருந்த 86% பணத்தை அரசு செல்லாது என்ற அறிவித்தபடியால் 86% புதிய நோட்டுகளை அச்சடிக்கவேண்டிய சூழல் வந்தது அதனால் இந்த வருடம் செல்வு அதிகரித்து விட்டதென்று சொல்கிறார்கள்.
ஒருபக்கம் எதற்காக இந்த நடவடிகையை எடுக்கிறோமென்று மோடி அரசு சொன்னதோ அதுவும் நடக்கவில்லை. மறுபக்கம் இந்த நடவடிக்கையால் அரசுக்கு வரவேண்டிய பணம்கிடைக்கவில்லை. ஆகமொத்தம் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தவறான நடவடிக்கை என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆனால் இதையெல்லாம் மீறி இவர்கள் ஏன் இதை கொண்டுவந்தார்கள் என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது. அதாவது
இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் பல லட்சம் பேருக்கு மேல் வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது ஒரு புறமென்றால். நாட்டிலுள்ள 20 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 3.20லட்சம் கோடி அதிகரித்திருக்கிறது.
உதாரணமாக
அம்பானியின் சொத்துமதிப்பு 83,000கோடியும்,
லட்சமி மிட்டலின் சொத்துமதிப்பு 13,952கோடியும்
ஆசிம் பிரேம்ஜியின் சொத்துமதிப்பு 23,232கோடியும்
ஷிவ் நாடாரின் சொத்துமதிப்பு 9,088கோடியும் உயர்ந்திருந்திருக்கிறது.
ஆகவே இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் இந்த கார்ப்ரேட் மோடி அரசு என்ன சாதித்திருக்கிறதென்றால் பணக்காரர்களை மேலும் பணக்காரர் ஆக்கியிருக்கிறது. ஏழைகளை மேலும் பரம ஏழைகளாக மாற்றியிருக்கிறது.
இதுவே ’மேக் இன் இந்தியா’ திட்டம்
இதுவே ’தேசபக்தி’
இதுவே ’வளர்ச்சி நாயகன்’ மோடியின் வளர்ச்சி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.