60 பிஞ்சு குழந்தைகள் இரண்டே நாளில் இறந்துள்ளார்கள். தன் குழந்தையின் முதல் அழு குரல் கேட்க பத்து மாதம் சுமந்த தாயின் கனவும், ஓடியாடி உழைத்து தன் குடும்பம் தன் பிள்ளை பற்றிய தகப்பனின் கனவும் இந்த கேடுக்கெட்ட உத்திர பிரதேச அரசின் வக்கற்ற ஆட்சியில் கலைந்துவிட்டது.
என் முதல் பிள்ளையை கையில் ஏந்திய நொடி இன்றும் நான் வாழ்வில் மறக்க முடியாத முதல் தருணம். பெரும் துக்கத்தை சுமக்கும் அத்தனை பெற்றோருக்கும் எமது பக்கத்தின் அனுதாபங்கள்.
பாசகவிற்கு ஒன்று மட்டும் சொல்லி கொள்கிறோம் - சாதியோ , மதமோ வெறும் அடையாளமே அது தனி மனிதனின் அந்தரங்க நம்பிக்கை அதை பிடித்துக்கொண்டு அரசியல் செய்யும் கேடு கெட்டதனத்தை விட்டுவிட்டு மனிதாபிமானத்துடன் மக்களுக்கான அரசியல் செய்யுங்கள்.
Encephalitis என்ற நோயால் தான் குழந்தைகள் இறந்ததாகவும் இது வரை 25000 குழந்தைகள் அந்நோயால் இறந்துள்ளதாகவும். யோகி வந்து தான் அதனை தடுக்க தடுப்பூசி போடுவதாகவும் கேடுக்கெட்ட சில பாசக மனிதர்கள் சப்பைகட்டுகட்டுகிறார்கள். அடே ! Encephalitis மூளையை வீக்கமுற செய்யும் . ஆக்சிஜனை தடுத்து நிறுத்தும்.
அப்படிப்பட்ட நோய் இருக்கிறது என்றால் முதலில் செய்ய வேண்டியது மருத்துவமனையில் ஆக்சிஜன் எப்போதும் வைத்திருப்பது. தன் தொகுதியில் இந்த நோய் இருக்கு என்று தெரிந்து இருந்தால் ஆக்சிஜன் கையிருப்பு இருக்கா என்று சரிபார்த்து இருக்க வேண்டாமா ? குழந்தைகள் சாவிலும் பொய்யா ?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.