30/09/2021
சிறு கீரை மருத்துவம்...
சிறுகீரை வேரை இடித்துச் சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவுக்குக் குடித்து வந்தால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.
சிறுகீரையுடன் இஞ்சி , பூண்டு , பெருங்காயம் , மஞ்சள்தூள் ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்து சூப் வைத்துக் குடித்தால் தலைவலி குணமாகும்.
சிறுகீரை , பார்லி ஆகியவற்றோடு சீரகம் ( சிறிதளவு ) மற்றும் மஞ்சள்தூள் ( 4 சிட்டிகை ) சேர்த்துக் கொதிக்க வைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் வீக்கம், உடல் பருமன் குறையும்.
சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்துக் கொண்டால் சொரி , சிரங்கு , படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
சிறுகீரையுடன் சிறு பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் பித்த சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
சிறுகீரையோடு மிளகுத் தூள் , உப்பு சேர்த்துச் சமைத்து கொஞ்சம் நெய்யோடு சாதத்தில் போட்டுச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்...
ஏன் பொண்ணுங்கள பேபி னு பசங்க கூப்பிடுறாங்கனு தெரியுமா...?
ஏன் தெரியுமா எல்லோரும் பேபி, பேபின்னு செல்லமாக கூப்பிடுறாங்க...
ஏன்னா..
பே... னா பேயி
பி.. னா பிசாசு
இதை நேரடியா சொல்ல முடியாது..
அதனால தான் சுருக்கி பேபி ன்னு கூப்பிடுறாங்க...
ஏதோ என்னால முடிஞ்ச நல்ல விசியத்த பெண்ணுங்களுக்கு சொல்லிட்டேன்...
🤣🤣🤣🤣
நல்லா கவனிச்சா ஒண்ணு மட்டும் தெளிவா தெரியுது 😁😁
நம்ம எல்லாம் முட்டா பயலுகளா இருக்கோம் என்று..
ஒரு பக்கம் நம்ம எல்லாம் தாழ்த்தபட்டவங்க என்று சொல்லி சொல்லியே,
அதை சொல்கிறவர்கள் சொகுசாக இருக்கிறார்கள், அவனுங்க பேச்சை கேக்குறவங்க இன்னும் அதே நிலைமையில் தான் இருக்காங்க..
இன்னொரு பக்கம் நம்ம எல்லாம் ஆண்ட பரம்பரை என்று சொல்லி சொல்லியே,
அதை சொல்கிறவர்கள் சொகுசாக இருக்கிறார்கள், அவனுங்க பேச்சை கேக்குறவங்க இன்னும் அதே நிலைமையில் தான் இருக்காங்க..
இன்னும் நல்லா உற்று நோக்கி பார்த்தா, இந்த, தலித் நாங்க என்று சொல்ற கூட்டம் பெரும்பாலும் திராவிட கூட்டமா தான் இருக்கும்,
அதே போல இந்த ஆண்ட பரம்பரை என்று சொல்ற கூட்டம் பெரும்பாலும் ஆரிய கூட்டமா தான் இருக்கும்..
நாங்க தாழ்த்தப்பட்டவங்க என்று சொல்ற பிரபலங்கள் யாரும், திராவிடத்தை எதிர்த்து பேச மாட்டாங்க..
நாங்க ஆண்ட பரம்பரை என்று சொல்ற கூட்டம், ஆரியத்தை எதிர்த்து பேச மாட்டாங்க..
இவனுங்க நோக்கம் என்னான்னா, தமிழ் தேசியம் என்ற ஒன்று மக்கள்கிட்ட போய் சேரக்கூடாது என்பது மட்டும் தான்..
ஒருத்தன் தன்னை ஹிந்துனு சொல்லுவான், இன்னொருத்தன் தன்னை திராவிடன் என்று சொல்லுவான்..
ஆமா இதுல தமிழன் என்று ஒன்று வரவே இல்லயே 😁😁
இது இன வெறி பதிவு இல்ல..
ஒரு இனம் தன்னை தானே எவ்வாறு அழித்துக்கொண்டு இருக்கிறது என்பதற்கான உதாரணம்..
இன்னொரு முக்கியமான ஒன்று 👇👇
"திராவிடமும், ஆரியமும் ஒண்ணு 😁😁 அதை அறியாதவன் வாய்ல மண்ணு 🤣🤣"
உடனே நாங்க சீமான் ஆளுங்க என்று நினைக்க வேண்டாம் 😤😤
துத்திச்செடி...
துத்திச்செடியில் உள்ள பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இவை இரத்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கி நெஞ்சுக்கு இதம் தரும்..
மருத்துவக் குணங்கள்...
துத்திப்பூக்களை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ரத்தவாந்தி, ரத்தபேதி, சளியில் இரத்தம், சிறுநீரில் இரத்தம் ஆகியவற்றை குணமாக்கும். மேலும் ஆண்மையை பெருக்கும்..
ஆஸ்துமாநோய் குணமாக:
துத்திப்பூக்களை காம்பு நீக்கி நிழலில் உலர்த்தி சூரணம் தயார் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் சமஅளவு சர்க்கரை சேர்த்து அரைதேக்கரண்டி அளவு சூரணத்தை காலை, மாலை பாலில் கலந்து பருகினால் ஆஸ்துமா நோய் குணமாகும். மேலும் காசம் என்ற எலும்புருக்கி நோய் குணமாகும்..
மூலநோய் குணமாக:
ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வந்தால் மூலநோய் குணமாகும்.
ரத்தவாந்தி குணமாக:
அரைக் கைப்பிடியளவு துத்திப்பூக்களை ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதனை இறக்கி வடிகட்டி நான்கு மணிக்கு ஒருமுறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.
இத்தகைய நன்மைகள் வாய்ந்த இந்தப்பூக்களை நாம் நம் அன்றாட உணவுடன் கலந்து உண்போம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்...
கணவன் - மனைவிக்கு WHO வின் முக்கிய அறிவிப்பு...
திருமணமாகி 25 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வாழும் கணவன் மனைவிக்கு "கொரோனா தடுப்பூசி" போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென்று WHO சொல்லியுள்ளது...
ஏனென்றால் கணவனை எதிர்த்து தினமும் விடாமல் சண்டையிட்ட மனைவிக்கும், மனைவியை எதிர்த்து தினமும் வீட்டைவிட்டு ஓடாமல், வாய் பேசாமல், நிலையாய் வீட்டுக்குள்ளேயே எதிர்த்து நின்று சண்டை போட்டோ அல்லது சமாதானமாகவோ இருக்கும் கணவனுக்கும் தானாகவே தேவைக்கு அதிகமான எதிர்ப்பு சக்தி வந்திருக்குமாம்.., எனவே 25 வருடம் ஒன்றாக வாழ்ந்தவர்கள் பயப்பட வேண்டியதில்லை.
இப்படிக்கு,
WHO - World Husband Organisation.
WHO - World Housewife Organisation.
கொரோனா வைரஸ் விட கொடிய வைரஸ் இந்த திருமணமானவர்கள்...
ஆகையால்...
சிங்கிளிஸ் சா
சிரிச்சிக்கிட்டே இருங்க..,
சந்தோஷமா இருங்க... 😁😁😁
யார்ரா நீங்களாம்...
தும்மல் வந்தா, இரு கைகளையும் மூடிக்கொண்டு தும்மிட்டு...
பிறகு கைகளை கழுவிக்கொண்டு, மற்ற வேலைகளை பார்ப்போம்..
அதான் உலக வழக்கம் 😁😁
ஆனா இப்போ எல்லாம் மாஸ்க் போட்டுட்டு, தும்மல் வந்தாலும் மாஸ்க் போட்டுட்டே தும்மிட்டு அப்புடியே நடந்து போறாங்க..
நீங்க எல்லாம் யாருடா 😂😂
என்னை நேசித்தவர்கள் விட்ட சாபமா...
என்னை நேசித்த அன்பை
அன்று உதாசீனப்படுத்தினேன்...
நான் தேடி சென்ற அன்பு இன்று
என்னை அனாதையாக்கியது...
மறந்துவிடு என்று
நீ சொன்ன வார்த்தையை...
நான் மறந்துவிட்டேன்...
உன்னை நான் மறந்துவிட்டேன்
என்று சொல்லும் போதெல்லாம்...
வழக்கத்தைவிட அதிகமாக
உன்னை நினைக்கிறேனடி...
என் உறவு உனக்கு
கனவாக இருக்கலாம்...
உன் உறவு எனக்கு கனவாக
இல்லாமல் போய் விட்டதடி...
உன்னை
மறந்துவாழ முயல்கிறேன்...
இன்றுவரை முயற்சிகள்
மட்டுமே என் வாழ்வில்...
என்னை நேசித்த 13 இதயம்
விட்ட சாபமா என்று தெரியவில்லை...
நான் நேசித்தவள்
என்னை அனாதையாக்கினாள்...
சேலத்தில் ஆன்லைன் விபச்சாரம்...
சிக்கிய 200 பெண்கள்.. குடும்ப குத்துவிளக்குகள் To கல்லூரி மாணவிகள்...
29/09/2021
தமிழ் தேசியம் பேசுகிற எவரும் அம்பானி, அதானி , டாடா, பிர்லாக்கள் அல்ல... எல்லோரும் அன்றாடம் காய்ச்சிகள் தான்...
தமிழாட்டின் நிலப்பிரபுக்களும் தொழில் முதலைகளும் பிற மொழியினரே...
தமிழ் நிலப்பிரபுக்களும், தமிழ் முதலாளிகளும் இருந்தால் இந்நேரம் தமிழ்தேசியம் எழுச்சிப் பெற்றிருக்கும்...
தமிழ்நாட்டைப் பொருத்தவரை முதலாளிகளும் அவர்களே.. நிலப்பிரபுக்களும் அவர்களே.. தொழிற்சங்க விவசாயச் சங்க முதலாளிகளும் அவர்களே...
தமிழர்களிடம் இழப்பதற்கு தற்போது எதுவும் இல்லை..
பிறமொழியாளர்களின் பிடியில் இருந்து விடுதலை ஒன்றே எமது தமிழ் தேசியத்தின் இலக்கு...
ஒ... இதற்கு பெயர் தான் காதலா...
பூக்களே ஆடைகளாய்..
புன்னகையே அணிகலனாய்..
கூந்தல் அருவியை நீந்தவிட்டு..
குதிக்கும் மீன்களை கண்களாக்கி..
புருவம் இரண்டை வில்லாக்கி..
என் இதயத்தை இரண்டாக்கி..
என் கண்களோடு போர் செய்யும் இவள்
எந்த நாட்டு இளவரசி?
கன்னட தெலுங்கன் ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் இந்தி எதிர்ப்பும்...
தமிழர்களின் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்திய படைகளால் கொல்லப்பட்டாலும், இறுதியாக வென்றார்கள்..
தமிழின எழுச்சியை சகிக்காத திராவிடர் தந்தை கன்னட ராமசாமி வெறிபிடித்து சாவி இதழுக்கு அளித்த பேட்டி. (ஏப்ரல் 11,1965)..
சாவி : அந்த காலத்தில் இந்தியை எதிர்த்து போராட்டமெல்லாம் நடத்தினீர்கள். இப்போது சும்மா இருக்கிறீர்களே?
ஈ.வெ.ரா: அப்படியா. மன்னிக்க வேண்டும். இந்தி இப்போ எங்கே இருக்கிறது?
சாவி: இந்தி தான் ஆட்சிமொழியாக வந்துவிட்டதே?
ஈ.வெ.ரா: உனக்குத்தான் ஆங்கிலம் இருக்கிறதே. இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் பொதுவாக ஒரு ஆட்சிமொழி இருக்க வேண்டும் தானே? இந்திக்காரன் ஆங்கிலத்தை இழிவா நினைக்கிறானே, தமிழ்நாட்டுக்காரன் சொன்னால் நடக்குமா? அதுதான் மக்களாட்சியா?
சாவி : ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் இந்தி வரத்தானே போகிறது?
ஈ.வெ.ரா: அப்படியா? ஒருநாளைக்கு இல்லாவிட்டாலும் ஒருநாள் சாகத்தானே போகிறோம். அதற்காக இப்போதே கிணற்றில் விழுவானா? அப்படியே இந்தி வந்தால் உயிரோடு இருந்தால் எதிர்க்க போகிறவன் நான் தானே?
சாவி: இந்தி வந்தால் நாம் இரண்டாந்தர குடிமகனாகி விடுவோமே?
ஈ.வெ.ரா: இந்தி வந்தால் நீ இரண்டாந்தர குடிமகன் ஆகிவிடுவேன் என்றால், ஆங்கிலம் வந்தால் இந்திக்காரன் மூன்றாந்தர குடிமகனாகி விடுவேன் என்பானே?
சாவி : மும்மொழி திட்டப்படி நாம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமே?
ஈ.வெ.ரா: சரியா போச்சு. ஏதாவது ஒரு அயல்மொழி கற்கவேண்டும் என்றால் அது இந்தியாக இருந்துவிட்டு போகட்டுமே?
சாவி: இந்தி கற்க கட்டாயப்படுத்தினால்?
ஈ.வெ.ரா: அப்ப பார்த்துக்கலாமே?
சாவி: நடுவண் அரசில் இந்தி கற்க கட்டாயப்படுத்துகிறார்களே?
ஈ.வெ.ரா: படித்துவிட்டு போயேன். அவன் காசிலே இன்னொரு மொழியை தெரிந்து கொள்வது நல்லது தானே...
கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் இந்தி எதிர்ப்பும்...
காந்தி இந்தியா முழுவதும் பொது மொழியாக இந்தியை பயன்படுத்த வேண்டி.. நாடு முழுவதும் இந்தியை பயற்றுவிக்க இந்தி பிரச்சார சபாவினை தொடங்க வேண்டும் என்று காங்கிரசு கட்சியினருக்கு ஆணையிட..
அதையேற்று ஈரோட்டில் இந்தி பிரச்சார சாபிவினை தொடங்கி நடத்தியவர் தான் கன்னட ஈ.வெ.ராமாசாமி..
அங்கு பயின்றவர்கள் தான் பின்னாளில் தமிழகமெங்கும் இந்தியை பயிற்றுவிக்கும் பண்டிதர்களாக உருவெடுத்தனர்...
பிராணயாமம் - நாடி சுத்தி...
பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே. சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும்.
அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும். இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும். இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது.
நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும்.
இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும். இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய் வாய்ப்படுத்துகின்றன.
இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது.
மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன.
மூச்சுப் பயிற்சி...
எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் தெரியாது. இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். ஆசனங்களை முறையாக செய்வது நன்மை தரும்.
நம்முடைய சுவாசம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும். சுவாசத்தை சரியாக செய்யாதபோது, நம் செயல்களில் கவனம் செலுத்த முடியாது. தியானமும் இதன் அடிப்படையில் உருவானது தான். மூச்சுப் பயிற்சியை முறையாக செய்தால் சிறந்த பலன்கள் பெற முடியும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்தது. அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதிக்க முடிந்தது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதை பத்து முறையாக்கும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.
இதனை தியானத்தின் மூலம் பெறலாம். தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டால் புதிய அனுபவத்தை உணரலாம்.
மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடம் மாலையில் 5 நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும்...
இனி என் குடும்பத்தில் இருந்து என்னை தவிர வேறு யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் - உதயநிதி...
முதலில் தாத்தா சொன்னார்...
பிறகு அப்பா சொன்னார்...
இப்போது நீ சொல்கிறாய்...
நாளை உன் பிள்ளை சொல்வான்...
ஏன்னா திமுக என்பதே பிராடுகளின் குடும்ப கட்சி...
நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?
நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.
பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.
ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..
1.சாதிலிங்கம்.
2.மனோசிலை
3.காந்தம்
4.காரம்
5.கந்தகம்
6.பூரம்
7.வெள்ளை பாஷாணம்
8.கௌரி பாஷாணம்
9.தொட்டி பாஷாணம்
இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன. நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.
தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.
நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.
பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.
இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கினார்.
இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்து விடும்...
சுடு காட்டு அட்டனென்ஸ்...
ஜகன் மோகினி - எஸ் சார்
குட்டி சாத்தான் - எஸ் சார்
பிசாசு - எஸ் சார்
ரத்தக் காட்டெரி - ?
சார் அது என் பதிவு
படிச்சிட்டு இருக்கு சார்...
கீகீகீகீகீ...
😁😁😁
28/09/2021
ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் அற்புத மருந்து...
உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது.
பொதுவாக ஹோட்டல் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும்.
இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் போது, உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்கக்கூடும். என்ன தான் கொலஸ்ட்ரால் உடலில் சில முக்கிய பணிகளை செய்து வந்தாலும், அதன் அளவு அதிகமாகும் போது, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களுக்கு உள்ளாக்கும்.
இங்கு கொலஸ்ட்ராலைக் குறைக்க மருத்துவர்களே பரிந்துரைக்கும் ஓர் அற்புத நாட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தயாரித்து, அவற்றை உட்கொண்டு வர, விரைவில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
விதை இல்லாத பேரிச்சம் பழம் - 3-4.
இஞ்சி சாறு- 2 டீஸ்பூன்.
பேரிச்சம் பழம்..
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.
இஞ்சி..
இஞ்சியில் உள்ள மருத்துவ குணத்தால், கொலஸ்ட்ரால் அளவு வேகமாக குறையும். ஏனெனில் இதில் உள்ள குறிப்பிட்ட அமிலம் உடலில் தேங்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்துவிடும்.
செய்முறை:
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் முறை:
தயாரித்து வைத்துள்ள கலவையை தினமும் இரவில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். இப்படி 2 மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் முழுமையாக கரைந்துவிடும்.
குறிப்பு : இந்த இயற்கை மருந்தை தொடர்ந்து உட்கொண்டு, அதோடு சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால், அதிகப்படியான கொஸ்ட்ரால் குறையும். முக்கியமாக இந்த மருந்தை உட்கொண்டு வரும் போது, உணவுகளில் எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்...
பெரியாரை விலக்கிவிட்டு தமிழ்த் தேசியம் பேசுவது பருப்பு இல்லாமல் சாம்பார் வைப்பது - கம்யூனிஸ்ட் அருணன் கன்னடன்...
யார்ரா நீங்க.. நானே என்னை கன்னட பலிஜா நாயுடு என்றுதான் சொல்லிட்டு சுத்திக்கிட்டு இருந்தேன் - ஈ.வெ.ரா...
தமிழர்கள் நாங்க ஏன்டா நாயே கன்னட தெலுங்கனை தமிழனா ஏற்கனும்...
பெரியாரை தமிழ் தேசியத்தில் சேர்த்து பேசுவம்.. சாம்பாரில் சாணியை சேர்ப்பதும் ஒண்ணு தான்...
கணவன் Vs மனைவி...
ஹலோ... ஹலோ... காவேரி...
ஆமா காவேரிதான் ... சொல்லுங்க...?
காவேரி... எங்க இருக்கே...?
வீட்லதான்..!?
உனக்கு ஒன்னும் இல்லையே....
ஏங்க... ஆபிஸ் போகும் போது நல்லாத்தானே போனிங்க ஆபிஸ்ல என்ன ஆச்சி..
அதெல்லாம் இருக்கட்டும் வீட்லத்தானே இருக்க...!?
ஆமாங்க... ஏன் பதட்டமாவே பேசுறீங்க...!?
ப்ச்... இப்ப என்ன பண்ணிட்டிருக்கே...!?
டிவி சீரியல் பாத்திட்டிருக்கேன்...
போலிஸ் எதுவும் வரலைல...!?
போலிஸா... அவங்க எதுக்கு நம்ம வீட்டுக்கு வரப்போறாங்க... நீங்க தப்பு கிப்பு எதுவும் பண்ணிட்டீங்களா...!?
அதெல்லாம் ஒன்னுமில்ல காவேரி நீ வீட்ல தான இருக்கே போலிஸ் உன்ன அரஸ்ட் பண்ணலைல.... ?
அரெஸ்ட்டா அதுவும் என்னையா...!?
ஆமா...
ஏங்க... எனக்கு தலையே வெடிச்சிடும் போல என்னாங்க மேட்டரு... எங்கயாவது விழுந்து கிழுந்து உங்களுக்கு மூளை சேதாரமாச்சா...!?
அதெல்லாம் ஒன்னுமில்ல காவேரி போலிஸ் உம் மேல கை வைக்கலைல அது போதும்...
ஏஏஏ...ஏங்க....
டென்ஷன் ஆகாத காவேரி... செய்தி சேனல்ல ஒரு பிரேக்கிங் நியூஸ் ஓடிட்டிருக்கு அத பாத்து பயந்துட்டேன்...
அப்படி என்னங்க பிரேக்கிங் நியூசு...
டிவிக்கு முன்னாடி தானே ஒக்காந்திருக்க நீயே செய்தி சேனல போட்டுப் பாரேன்...
ஆங்... போட்டுட்டேன்... ஏதோ... சென்னையில் பெண் ரவுடி கைதுன்னு ஓடுது...
ஆமா அதேதான்... போலிஸ் ரொம்ப நாள் வாட்ச் பண்ணி இன்னைக்கு ஸ்கெட்ச் போட்டு உன்னய தூக்கிட்டாங்களோன்னு பயந்துட்டேன்...
யோவ்....
நிஜமாவே போலிஸ் உம் மேல கை வைக்கலத்தானே...!?
யோவ்... நீ எங்க போனாலும் கடேசியா வீட்டுக்குத்தான வரனும் அப்ப உன்ன வச்சிக்கிறேன்...
போன்லயே ரௌடித்தனமா பேபி...
🤣🤣🤣🤣
தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் - இந்திய தரகர் பாஜக மோடி...
இனி வர காலத்துல பெரும்பாலும் எல்லாரும் மெடிக்கல் வைப்பாங்க..
இனி அதான் பெரும் வியாபாரம்..
எல்லோர் மனதிலும் தான் ஒரு நோயாளி அல்லது நோயாளியா இருப்போமா என்ற பெரும் ஒரு விதை விதைக்கப்பட போகிறது..
அதன் பிறகு உங்கள் உடலில் சிறிய சிப் பொறுத்தப்படும்...
சிந்தனை உள்ளவன் பிழைத்து கொள்வான்...
ஆட்டமே இனி தான் ஆரம்பிக்க போகிறது😁
ஐயா ஜாலி, 2022 இன்னும் நல்லா இருக்கும் 🤣
திராவிடன் யார்.?
1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை, கன்னட ஈ.வெ.ரா திராவிடர் கழகம் என்று மாற்ற முயன்ற போது அதன் பெயரை "தமிழர் கழகம்" என்று மாற்றச்சொல்லி கி.ஆ.பெ விசுவநாதன் உள்ளிட்ட தலைவர்கள் முயன்றனர்.
ஆனால் ஈ.வ.ரா விடாப்படியாக மறுத்து திராவிடர் கழகம் என்றே பெயர் மாற்றினார்.
அதற்கு அவர் சொன்ன காரணம் தமிழர் கழகம் என்று சொன்னால் இங்கே உள்ள பார்ப்பனரும்..
நாங்களும் இங்கேயே பிறந்து வளர்ந்து தமிழ்தான் பேசி வாழ்ந்து வருகிறோம்..
அதனால் நாங்களும் தமிழர்கள்தான் என்று வந்துவிடுவார்கள்.
(இதற்கு பெயர் என்ன வெறி)
ஆனால் திராவிடன் என்று சொன்னால் எந்த பார்ப்பனரும் நான் திராவிடன் என்று உள்ளே வரமாட்டார் என்று காரணம் சொன்னார்.
( அதாவது இங்கேயே பிறந்த வளர்ந்த தமிழ் பேசும் பார்ப்பான் உள்ளே வரக்கூடாது.. ஆனால் இங்கே பிறந்து வளர்ந்து பிறமொழி பேசும் தெலுங்கரோ , கன்னடரோ, மலையாளியோ ஆண்டால் பரவாயில்லை.. அவர்களிடம் தமிழன் அடிமையானாலும் பரவாயில்லை )
ஆனால் உண்மையில் திராவிடர் என்ற சொல் பார்ப்பனர் அல்லாதவரை குறிக்கும் சொல் அல்ல.
வட இந்தியாவில் வாழும் பார்ப்பனர்கள் தென்னிந்தியாவில் ஐந்து நிலப்பகுதியில் வாழும் பார்ப்பனர்களை குறிக்கவே திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தினர்.
தென்னிந்தியாவில் வாழும் சில பார்ப்பனர்களின் குடும்ப பெயரிலேயே திராவிடன் என்று பெயர் வழங்கப்பட்டது.
கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் விடம் உங்கள் பெயரின் பின்னால் திராவிட் என்று வருகிறதே என்று கேட்டதற்கு நாங்கள். கும்பகோணத்தை சேர்ந்த பிரமாணர் குடும்பம் என்று பதிலளித்தார்.
சனாதான தர்மத்தை மறுபரிபாலனம் செய்த ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லகரி என்ற நூலில் திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று குறிப்பிடுகிறார்.
ஆதிசங்கரர் கேரளாவில் பிறந்த பிராமணர்.
திராவிடம் என்ற பெயரை பயன்படுத்திய கால்டுவெல்லும் தான் திராவிடம் என்ற சொல்லை சம்ஸருத நூலான ஆரியர்களின் மனுஸ்மிருதியிலிருந்து எடுத்தேன் என்று கூறியுள்ளார்.
ஆரியத்தையையும., மனுதர்மத்தையும் கடுமையாக எதிர்க்கும் அவையெல்லாம் பொய் புரட்டு கட்டுக்கதைகள் என்று சொல்லும் திராவிட அறிவு ஜீவிகள் தங்களது இயக்கத்திற்கு பெயரை அதே மனுஸ்மிருதியிருந்து எடுத்து பயன்படுத்துகிறார்கள்.
ஒரே ஒரு சங்கத்தமிழ் இலக்கியத்தில் கூட திராவிடம் என்ற சொல் பயன்படுத்தியதில்லை.
மனுஸ்மிருதி நம்மையெல்லாம் திராவிடன் என்று இழிவாக சொல்கிறது. அதையே நமது பெருமைக்குரிய அடையாளமாக மாற்றவே நாம் திராவிடம், திராவிடன் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம் என்கிறார் சுப.வீ..
அதே மனுஸ்மிருதி தான் நம்மையெல்லாம் சூத்திரன் என்கிறது. அதை தூக்கி போடுங்கள் என்று சொல்வதும் இதே திராவிட அறிவு ஜீவிகள் தான்.
இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்.
மனுஸ்மிருதியில் அவன் கொடுத்த சூத்திரப்பட்டம் எவ்வுளவு இழிவானதோ..
அதை விட இழிவானது அவன் சொன்ன திராவிடன் என்ற சொல்லை பயன்படுத்தி இன்னும் தமிழர்கள் தங்களை தாங்களே திராவிடன் என்று சொல்லிக் கொள்வது..
ஆக திராவிடர் என்றால் அதில் பார்ப்பானர்கள் வரமாட்டார்கள் என்று சொல்லி..
தமிழர்களுடைய உண்மையான இனப்பெயரை அழித்து நீ திராவிடன் என்று ஒரு பொய்யான மாயையை திணித்து தமிழர்களின் தொன் பெருமையை அழித்த ஒரு வரலாற்று மோசடியை செய்தவர் ஈ.வெ.ராமசாமி...
ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...
கவிதையாக நீ மாறினாய்
கவிஞனாக என்னை மாற்றினாய்..
கவிதையை நேசித்த கவிதையே
இந்த கவிஞனையும்
மீண்டும் ஒரு நாள்
தேடி வருவாய் என்று...
காத்திருந்தேன்...
காத்திருக்கிறேன்...
காத்துக் கொண்டே இருப்பேன்...
ஜலதோஷம், மூக்கடைப்பா....? இதோ பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்...
உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோஷம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது. அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது.
இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லையா... கவலையே வேண்டாம். மிக மிக உடனடியாக ஜலதோஷத்தை குணப்படுத்தும் மருந்துகள் இதோ, உங்களுக்காக...
முதலில் ஜலதோஷம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது,
தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது.
ஜலதோஷம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோஷம் வரப்போகிறது என்பதை கண்டு பிடிக்கலாம்.
இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோஷம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.
மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு...
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோஷம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது. தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்று விரிவாகத் தெரியப்படுத்துகிறோம்.
மஞ்சளையும், வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பையும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் மருந்து கிடைக்கும்.
மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும்..
பூசிய பிறகு நன்றாக உறக்கம் வரும்.. உறங்கி எழுந்த பிறகு பாருங்கள் உங்களுக்கு ஜலதோஷம் சளி பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கும்..
இந்த மருந்தை இரவு படுக்கப் போகும் முன்னும் பூசிவிட்டு படுக்கலாம், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்க விளைவுகளும் இல்லை...
மூட்டு வலி போக்கும் கல்தாமரை...
முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் ஆட்டிப் படைக்கும் நோய்களில் பெரும்பங்கை வகிப்பது ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி.
அதிகரித்த அடுக்குமாடி குடியிருப்புகளும், சொகுசு வாழ்க்கை முறைகளும், நடை மற்றும் உடற்பயிற்சியின்மையும் கால், இடுப்பு மற்றும் கழுத்து எலும்புகள் மற்றும் தசைப் பகுதிகளில் தேய்மானம் மற்றும் இறுக்கத்தை உண்டாக்குகின்றன. பிறந்தது முதல் அங்குமிங்கும் பலவாறு சுழன்று அசைந்துக் கொண்டிருக்கும் மூட்டுகளுக்கு போதிய பயிற்சி தராவிட்டாலும் பரவாயில்லை... உடல் எடை கூடாமலாவது பார்த்துக் கொள்ள வேண்டும். சராசரி உடல் எடையை மட்டுமே தாங்கக்கூடிய அளவுக்கு எலும்புகள் வன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. உடல் எடை அதிகரிக்கும் பொழுது எலும்புகளின் இணைப்புகள் தங்கள் வன்மையை இழக்கின்றன. இதனால் மூட்டுகளில் வலியும், நடக்கும் பொழுது கலுக், கலுக் என சத்தமும் உண்டாகின்றன. ஆஸ்டியோ ஆர்தரைட்டிஸ் என்று சொல்லப்படும் இந்த கீல்வாயுவானது எலும்பு இணைப்புகளை அதிகம் பாதிக்கிறது.
நமது உடலிலுள்ள ஒவ்வொரு எலும்புகளும் ஒவ்வொரு விதமாக அசைந்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அசையும் எலும்புகளானது இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் மேலும், கீழும், முன்னும், பின்னும், அங்குமிங்கும் என சதா அசைந்து கொண்டும், சுற்றிக் கொண்டுமிருக்கும் நம்முடைய கழுத்து, தோள், இடுப்பு, தொடை, முழங்கால், கணுக்கால் மற்றும் விரல் மூட்டுகளை வாழ்நாள் முழுவதும் சீராக இயங்க வைக்கின்றன. ஆனால் உடல் எடை மற்றும் வயது அதிகரிக்கும் பொழுது எலும்பு, எலும்பை பிடித்திருக்கும் தசைநார் மற்றும் பந்தங்கள் பலகீனமடைவதால் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி உயவுத்தன்மையை இழந்து, தங்கள் செயல்பாட்டையும் இழக்கின்றன. இந்நிலையில் எலும்புகளின் இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் பயிற்சிகள் செய்யவேண்டும் அல்லது நோயின் தன்மைக்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும். இல்லாவிடில் எலும்பு சந்திகளில் வலி, வீக்கம், குத்தல், குடைச்சல், எரிச்சல், இறுக்கம், சிவப்பு என பல மாற்றங்கள் உண்டாகின்றன.
போதிய நடைப்பயிற்சியின்மை, அதிகரித்த உடல் பருமன், கொழுப்புச்சத்து, ஒரே இடத்தில் தொடர்ந்து நின்றுக்கொண்டிருத்தல், வைட்டமின்கள் நிறைந்த கீரை, காய்கறிகளை தவிர்த்தல், இரும்பு, சுண்ணாம்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களின் குறைபாடு, மூட்டு இணைப்புகளில் கிருமித்தொற்று, பிற மருந்துகளின் ஒவ்வாமை, முதுமை, பரம்பரை போன்ற பல காரணங்களால் ஆர்த்ரைட்டிஸ் உண்டாகிறது. பெரும்பாலும் நடுத்தர மற்றும் முதிய வயதினரே கீல்வாயுவால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சமீபகாலமாக குழந்தைகள் கூட மூட்டுவலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூட்டுகளில் வலியுண்டாகும் பொழுது ஆரம்ப நிலையிலேயே நாம் மூட்டுவலியின் காரணங்களை அறிந்து சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வலி நிவாரண மாத்திரைகளை உண்பதால் நோய்க்கான காரணம் மறைக்கப்படுவதுடன், நோய் முற்றி பல பக்கவிளைவுகளும் உண்டாக ஆரம்பிக்கின்றன. சமவெளிப்பகுதிகளில் வசிப்பவர்களை விட மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மூட்டுவலிக்கு அதிகம் ஆளாகின்றனர். மூட்டுகளில் தோன்றும் வலியை நீக்கி, வீக்கம் மற்றும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்தி, மூட்டுகளுக்கு வலுவைக் கொடுக்கக் கூடிய மலைப்பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படும் அற்புத மூலிகை கல்தாமரை என்று அழைக்கப்படும் மலைத்தாமரையாகும்.
Smilax zeylanica என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த கல்தாமரைச் செடிகள் அழகுக்காகவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இதன் வேர் மற்றும் இலைகளில் டையோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளிலுள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
இரண்டு அல்லது மூன்று கல்தாமரை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து சாப்பிட மூட்டுவலி குறையும். தொடர்ந்து 15 முதல் 30 நாட்கள் இதனை சாப்பிடலாம். இதன் இலைகளை லேசாக வெதுப்பி, இளஞ்சூட்டில் மூட்டுகளில் பற்று அல்லது ஒற்றடமிட வீக்கம் வற்றும். கல்தாமரை வேரை கசாயம் செய்து குடிக்க பால்வினை நோய்களில் ஏற்படும் மூட்டுவலி நீங்கும்...
கன்னட ஈ.வெ. ராமசாமி மூவர்ணக் கொடியைக் கொளுத்தினாரா?
சில வந்தேறி திராவிட பயல்கள் அவர்களது நைனா ஈ.வே.ரா தேசியக் கொடியைக் கொளுத்தினார் என்றும்.. இந்திய வரைபடத்தில் தமிழகத்தை தவிர பிற பகுதிகளை கொளுத்தினார் என்றும் இரண்டு பொய்களைக் கூறுவார்கள்...
ஈ.வே.ரா இந்தியாவின் தேசியக்கொடி அல்லது வரைபடத்தைக் கொளுத்தியதற்கு எந்த சான்றுமே கிடையாது.
அவர் தேசியக்கொடி மீது மதிப்பு வைத்திருந்தார் என்பதற்கு ஒரு சான்று உண்டு.
1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை கடுமையாக விமர்சித்தும், அவர்களை சுட்டுத்தள்ள வேண்டுமென கொலை வெறியுடனும் ஈ.வே.ராமசாமி தொடர்ந்து எழுதிய காலத்தில்...
திருவல்லிக்கேணி பெரிய தெரு, வாலாஜா ரோடு சாலை ஓரங்களில் குடியரசு தினத்திற்காக கட்டப்பட்ட தேசியக் கொடி தோரணங்களை
மாணவர்கள் அறுத்து சொக்கப்பனை போல் கொளுத்தி அவமதித்திருக்கின்றனர்.
(7 கல்லூரிகள் மாணவர்கள் கோட்டைக்கு ஊர்வலம் சென்று அமைச்சர் வெங்கட்ராமனை சந்தித்து மகஜர் கொடுக்க புறப்பட்ட வழியில்) என்று எழுதியுள்ளார். (விடுதலை, 13.02.1965).
இதிலிருந்து அவர் தேசியக்கொடியை எரித்தவரில்லை என்பது தெளிவாகிறது...
27/09/2021
தெலுங்கர் திருமா வின் ஜாதி அரசியலை தோல் உரித்த ஐயா பெ.மணியரசன்...
தமிழ் தேசியத்தை சாடும் திருமா.. திராவிட ஜாதி அரசியலை சாட மாட்டார்.
தமிழ்தேசியம் மட்டுமே தமிழர்களை ஒன்றிணைக்கும்..
தமிழர்கள் ஜாதிக்கு அப்பார்பட்டு இனணந்து விட்டால் திருமா போன்றோர்கள் கட்சியை கலைக்க வேண்டிய நிலை வந்துவிடும்...
ஆகையால் தான் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தெலுங்கர் திருமா எனும் ஜாதி வியாபாரி...
பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்...
படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.
கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.
பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.
மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.
மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.
இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.
இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்
பனைஓலை பாய் பலசரக்கு வெல்லமண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.
மூங்கில்நார் பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புசுவர், மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.
நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்...
திருட்டு திராவிடர் ஓசி சோறு தி.க. வீரமணி யின் பகுத்தறிவு...
நம்புங்க நாங்க பார்ப்பனியத்திற்கு மூட நம்பிக்கைக்கு எதிரானவங்க...
திராவிடர் கழகம் கட்டபோகும் அலுவலகத்திற்கு பூமிபூஜை 😂
இராம்சாமி அடிவருடிகள்...
எல்லாமே அதிர்வு தான்...
நாம் எல்லோரும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறோம்.
இந்த மொத்த பிரபஞ்சமும் ஆற்றலால் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.
நம் ஐம்புலன்களும் அதிர்வுகளாகவே அனைத்தையும் உணர்கிறது.
கண் காட்சிகளின் அதிர்வுகளையே கிரகிக்கிறது.
காது சப்தத்தின் அதிர்வுகளையே கேட்கிறது.
மூக்கு வாசனைகளை அதிர்வுகளாகவே நுகர்கிறது.
வாய் சுவைகளை அதிர்வுகளாகவே சுவைக்கிறது.
மெய் ஸ்பரிசத்தை அதிர்வுகளாகவே உணர்கிறது. ஆம் உண்மையில் நாம் யாரையும் தொடவே முடியாது.
அணுக்களின் விலக்குவிசைதான் நாம் தொடுவதாக நம்ப வைக்கிறது. எல்லாம் அடிமட்டத்தில் ஆற்றலின் வெவ்வேறு வகையான அதிர்வுகள்தான்.
நாம் எல்லோரும் Frequency generator தான். சுபக்கிரகங்களின் கதிர்கள் நம் உடலை ஊடுருவி செல்லும் போது உணர்வுகள் சுகமாகவும்.
அசுப கிரகங்களின் கதிர்கள் நம் உடலை ஊடுருவும் போது அசௌகிரயமாகவும் உணர்கிறோம்.
இப்படியான வெவ்வேறு வகையான உணர்வுகள் வெவ்வேறு விதமான எண்ணங்களை நம் மனதில் தோற்று விக்கிறது.
வலுவான உணர்வுகள் புறமனத்தில் ஆழமான எண்ணங்களை உருவாக்கி புறமனத்தை நம்ப வைத்து ஆழ்மனத்திற்கு கட்டளைகளாக பிறப்பிக்கப்படுகின்றன.
பின் பகுத்தறிவில்லாத ஆழ்மனம் எஜமானனின் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றி கொடுக்கிறது.
ஆக நம் உணர்வுகள் தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது என்பது புரியும். நாம் உணர்வுகளை கவனிக்க தொடங்கி,
எண்ணங்களின் வலிமையால் சுகமான உணர்வு நிலையிலேயே வைத்தோமானால் எந்த ஒரு எதிர்மறை விடயமும் உங்கள் வாழ்வில் அரங்கேறாது.
நாம் தேவையை நினைக்க தொடங்கிய அடுத்த கனமே விமானம் புறப்பட்டு விட்டதாக அர்த்தம். நம் சிந்தனை எல்லாம் சேர வேண்டிய இடத்திற்கு விமானம் சென்ற பிறகு என்னென்ன செய்ய போகிறோம் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும்.
அதைவிடுத்து விமானம் போய் சேருமா? வழியிலே விபத்தாகி விடுமா என்பது போன்று சிந்திக்கவே கூடாது.
ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைந்து விட்டோம் என்று நம்பி அடைந்த பிறகு என்னன்ன செய்ய போகிறோம் என்பதை மட்டும் அடிக்கடி மனத்திரையில் ஓட விடுங்கள்.
அந்த இலக்கை நீங்கள் 100 சதவீதம் நிச்சயமாக அடைவீர்கள்...
கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் அவர்களின் திருமணத்தை எதிர்த்து திராவிட நாடு பத்திரிக்கையில் [03.07.1949] தெலுங்கர் அண்ணாத்துரை வரைந்த கட்டுரை இது...
சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 -வத ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார்.
கடந்த ஐந்தாறு அண்டுகளாகப் பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டிலே தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார். இந்தத் திருமதிக்கு வயது 26. அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது ஈடுபட நேரிட்டிருக்கிறது.
சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர்.
பெரியாருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.
தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய், ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள் இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும். திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வதுகூடச் சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூடக் கேட்டுத்திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான் தோன்றமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.
நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத அளவு மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம். அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ”பக்தர்கள் அவதார புருஷர்களை”ப் பின்பற்றி வந்தது போலவேதான். இதற்குக் காரணம், நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை, பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால்தான்.
வயத ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச் சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர் பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார், அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூ தெய்தி வந்தோம் இறுமாந்திருந்தோம்.
திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை. பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர்.
காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக் காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.
பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக சொத்துக்கு வாரிசுயில்லை என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் கொடுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார்.
பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார். அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார். தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் உருவெடுத்தது. ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர்.
என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே – பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா – காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை. இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும்..
ஏம்பா! திராவிடர் கழகம்! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே! என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே. சீர்திருத்தம் இயக்கம் இது.
இதோ பாரய்யா, சீர்திருத்தம் 71-க்கும் 26-க்கும் திருமணம் என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே.
கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு! என்று பரிகாசம் பேசுகிறார்களே.
ஊருக்குத்தானய்யா உபதேசம்! என்று இடித்துரைக்கிறார்களே.
எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை. என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே!
ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே! பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே, இதோ உங்கள் தலைவர் துறவிக் கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே- என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில் துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் – கதறிக்கொண்டேயிருக்கிறோம் – கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது..
பொருந்தாத் திருமணம்! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.
முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல். வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண! வேதனைப்படுகிறோம் தனிமையிலே! ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால். பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.
இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார்.
எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்? உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு?
எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 இதை மறுக்கமுடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே! இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்து மறுக்க முடியாதே! ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்! கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்டும் கேள்விகள் இல்லை!
இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும் கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது, பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டியத்தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’ புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது?
பெரியாரின் உயிரைப் பாதுகாக்க, உடலைப் பாதுகாக்க தக்கவிதமான உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில் ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.
பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு. அவர்கள் யாரும் தேவைப்படவில்லை! மணியம்மை வர நேரிட்டது! புயல் நுழைகிறது என்று கருதியவன் நான். புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தோண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.
அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது. அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் – பதிவுத் திருமணம்!! இந்த நிலையை யார்த்தான் எந்தக் காரணம் கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும். நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்! பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.
சரியா? முறையா? என்று உலகம் கேட்கிறது.
அன்புள்ள
சி. என். அண்ணாதுரை
திராவிட நாடு : 3-7-49...
ஒ... இதற்கு பெயர் தான் காதலா...
உனக்காக அழுத நாட்கள் கடந்து
இப்போது உன்னால் அழுகிறேன்...
ஆசைப்பட்டதற்காக அன்றும்,
அதிகமாக...
அன்பு வைத்ததற்காக இன்றும்
அழுகிறேன்..
என் வாழ்க்கையின் அத்தியாமே
அழுகை தான் போல...
ஆண் கொசு Vs பெண் கொசு...
ஆண் கொசு : டார்லிங் உனக்காக
ஒரு சிங்கத்தையே வேட்டையாடி கொண்டு வருவேன்..
பெண் கொசு : ஓகே ஓகே போய் தூங்கு..
ஆண் கொசு : கண்ணே ! உனக்காக ஒரு யானையவே அடிச்சு கொண்டு வந்து கொடுப்பேன்...
பெண் கொசு : சரி .. சரி ... மொதல்ல தூங்க போ டார்லிங்...
ஆண் கொசு : உன்ன நா மெர்சிடஸ் கார்ல உட்கார வெச்சு பாரீஸ் ரோட்ல சுத்தி காண்பிப்பேன்...
பெண் கொசு : என் மேல உனக்கு எவ்வளவு லவ் னு புரியுது டியர்.... காலையில பேசலாம் போய் தூங்கு...
ஆண் கொசு : நீ என்ன நம்ப மாட்டியா ..?
நாளைக்கு உனக்கு 100 கிராம்ல தங்க செயின் போடுவேன் பாரு..
..
..
..
..
இப்போது ஆண் கொசுவை, ஓங்கி அறைந்த பெண் கொசு...
..
..
..
போதையில தூங்குறவனை,
கடிச்சுட்டு,
இங்க வந்து உளறாதேனு
எத்தன தடவ சொல்லி இருக்குறேன்..
😄😄😄😄