70களின் இறுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒப்பந்த தொழிலாளராக மாதம் 300 ரூபாய் ஊதியத்திற்கு பணி செய்த இந்த ஜெகத்ரட்சகன் அவர்களின் சொத்து மதிப்பு சுமார் 50,000 கோடி என்று அண்ணாமலை சொல்லி இருந்தார் அதாவது அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் அதிகம் சொத்து இருப்பது இவருக்கு தான்.
திமுகவின் ஆழ்வார், திமுகவின் ஏடிஎம் மிஷின் என்று வர்ணிக்கப்படும் இவருக்கு உண்மையிலேயே 1 லட்சம் கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது அதற்கு ஒரு உதாரணம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் 26 ஆயிரம் கோடிக்கு இலங்கையில் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு சொந்தமாக இரண்டு பல்கலைக்கழகங்கள், நான்கு மருத்துவக் கல்லூரிகள், 3 பல் மருத்துவக் கல்லூரிகள், சுமார் 40 பொறியியல் , வேளாண்மை,ஆசிரியர் பயிற்சி, பாலிடெக்னிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது.
பத்துக்கு மேற்பட்ட ஐந்து நட்சத்திர விடுதிகள் உள்ளது, மூன்று மது தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது, இரண்டு நிலக்கரி சுரங்கங்கள் உள்ளது, நான்கு மின்சார உற்பத்தி நிலையங்கள் உள்ளது, இரண்டு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது, இரண்டு மருத்துவமனை உள்ளது, 11 சிறிய நிறுவனங்கள் உள்ளது, ஒரு திருமண மண்டபம் உள்ளது.
இவ்வளவு நிறுவனங்களில் சோதனை நடத்த வேண்டும் என்றால் 10 ஆண்டுகள் ஆகும்...