14/04/2017

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா வின் கடன் தள்ளுபடி – விவசாயிகளும்.. கார்ப்பரேட்டுகளும்...


தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வராக் கடன் ரூ 6.8 லட்ச கோடி..

அதில் 70% பெருநிறுவன கடன், வெறும் 1% விவசாயக் கடன்.

2012-2015-ல் ரூ 1.14 லட்சம் கோடி பெருநிறுவன கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ரூ 4 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்படலாம்..

பூஷன் ஸ்டீல் வராக் கடன் ரூ 44,478 கோடி, பஞ்சாப் மாநில மொத்த விவசாய வரா கடன் மதிப்பீடு ரூ 36,000 கோடி.

ஜிண்டால் ஸ்டீல் & பவர் வரா கடன் ரூ 44,140 கோடி; இது உத்தர் பிரதேச மாநிலத்தின் விவசாய வராக் கடன் மதிப்பீட்டை விட அதிகம்.

மகாராஷ்டிரா மாநிலம் ரூ.30,500 கோடி விவசாய கடன் தள்ளுபடியை கோருகிறது. இது எஸ்ஸார் ஸ்டீல் வராக் கடன் ரூ. 34,929 கோடியை விடக் குறைவு.

பத்திரிகைகளில் வாராக் கடன் தள்ளுபடி எவ்வாறு தொழிற் சூழலுக்கு முதலீடுகளுக்கு நல்லது என்று எத்தனை கட்டுரைகள் இருக்கின்றன என்று தேடிப்பாருங்கள்.

முதலீட்டாளர்கள் கடன் தள்ளு படிகளை நல்ல அறிகுறிகளாக பார்த்து அதன் மூலம் முதலீடுகளைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் என்று மட்டும் நூற்றுக் கணக்கான கட்டுரைகள் இருக்கும்.

வேளாண் கடன் தள்ளுபடி நியாயமில்லாதது என்று இதே லாபிகள் கட்டுரைகள் எழுதித் தள்ளுகின்றன...

விவசாயிகளுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு...


வரும் செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 18, 2017) மாலை 4 மணி முதல் 7 மணி வரை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மெப்ஸ் ஊழியர்கள், டைடல் பார்க் ஊழியர்கள், டி.எல்.எஃப் மற்றும் பிற வளாக ஐ.டி ஊழியர்களுடன் இணைந்து பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு எடுத்த முயற்சியின் மூலம் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக் கோரியும், நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் வர உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும் ஐ.டி ஊழியர்கள் சார்பாக பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஒருங்கிணைப்பில் தாம்பரம் சண்முகம் தெருவில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய போது, அதற்கு பதிலாக பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது காவல் துறை.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பெருமளவில் பிரச்சாரம் செய்து பெரும் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்...

சித்தர் ஆவது எப்படி - 14...


பேரருளை உணர்த்தாத குருவருள் பாழ்...

அன்பே சிவம் என யாரும் அறிகிலர் என சித்தர் பாடிய பாட்டின் படி, அன்பை பற்றி சதா பேசிக் கொண்டே இருக்கும் மனித வர்க்கம் அதன் உண்மை தன்மையை உணராது இருக்கிறது..

அது முக்தியில் மட்டுமே தோற்றத்திற்கு வரும்.. விளக்கம் கிடைக்கும்... அந்த மூன்று இணைக்கக் கூடிய ஒளி நிலை பெறவே முதலில் முனைய வேண்டும்...

அந்த மூன்று கிடைத்த ஒளி நிலையில் மட்டுமே மரணமற்ற நீங்காத பேரன்பு கிடைக்கும்..

முதலில் பேராற்றல் மிகுந்த பேரருளின் தோன்றா நிலையின் தொடர்பு..

அப்படி அப்படி பெற்ற ஆற்றலை உருவ சக்தியாக மாற்றும் வல்லமை வாய்ந்த ஒரு ஊடகமான குருவருளின் தொடர்பு.. அது இரண்டாம் நிலை..

பின் குருவின் தொடர்புடன் உருவ பொருள்களுடன் உலகத்தோடு தர்மமாக வாழுதல்.. இது மூன்றாம் நிலையான திருவருள்..

பேரருள் குருவருள் திருவருள் இந்த மூன்று நிலைகளையும் ஒரே நேரத்தில் பூரணமாக பெற்று இயங்குகிற அந்த தருணம் தான் முக்தி அடைந்த நிலை என்பர்.. அந்த நிலை தான் நிகழ் கால தொடர்பாகிய அன்பு என்பர்..

அந்த நிலையில் வற்றாத சக்தியை பிரபஞ்சமாகிய தோன்றா நிலையில் பெற்று பெற்று, அதனை சத்திய பொருளாக குருவின் துணையால் உருவமாக மாற்றி உலக சார்புகளோடு, சத்திய வாழ்க்கை தர்ம வாழ்க்கை, கருணையோடு வாழும் தகுதி பெறுகிறோம்.

முக்தி ஆனது தோன்றா நிலையாகிய பேரருளையும், அந்த பேரருளை வேண்டிய வண்ணம் பொருளாக மாற்றும் ஒரு ஊடகமான குருவருளையும், அதனால் உண்டான சத்திய நிலையில் ஏற்படும் உலக பந்தங்களில் பயன் தூய்ப்பு என்ற அனுபவநிலையும் ஒன்று சேர்ந்த நிலையில், இணைந்த நிலையில், இருக்கும் தன்மையாகும்..

அதாவது மூன்றும் பூரணமான செயல் நிலைதான் முக்தி என்பது.. இதில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டோ நீங்கிய நிலையில் குறைவு பட்டவர்களாக உள்ளோம்..

பேரருளும் குருவருளும் குறைவு பட்ட காரணத்தால், தொடர்பு மையமாகிய உலகியலில் பல வேதனைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்...

தோன்றா நிலையாகிய பேரண்டமும் பேரறியும் அதன் பேராற்றலும் உணர்த்த வேண்டிய மதங்கள், இடையில் உள்ள குருவருளை மற்றுமே பற்றிக்கொண்டு, முயன்று முயன்று மூல ஆதார சக்தியை பற்ற முடியாமல், விதிக்கப் பட்ட சக்தியையும் செலவு செய்து தோற்றுப் போய் கொண்டே இருக்கின்றன..

சூரிய வெளிச்சத்தை முறைபடுத்தி குவித்து ஒரு குவி ஆடி ( lense ) தன் கீழ் உள்ள பஞ்சை எரிய வைக்கிறது..

இதில் சூரிய வெளிச்சம் பிரபஞ்ச ஆற்றல் என்ற பேரருள் என்றால், குவி ஆடி குருவருள் ஆகும்..

பஞ்சு என்பது உலக சம்பந்த பட்ட சார்புகளான திருவருள் ஆகும்..

இந்த மூன்றும் சேர்ந்த பூரணமாக பெற்ற நிலையே முக்தி என்பதாகும்..

இன்று நிழலிலே குவி ஆடி வைத்துக் கொண்டு பஞ்சை எரிக்க, படாதபாடு அனைவரும் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்..

எல்லா மதங்களும் யோக பயிற்சிகளும் இன்று மூல ஆதாரத்தை விட்டு விட்டு வெறும் வழிபாட்டிலும், வெற்று பயிற்சியிலும் ஈடுபட்டு, இருக்கும் விதிக்கப் பட்ட ஆற்றலையும் இழந்து இழந்து நாசமாகி போய் கொண்டு இருக்கிறது.. எல்லாமே சூரிய ஒளி படாத குவி ஆடிகளாக இருக்கின்றன..

ஆனால் சில அற்புதங்கள் மதங்களில் நடக்கின்றனவே என்று வாதாடலாம்.. அற்புதங்கள் நடந்தபின், அதன் பின் வந்த நிலையை யாரும் வெளிப் படுத்துவது இல்லை..

அற்புதங்கள் நடந்த ஆனந்தத்தில் பின்னால் தொடர்ந்து வரும் அவல நிலையை மறைக்கப் பட்டு விட்டது..

காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை போல் நடந்த அற்புதங்கள் பின், ஏற்படும் அவலங்களை சொல்லாமலே போய் விட்டனர்..

அற்புதங்கள் நடந்த போது பெருமை பட்ட போது, அந்த பெருமையே தனக்கு ஏற்பட்ட அவல நிலையை சொல்ல தடையாக இருந்தது..

சித்தர்களை தவிர எந்த மதவாதிகளுக்கும் எந்த அற்புதமும் நடக்கவே இல்லை..

உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் ஒன்றுக்கு நூறாக மிகை படுத்தப் பட்ட அந்த அற்புதங்கள் பொய்யாகவே இருக்கும்..

முக்தி என்ற ஞான நிலையில் மட்டுமே அவைகளின் உண்மை தோற்றம் புலப்படும்.. தோன்றா நிலையில் உள்ள பேரருளின் துணை இல்லாமல் சத்தியமாக எந்த அற்புதமும் நடக்காது..

அந்த மூலாதார சக்தியின் துணையின்றி எந்த அற்புதமும் நடக்கவே நடக்காது..

மூலசக்தியின் துணையின்றி எல்லை கடந்து பலப்படுத்தப் பட்ட குருவருள் நாசத்தையே உருவாக்கும்.. பெருகி வரும் கோவில்களும் மசூதிகளும் சர்ச்களும், பேரருளுக்கு எதிரானவை..

பேரருளை பெற மிகப் பெரும் தடையாக உள்ளன.. அவைகள் எல்லாம் நிழலில் பயன் படுத்தப் படும் குவி ஆடிகள்.. எந்த கனலையும் எழுப்ப தகுதி அற்றவை..

மாறாக இருக்கின்ற கனலையும் கிரகித்து மனிதனை சக்கையாக செய்து விடும்.. இன்றைய குருமார்களும் அப்படியே இருக்கின்றார்கள்..

அதனால் தான் நிலைதடுமாறிய நிலையில் மனிதன் எண்ண செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறான்...

இந்த தோன்றா நிலையை உணர்த்தாத எதுவும் பலன் அளிக்காது.. மூலக் கனலோடு தொடர்பு அற்ற எதுவும் வெறும் சடப் பொருளே..

தோன்றும் நிலையில் உள்ள தொடர்பு, தோன்றா நிலையை உணர தடையாக இருப்பதால், தோன்றும் நிலையில் உள்ள குருவருள் மறைந்திருந்து ஒருவனுக்கு தோன்றா நிலையை உணர்த்த வேண்டும்.. அப்படி எதுவும் இன்றைய சூழ்நிலையில் நடப்பது இல்லை...

தானே கடவுள் என பிரகடனப் படுத்தி மனித குலத்திற்கு நாசமே விளைவிக்கின்றனர்.. தோன்றா நிலையில் பெறப்பட்ட மூல சக்தியால் மட்டுமே முக்தியின் விளைவாக ஒருவர் அன்பு உடையவராய் ஆகி திருவருளான உலக சார்புகளுக்கு, அதாவது உலக உயிர் இனங்களுக்கு நன்மை செய்ய முடியும்..

மற்றபடி மற்றவர்கள் அன்பை பற்றி பேசிக் கொண்டு இருக்கலாமே தவிர அன்பாய் இருக்க முடியாது..

ஆகவே இன்றைய மனிதக் குலத்திற்கு தோன்றா நிலைக்கு அழைத்து சென்று பேராற்றல் என்ற மூலக் கனலை பெற வேண்டிய கட்டாயம் அவசியம் உள்ளதால், தோன்றா நிலைக்கு அழைத்து செல்லும் பயிற்சியே தலை சிறந்த பயிற்சி என்பது சத்தியமான உண்மை..

தோன்றா நிலையில் இருக்கும் மூலதார மூலக்கனலுக்கு அழைத்து செல்லாமல், தோன்றும் நிலையில் உள்ள பொய்யான மூலாதாரத்தினை காட்டி காட்டி பயிலும் இன்றைய முறையற்ற வாசி பயிற்சி நாசம் மட்டுமே விளைவிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்...

தோன்றா நிலை என்பது எண்ண ஆதிக்கங்கள் இல்லாத கனல் பொருந்திய சுத்த மனம் ஆகும்..

அம்மனம் ஒன்றே தோன்றா நிலையில் அகப்படும் கனலை ஈர்த்து வைக்கக் கூடிய ஆற்றல் உடையது..

எண்ண ஆதிக்கங்களால் ஆளப்படும் அசுத்த மனம் இருக்கின்ற ஆற்றலை எண்ணங்களில் விரையம் செய்து கொண்டிருக்கும்....

தோன்றா நிலையில் மட்டுமே இறைவனும், இறை ஆற்றலும், இருப்பதால் தோன்றா நிலையில் இருக்கும் அந்த தருணம் மட்டுமே இறைவன் வழிபாடு பயன் உள்ளதாக இருக்கும்..

மற்றபடி எண்ண ஆதிக்கங்களான வேண்டுதல்களை முன் வைத்து சிலைகளுக்கு முன் செய்யும் எந்த பிரார்தனையும் தகுந்த பலனை தராது..

எண்ணியவாறு எண்ணிய வண்ணம் எதுவும் உடனே நடைபெற தோன்றா நிலையில் நின்றால் மட்டுமே சாத்தியமாகும்...

தோன்றா நிலையில் முன் வைக்கப் படும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப் படும்..

காரணம் அங்கே மட்டுமே பேரண்ட பேராற்றலின் கனல் என்ற கடவுளின் கருணை சுலபமாக அகப்படும்...

ஆகவே முக்தியின் முன் நின்ற நிலையான பேரருளின் ஆசியை பெற வாசியோகத்தில் தோன்றா நிலை அனுபவப் பட வேண்டும் என வற்புறுத்தப் படுகிறது..

தோன்றா நிலையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்ட அந்த தருணம் முதல் மனிதனுக்கு வாழ்வு உயர நல்ல தருணம் தொடங்கி விட்டது என்பது சத்தியமான உண்மை...

ஆகவே தான் பேரருள் பொருந்திய தோன்றா நிலையை முன்வைத்து விளக்கத் தவறிய எந்த ஒரு மதமும் யோகமும் மன்னிக்க முடியாத ஒழுங்கின்மையை செய்கிறது என சொல்லப் படுகிறது...

எல்லாமே ஒழுங்கின்மையாக உள்ள நிலையில் சுவாச ஒழுங்கு என்ற மிக அற்புத மிக மிக சாதாரணமான பயிற்சியை, செய்ய மனித குலத்திற்கு மிக மிக கடினமாக உள்ளது...

ஏழாம் அறிவை நோக்கிய மனித இனம்...


மனிதன் ஆறறிவு கொண்டவன் என்று தான் இது நாள்வரை கூறி வருகிறோம். ஆனால், மனித மூளையின் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கின்ற பொழுது, இது தவறு எனத் தெரிகிறது.

மனிதன் ஏழாம் அறிவை எட்டி விட்டான் என்பது தான் உண்மை. இளம் வயதிலேயே அபாரத் திறமையுடன் விளங்கும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். குழந்தை மேதைகளின் எண்ணிக்கை தற்காலத்தில் பல்கிப் பெருகி வருகிறது.

இடையறாது நிகழ்ந்து வரும் பரிணாம வளர்ச்சியின் இயக்கப் போக்கில், மனித மூளை, ஏழாம் அறிவை எட்டி விட்டது என்பதனைக் குழந்தை மேதைகள் உறுதி செய்கின்றனர்.

மனித இனத்தின் தன்மை மற்றும் எதன் மூலம் மனிதர்கள் அறிவாளிகளாகத் திகழ்கிறார்கள் என்பதனை ஆய்வு செய்வதே அறிவியலாகும். மனித மூளை ஏழாம் அறிவை எட்டி விட்டது என்கின்றனர்.

மனித மூளை எந்தப் பயனும் இல்லாத, வெறும் சதைப் பிண்டம் என்றே பல நூற்றாண்டுகளாக மருத்துவ உலகில் நம்பப்பட்டு வந்தது. மருத்துவத் துறையில் முன்னேற்றம் அடைந்திருந்த சீனர்களின் அகராதியில் கூட, மூளை என்பதனைக் குறிக்கும் வார்த்தையே கிடையாது.

கிரேக்கர்கள் தாம் மூளையைப் பற்றி முதல் முதலாகச் சிந்தித்தார்கள். ‘பிரேன்’ என்ற கிரேக்கச் சொல்லில் இருந்தே ‘பிரெய்ன்’ என்ற ஆங்கில வார்த்தை உருவாகியது. ‘பிரேன்’ என்றால் கிரேக்க மொழியில் ‘தேவையற்ற சதைப் பிண்டம்’ என்றுதான் அர்த்தம். கிரேக்கர்களும் மூளையைப் பற்றித் தவறாகவே சிந்தித்திருக்கிறார்கள்.

கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்து 8ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் மிகுதியாயின. கேலன் என்ற கிரேக்க அறிஞர் நாம் உள்ளே இழுக்கும் மூச்சு மூளைக்குப் போய் உயிர்ச் சக்தியாக மாறி, இதயத்திற்கு வருகிறது என்றார்.

ஆனால் இது தவறான கருத்து. இருந்தும் ஏதோ ஒரு வகையில் மூளையின் முதன்மையைக் கேலன் உணரத் தொடங்கினார். அன்றைய கால கட்டத்தில் மருத்துவர்களுக்குப் பிணத்தை அறுத்து ஆராய்ச்சி செய்வது முடியாத காரியமாக இருந்தது. மீறிச் செய்தால், அது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இதனால், மனித உடற்கூறுகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.

இந்தக் கால கட்டத்தில்தான் எடின்பரோ நகரில் பர்க் மற்றும் ஸாரே என்ற திருடர்கள் இருந்தார்கள். இருவரும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து சிறுசிறு திருட்டுக்களைச் செய்து வந்தனர். இருவருக்கும் தொழில் இலாபகரமாக இல்லை. தீவிர யோசனைக்குப் பின் இருவரும் பிணங்களைத் திருடி, மனித உடலை அறுத்துப் பார்க்கும் டாக்டர்களுக்கு விற்பனை செய்வதாக முடிவு செய்தனர். புதிதாக அடக்கம் செய்யப்பட்ட பிணங்களைக் கல்லறையில் இருந்து இருவரும் திருடி வந்து, டாக்டரிடம் கொடுத்தார்கள்.


அதுமட்டுமல்லாமல் இறப்பதற்கு முன் என்னென்ன நோய் இருந்தன? எப்படி இறந்தார்? என்பன போன்ற பயனுள்ள விபரங்களையும் டாக்டர்களுக்கு விற்பனை செய்தனர். அவை டாக்டர்களுக்கு மிகவும் பயன்பட்டன. ஆவர்கள் ஒவ்வொரு நோய்க்கும் உடலில் என்ன மாதிரியான பாதிப்பு இருக்கும் எனத்தெரிந்து சொல்லப் பெரிதும் உதவினர்.

ஒரு முறை இடது கையில் முடக்கு வாதம் வந்து இறந்தவரின் உடலை டாக்டரிடம் அந்தத் திருடர்கள் கொடுத்தனர். டாக்டர்கள் அந்தப் பிணத்தின் மண்டை ஓட்டைப் பிளந்து பார்த்த போது, மூளையின் வலது பக்கம் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

மூளைக்கும், மனித உடலின் உள் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று சிந்திக்கத் தொடங்கினர்; மூளை தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்தது.

வியப்பான உண்மைகள் உலகுக்குத் தெரிய வந்தன. அந்தத் திருடர்கள் மட்டும் பணத்திற்காகப் பிணங்களைத் திருடி, டாக்டரிடம் கொடுக்காமல் இருந்திருந்தால், மூளையைப் பற்றிப் பல உண்மைகள் உலகிற்குத் தெரிய பலகாலமாயிருக்கும் அல்லவா!

மூளையின் ஒவ்வொரு பகுதியின் செயல்பாடுகளையும் மனித இனம் அறிந்திருந்தாலும், இன்றும் ஆச்சரியம் தரும் வகையில் அதன் செயல்பாட்டினை எதிர்காலச் சந்ததியினர் ஏழாம் அறிவினைக் கொண்டு வெளிச்சத்திற்குக் கொண்டு வருவார்கள் என்று நம்பலாம்.

நேஷனல் ஜியோகிராஃபி சேனலில் அறிவு ஜீவிகளான இளம் இந்தியர்களை விவரிக்கும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. என்னுடைய அபார மூளை என்ற தொடராக அது வருணிக்கப்பட்டது.

இளம் வயதிலேயே மிகுந்த திறமையுடன் விளங்கும் நிசால் நாராயணன், ஹைதராபாத்தைச் சேர்ந்த சித்தார்த் நாகராஜன், பெங்களுரைச் சேர்ந்த தாதாகத் துளசி, மும்பையைச் சேர்ந்த ராகவ் சச்சார் ஆகிய நான்கு இளைஞர்களைப் பற்றிய சிறப்புத் தன்மைகள் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றன. அவர்களில் சித்தார்த் நாகராஜனின் தற்போதைய வயது பத்து. தனது மூன்று வயதிலேயே டிரம் இசை நிகழ்ச்சியைத் தனியாக நடத்திய சிறப்புத் தன்மை பெற்றவர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னிரெண்டு வயதே ஆகும் நிசால் நாராயணன் கணிதத்தில் மிகுந்த திறமை பெற்றவர். கணிதக் கோட்பாடுகள் பற்றிய அவரது ஆறு புத்தகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. சிறு வயதிலேயே தன் தந்தையின் நிதிநிலை அறிக்கையில் தவறுகள் இருந்ததைக் கண்டறிந்த மேதை அவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. மிக இளம் வயதில் கின்னஸ் புத்தகத்தில் செயற்கரிய செயல் செய்தவராக இடம் பெற்ற இந்தியர் என்பது அவரது மற்றொரு சிறப்பு.

அடுத்த அறிவு ஜீவி, தாதாகத் அவதார் துளசி, தனது ஒன்பது வயதில் பள்ளிப் படிப்பை முடித்தவர்; பட்டப் படிப்பை மறு ஆண்டிலேயே முடித்தார். பி.எச்.டி., பட்டம் பெற்றவர்களில் மிகவும் இளையவர் என்ற பெருமை பெற்ற துளசிக்குத் தற்பொழுது வயது இருபதுதான்.

ராகவ் சச்சார் தனது நான்கு வயதிலேயே இசைக் கருவிகளைத் திறன்பட வாசித்துப் புகழ் பெறத் தொடங்கினார். ஆண்டுதோறும் ஓர் இசைக் கருவி என்ற அடிப்படையில் இதுவரை இருபத்தி நான்கு இசைக் கருவிகளில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய இசை நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் பத்து இசைக் கருவிகளை வாசிப்பார். இதில் புல்லாங்குழல், ஹார்மோனியம், சாக்சபோன் உள்ளிட்டவைகளும் அடங்கும். அவரது தற்போதைய வயது இருபத்து ஆறு.

பாகிஸ்தானைச் சேர்ந்த 10 வயது சிறுமி ‘ஆல்பா கரிம்நந்தாவர்’ உலகளவில் அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸின் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் நடத்திய கம்யூட்டர் தேர்வில் உலக சாதனை நிகழ்த்தினார். இந்த உலக சாதனையை மதுரையைச் சேர்ந்த 8 வயது சிறுமி ‘லவிணாஸ்ரீ’ முறியடித்து ‘உலகின் இளம் வயதில் மைக்ரோசாப்ட் சான்றிதழ் பெற்றவர’ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.


பி.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., போன்ற தொழில் நுட்பத்தில் முதுகலைப்பட்டம் பெற்று 25 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர் மட்டுமே எழுதக் கூடிய இத்தேர்வில் பில்கேட்ஸ் சிறப்பு அனுமதி வழங்கியதால் இத்தேர்வை இவள் எழுத முடிந்தது. லவிணாஸ்ரீ மூன்று வயதில் இருக்கும் பொழுதே திருக்குறளின் 1330 குறள்களையும் ஒரே மூச்சில் ஒப்பித்தாள். பாகிஸ்தான் சிறுமியும், மதுரை சிறுமியும் ஏழாம் அறிவுக்கு சான்றாயின.

குழந்தைகள்தாம் என்றில்லை; பல முதியவர்களும் திறன்மிகு மூளை வளம் கொண்டவர்களாக உள்ளனர். மும்பையைச் சேர்ந்த எழுபத்து ஐந்து வயது கணக்குப் புலி எம்.எஸ். டோஷி ஐந்திலக்க எண்ணை 39,122 ஐ 97,531 இல் பெருக்கினால், என்ன விடை வரும்? அல்லது 24,681 இல் இருந்து 13,579 ஐ கழித்தால் என்ன விடை வரும்? என்று அவரிடம் கேட்டால், கால்குலேட்டர், கம்ப்யூட்டர் எதுவுமில்லாமல், சில வினாடிகளில் சரியான பதில் சொல்லி வியப்பிலாழ்த்தி விடுவார்.

வக்கீலான அவர், கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஓன்பது இலக்க எண்ணிலோ அல்லது அதற்கு மேலான எண்களிலோ கணக்குக் கேட்டால், அவர் நிமிடத்தில் பதில்சொல்லி விடுவார். அவரை ‘மனிதக் கால்குலேட்டர்’ என்றே சொல்லலாம். இவ்வளவு விரைவாகக் கணக்குப் போட யாரிடமும் பயிற்சி பெற்றதும் இல்லை.

அவர் இதனைப் பற்றிக் கூறும் பொழுது, நான் விரைவாகக் கணக்குப் போடுவதில் மாய மந்திரம் ஏதுமில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாகவே செய்கிறேன். சரியான பயிற்சியும் எனக்குக் கணக்குப் பாடத்தில் உள்ள ஆர்வமும் தான் காரணம்’ என்று கூறினார்.

அண்மையில் நியூயார்க் நகரில் 200 இலக்க எண்ணின் பதின் மூன்றாம் மூலத்தை (Thirteen Root) 72 நொடிகளில் கண்டு பிடித்துக் கூறினார். ஒர் ஆய்வு மாணவர், அவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘லெம்மாயிர்’ என்பவர். இந்த மூலம் 2397 207 667 966 701 ஆகும். இது பதினாறு இலக்க எண் ஆகும்.

மேதமை வாய்ந்த ஒரு மூளையின் மிக்க திறமையின் வெளிப்பாடு என்று மட்டுமே செயற்கரிய செயலைக் கருதுவது குறை மதிப்பீடாகும் என்று சென்னையைச் சேர்ந்த நியூட்டன் அறிவியல் மன்றம் இன்ஸ்கோ சுப்பிரமணியன் கூறுகிறார்.

இடையறாது நிகழ்ந்து வரும் பரிணாம வளர்ச்சியின் இயக்கப் போக்கில் மனித மூளையானது ஏழாம் அறிவை எட்டிவிட்டது என்பதன் உறுதிப்பாடு, செயற்கரிய செயலாகும். மனித மூளையால் ஒளியின் வேகத்திற்கு அளவிற்கு (நொடிக்கு 3 லட்சம் கி.மீ.) சிந்திக்க இயலும் என்பதற்குச் சாட்சியாக இருக்கிறது லெம்மாயிர் நிகழ்த்திய சாதனை.

குழந்தை மேதைகளின் எண்ணிக்கை கணக்கற்றவை. பள்ளிக் குழந்தைகளில் மாநில மட்டத்தில் நடைபெறும் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் 100க்கு 100 பெறும் மாணவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் பலர் உள்ளனர்.

எலக்ட்ரான்கள் ஓர் ஆற்றல் மட்டத்தில் இருந்து பிறிதோர் ஆற்றல் மட்டத்திற்குப் பாய்ந்து செல்வது போன்று மனித மூளை ஆறாம் அறிவில் இருந்து ஒரு குவாண்டம் பாய்ச்சலில் ஏழாம் அறிவை எட்டிவிட்டதன் வெளிப்பாடே இந்நிகழ்வு. இஃது ஒரு குவாண்டம் நிகழ்வு. (Quantum Phenomenon) பல்லாயிரம் ஆண்டு பரிணாம வளர்ச்சியின் விளைவாக இரட்டைச் சுருள் (Double Helix DNA) என்ற மூளை வளத்தைப் பெற்ற மானிடம், பரிணாமத்தின் அடுத்த கட்டத்தில், ஏழாம் அறிவு பெறும். மூளையின் நியூரான்கள் வெளிப்படுத்தும் மின் சமிக்ஞைகளை EEG (Electro Encephalograph) என்ற கருவியின் மூலம் பதிவு செய்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.

மேலும், ஆழமானதும் துல்லியமானதுமான கருவிகள் வடிவமைக்கும் போது, ஆறாம் அறிவையும் ஏழாம் அறிவையும் பிரித்தறிவது கைகூடும்.

பொருட்களுக்குத் திடம், திரவம், வாயு என்று மூன்று நிலைகள் மட்டுமே உண்டு என்ற அறிவியல் கருத்து இன்று மாறி விட்டது. இவற்றிற்கு அப்பால் ஒரு புதிய நிலையை (New State of Matter) 2001இல் மூன்று அமெரிக்க இயற்பியலாளர்கள் நிரூபித்து, நோபல் பரிசு பெற்றனர்.

போஸ் – ஐன்ஸ்டின் குளிர் நிலை (Bose – Einstein Condensate) என்று அப்புதிய நிலைக்குப் பெயர். இதுபோலவே, ஏழாவது அறிவும் ‘குவாண்டம் அறிவு’ (Quantum sense) என்ற பெயருடன் இவ்வுலகை ஆளும் என்கிறார் – இன்ஸ்கோ சுப்பிரமணியன்....

ஜூலை மாதம் உள்ளாட்சித் தேர்தல்...


ஜூலை மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் பதில்...

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்...


ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு.

ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார்.

அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார்.

அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார்.

மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார்.

மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள்.

அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம்.

அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

பராமரிப்பற்ற நிலையில் காணப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி.. கண்டு கொள்ளாத அதிமுகவினர்...


இலுமினாட்டி நமது நிலத்தில் 1 : இந்தியாவின் அடிமைத்தனும் விடுதலையும்...


இலுமினாட்டிகள் என்ற இந்த விழிப்புணர்வு மிக்க குழுவினர் தமிழர்கள் மீது தனிப்பட்ட பகை கொண்டவர்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழும் பழிதீர்ப்பு இது.

தற்பொழுது இந்தியாவிற்கு வருவோம். இந்தியா முழுவதும் தமிழர் வாழ்ந்த பகுதியே என்பது நாம் அறிந்ததே.

இந்தியா என்பது சுதந்திரத்தினால்  உருவான ஓர் நாடு. நாடு என்பதை விட ஓர் நிறுவனம் எனலாம்.

சுதந்திரத்துக்கு முன் இது பல நாடுகளாக இருந்து. அரசாட்சி இருந்தாலும் மக்கள் பொதுவாக மகிழ்ச்சியோடே வாழ்ந்தனர்.
கடந்த சில நூற்றாண்டுகளில் சில மேற்கத்திய அரசுகள் பல நாடுகளை தங்கள் காலணி ஆதிக்க நாடுகளாக மாற்றின. நமது நிலமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரிட்டிசிடம் முழுமையாக மாட்டிக் கொண்டது. பின் நம் விடுதலை மாவீர்கள் போராடி நமக்கு விடுதலை பெற்று தந்தனர்.

ஆனால் உண்மை என்றால் அந்த இந்திய கிழக்கிந்திய கம்பேனி ஓர் அரசு
நிறுவனம் அல்ல. அது ஓர் தனியார் நிறுவனம். இதன் உரிமையாளர் ரோத்சைல்ட் Rothschild. இவன் இலுமினாட்டியில் முதன்மையானவன்.

சுதந்திர போராட்டம் - இந்தியாவை வெற்றிகரமாக ஆட்சி செய்து கொண்டிருந்தது நிறுவனம். அப்பொழுது சில உண்மையான தேசிய விடுதலை வீரர்களான நேதாஜி போன்றோர்,  இது எங்கள் நாடு நீ வெளியேறு என முழங்கினர். ஆயித போராட்டங்களால் நிறுவனத்தின் சொத்துக்கள் அழிந்தன. ஒத்துழையாமை இயக்கம் நிறுவனத்திற்கு வருமான இழப்பை ஏற்படுத்தியது.

இந்திய தேசிய இராணுவமும்
நாடு கடந்த இந்தியாவின் முதல் இராணுவ பிரதமரான நேதாஜியும் ஜப்பானின் உதவியோடு இந்தியாவை மீட்க பயணமானார்.

முதலில் அந்தமாண், கூட்டு இராணுவத்தினரால் கிழக்கு இந்திய கம்பேனியிடம் இருந்து மீட்கப்பட்டது அந்தமாண், ஓர் இராணவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும். 18 நாடுகளை அப்பகுதியை பிடிப்பதன் மூலம் ஆட்சி செய்ய முடியும்.

மேலும் அங்கு உள்ள ஒரு சிறிய தீவு இலுமினாட்டிகளுக்கு மிக முக்கியமானது ஆகும். அங்கே தான் அவர்கள் தங்கள் இறையை வழிபடுகிறார்கள்.

அணுகுண்டு இந்தியாவுக்காக
இப்பொழுது அவர்கள் ஜப்பானுக்கு மிரட்டல் விடுத்தார்கள். இந்தியாவையும் அந்தமானையும் சுபாஸையும் எங்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி போ இதுவே மிரட்டல்.  ஜப்பான் அடிபணிய மறுத்தது.  இரண்டு அணு குண்டுகள் ஜப்பானை தாக்கின. ஜப்பான் அவர்கள் சொன்னதை செய்துவிட்டு நாடு திரும்பியது.

சுதந்திரம் என்ற மாயை - சுதந்திர போராட்டங்களால் நட்டம் அடைந்த கிழக்கு இந்திய நிறுவனம் ஒரு திட்டம் தீட்டியது. ராக்ஃபெல்லரால் Rockefeller  உருவாகக்கப்பட்ட உளவியல் ஆய்வு மையம் ஒரு நல்ல யோசனை வழங்கியது அது தான் சுதந்திரம். மறைமுகமாக நாட்டை ஆட்சி செய்வது. அதன்படி தீவிர விடுதலை போராட்ட வீரர்கள் கொலை செய்யப்பட்ட பின் பிள்ளை பூச்சிகளை வைத்து சுத்திரம் வழங்கி ஆட்சி அமைக்கப்பட்டது. இந்தியாவை போன்ற பிற நாடுகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.

தற்போது இந்தியா சுதந்திரம் பெற்று விட்டதாக நம்பி மக்கள் மாயையில் வாழ்கின்றர்.  இலுமினாட்டிகள் தங்கள் 13 துறைகளை கொண்டு நாட்டை தற்பொழுதும் ஆட்சி செய்கின்றனர்...

SC, ST மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட அனைவருக்குமான இட ஒதுக்கீட்டையும் முடிவுக்கு கொண்டு வருகிறார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்...


தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு… புராண, வரலாற்று உண்மைகள்...


தமிழ் ஆண்டு (திருவள்ளுவராண்டு)...

தமிழ் புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள்.....

அறிஞர்களும் சான்றோர்களும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருந்தாலும் ஒரு சாரார் இதை மறுத்து வழக்கமான சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகப் பாவித்து வருகிறார்கள்.

இவர்கள் தமிழ் ஆண்டுகள் என்கிற பெயரில் வழங்கி வரும் வடமொழிப் பெயர்களையும் ஏற்றுக் கொண்டு வருவது வருத்தத்தைத் தருகிறது. தமிழருக்கென ஒரு தொடராண்டு கொண்டுவருவதில் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தமிழ் முதல்  திங்கள் ’தை’யா அல்லது ’சித்திரை’யா என்பதுதான் குழப்பம். தமிழ்ப் பேசும் அனைத்து தரப்பினருக்கும் வடமொழிப் பெயரை மாற்றுவதிலும் மாற்றுக் கருத்தேதுமிருக்க வாய்ப்பில்லை.

காலத்தின் அருமை - நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம், மற்றவை மானம், உயிர்.

நாளென ஒன்று போல் காட்டி உயிரீரும்
வாளது உணர்வார்ப் பெறின் –          திருக்குறள்.

என்கிற குறள் மூலமும், காலம் அறிதல் என்கிற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையை வள்ளுவம் உணர்த்துகிறது.

தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த ‘கணி’கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. ‘அறிவர்’கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்..

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள்.

ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தனது நாகரீகம் போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும் வாழ்வாதாரத்தின் முதன்மையையும் அறிமுகம் செய்து வைக்கும் காரணியாகின்றது

அந்தவகையில் உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதல்நிலை பெறும் தமிழ் மொழி, தமிழர் இனம், தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுனர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர்.

தமிழ் வளர்த்த மூன்று சங்கங்களின் சுவடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் படி கடற்கோளால் காவுகொள்ளப்பட்ட குமரிக்கோட்டின் நடுவரைக்கோடு இலங்கை என்கின்ற தேசத்தை நடுவணாகக் கொண்டு தமிழர்களின் பூர்வீகத் தாயகம் உலகப் பந்தில் ஓரு தேசமாக தன்னை நிலை நிறுத்தியிருந்தது .

குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர் இனம் தன் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தன் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக் கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்-கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.

சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்- கோண்டிரடோஸ் எஸ்.ஜி வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.

இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியான மூத்த தமிழ் குடி மொழி வழியேகி வாய்வியல் கூறுகளுக்கும் ஆண்டுக்கணிப்பீடுகளை தொடக்ககமாகவும் நிர்ணயம் செய்து கொண்டனர் என கூறும் இவர்கள் தமிழர்கள் என்னும் இந்த சாதியினர் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப காலக் கணிப்பீடுகளை மதிப்பீடு செய்து அதனூடாக கண்டறிந்த பெறு பேறுகளுக்கு அமைவாக தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தார்கள்.

காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைப் பொதுவான ஆண்டுக்கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது, வருத்தம் தருகிறது.

ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள்.

வைகறை,
காலை,
நண்பகல்,
எற்பாடு,
மாலை,
யாமம்’ என்று அவற்றை அழைத்தார்கள்.

அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்.

அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றது. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது).
2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது).
3. கார் – (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது).
4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.).
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது).
6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது).

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (seasons) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இடையில் தமிழர் மட்டும் மாறி விட்டோம். இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம்தான். அதனால்தான் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். (500 க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களின் ஆராய்ச்சி முடிவும் இதுதான்).

இந்த இழிநிலையைப் போக்கத் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்  தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் ஆராய்ந்தார்கள்.

இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

அவர்கள் எடுத்த முடிவுகள்
திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை; இறுதித் திங்கள் மார்கழி; புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள். திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2011 + 31 = 2042)  என்று அந்நாளில் முடிவு செய்தனர். கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ்; புதன் = அறிவன்; சனி = காரி.

தமிழ் நாட்டரசு 1971 முதல் திருவள்ளுவராண்டு முறையை ஏற்று தமிழ் நாட்டரசு நாட்குறிப்பிலும்,
1972 முதல் தமிழ் நாட்டு அரசிதழிலும்,
1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும்  நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன் அடிப்படையிலேயே தை மாதத்தை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்த கருணாநிதியைப் பிடிக்காத பலர் சித்திரை முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

ஜெயலலிதா சித்திரை 1 அன்று புத்தாண்டு வாழ்த்து சொல்வதில் ஆச்சரியமில்லை. அந்த அம்மையாருக்கு இதெல்லாம் தெரிந்தால்தானே.

நமக்கேனும் கொஞ்சம் சிந்திக்கும் திறன் வேண்டும். நமக்குப் பிடிக்காதவர் நம் உண்ணும் சோற்றை, சோறு எனச் சொன்னான் என்பதற்காக நம் சோறு மலம் ஆகி விடாது. நமக்குப் பிடிக்காதவர்கள் சொன்னாலும் உண்மை உண்மையே. குறைந்தபட்சம் கீழே பாரதிதாசன் சொல்வதையாவது கேளுங்கள்…

நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

-பாவேந்தர் பாரதிதாசன்.

இன்றைய நிலை - இன்னாளில் வழக்கில் உள்ள ‘பிரபவ முதல் அட்சய’ வரை உள்ள 60 ஆண்டுகளில் ஒன்று கூட தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை.  அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாகவும் இல்லை, பல்லாயிரமாண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழினத்தின் காலத்தை வரையறுக்கவும் முடியவில்லை.

சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை.

இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது.

எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் ‘சஷ்டி பூர்த்தி’ என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள்.
மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும்.

அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

ஒருமுறை நாரதமுனிவர், கடவுள் கிருஷ்ணனை நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா? என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்’ என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும்  கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உறவு கொள்ள விரும்புகிறேன் என்றார்.

கிருஷ்ணன் நாரதரை யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய் எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். பின் கடவுள் கிருஷ்ணனுடன் அறுபது வருடம் கூடி, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் ‘பிரபவ தொடங்கி அட்சய முடிய’ என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருஷமாகும் வரம் பெற்றார்கள். இப்படிதான் சித்திரை1ல் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.

இந்த இழிநிலையைப் போக்கத் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்  தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் ஆராய்ந்தார்கள். இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

அவர்கள் எடுத்த முடிவுகள்
திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை; இறுதித் திங்கள் மார்கழி; புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள். திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2011 + 31 = 2042)  என்று அந்நாளில் முடிவு செய்தனர். கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ்; புதன் = அறிவன்; சனி = காரி.

தமிழ் நாட்டரசு 1971 முதல் திருவள்ளுவராண்டு முறையை ஏற்று தமிழ் நாட்டரசு நாட்குறிப்பிலும்,
1972 முதல் தமிழ் நாட்டு அரசிதழிலும்,
1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும்  நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேற்கண்ட விவரங்கள் மறைமலை நகரில் வாழ்ந்து வரும் திரு வ. வேம்பையன் அவர்களின் கட்டுரையிலிருந்து எடுத்தது.

கடந்த 30 ஆண்டுகளாக இவர் திருவள்ளுவராண்டைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கடும் முயற்சி எடுத்து வருகிறார். 1967 இல் ஆட்சிக்கு வந்தபோதோ அல்லது 1971 இல் பெரும் வெற்றி பெற்றபோதோ முழு வீச்சில் அரசு சட்டத்துடன் நடைமுறைப்படுத்தி இருந்தால் கடந்த 40 ஆண்டுகளில் நாம் வெற்றி பெற்றிருப்போம். ஒன்று தமிழாண்டு திருவள்ளுவராண்டு யாராலும் மாற்ற முடியாத படி (எப்படி இன்று ‘தமிழ்நாடு’ என்ற பெயரை யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியாதோ) வழக்கத்தில் வந்து நிலைத்து இருக்கும்.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல்நாள், பொங்கல் நன்னாள்
-பாவேந்தர் பாரதிதாசன்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. புத்தாண்டில் உலகம் வாழ் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும். இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும்....