22/08/2017
உபி முசாபர்நகர் அருகில் நடந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை உள்ளூர் இஸ்லாமியர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். எங்கள் உயிரை காப்பாற்றிய இஸ்லாமியர்களுக்கு கோடான கோடி நன்றிகள் என சாமியார்கள் தெரிவித்து இருக்கிறார்கள்...
என்னுடைய தலை சீட்டின் முன்பகுதியில் அடித்து இரண்டடி தூக்கி வீசப்பட்டு கிடந்தேன். நான் கடுமையான வலியில் இருந்தேன். எல்லா திசையிலும் அழு குரலும், கூக்குரலும் கேட்டது. உண்மையாய் சொல்கிறேன். முஸ்லிம்கள் அந்த விபத்து பகுதிக்கு வந்து எங்களை அந்த ரயிலிலிருந்து மீட்காதிருந்திருந்தால் நாங்கள் மரணித்திருப்போம்.
- சாமியார் பகவான் தாஸ் மஹாராஜ்..
விபத்துக்குள்ளான உட்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சாமியார்களில் ஒருவர்...
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா....?
அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக..
உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…
மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:
சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால், நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.
திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.
இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது...
மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு...
மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும்.
தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.
60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது. உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.
தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.
ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்...
மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு காரணம் என்ன?
இந்திய கடற்படையோ அல்லது கடலோர ரோந்து படையினரோ, ஏன் தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறி வருகின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த ஒட்டுமொத்த பிரச்னையின் மையமாக இருக்கும் சர்ச்சைக்குரிய, இந்திய – இலங்கை அதிகாரிகளுக்கு இடையில், 2008ல் போடப்பட்ட ஒப்பந்தமே காரணம் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படாதவரை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும்.
மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. படகுகளை பிடுங்குவது, அவற்றை உடைப்பது, வலைகளை அறுப்பது, மீனவர்களை தாக்குவது போன்ற காரியங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன.
தொடர்ந்து மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கான காரணமும், அதை தடுத்து நிறுத்த முடியாத அவலத்துக்கும் காரணம் என்ன என்பது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
மீனவர்களின் தாக்குதலுக்கு காரணம், கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்தது தான் என்றும், அதை திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன. 1974ல், இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையில் போடப்பட்ட ஒப்பந்தம் அது.
இந்தியாவுக்கு சொந்தமாக இருந்தாலும் கூட, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்த ஒப்பந்தம் தான்.ராமநாதபுரம் மகாராஜாவுக்கு சொந்தமாக, இந்த கச்சத்தீவு இருந்ததற்கான அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்கள் இருக்கின்றன.
தவிர, பூகோள அடிப்படையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் இன்றியமையாத முக்கிய இடம் கச்சத்தீவு. இப்படியிருந்தும், கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்தது.
அந்த ஒப்பந்தத்தில், தமிழக மீனவர்களுக்கு என, சில உரிமைகள் அளிக்கப்பட்டன. மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களது வலைகளை உலர்த்துவதற்கு உரிமை அளிக்கப்பட்டது.
இது தவிர, கச்சத்தீவு அந்தோணியார் கோவிலில் நடக்கும் திருவிழாவுக்கு சென்று வருவதற்கும் உரிமைகள் அளிக்கப்பட்டன. வலைகளை உலர்த்துவதற்கு உரிமை உள்ளது என்றாலே, அப்பகுதியில் மீன் பிடிப்பதற்கும் உரிமை உள்ளது என்பது தான் அர்த்தம்.
அந்த காலத்தில் நைலான் வலைகளை மட்டுமே மீனவர்கள் பயன்படுத்தினர். காலப்போக்கில் இது மாறிவிட்டதால், வலைகளை உலர்த்த வேண்டிய அவசியம் தமிழக மீனவர்களுக்கு இல்லாமல் போய் இருக்கலாம். அதுகூட, 34 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாமல் தான் இருந்து வந்தது. அவ்வப்போது சிறிய அளவில் பிரச்னைகள் வருமே தவிர, பெரிய அளவில் எந்த சிக்கலும் எழாமல் இருந்தது.
இந்த சூழ்நிலையில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி நடைபெற்ற 2008ல், திடீரென ஒப்பந்தம் ஏற்பட்டது. இரு நாட்டு அரசுகளுக்கு இடையில், இந்த ஒப்பந்தம் போடவில்லை.
விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக அந்நாட்டு அரசு முனைப்பாக இருந்த சமயம் அது.
அப்போது இருநாட்டு அதிகாரிகள் கூடி ஆலோசித்து, அவர்கள் மட்டத்திலேயே போட்டுக் கொண்ட ஒப்பந்தம் அது. அந்த ஒப்பந்தப்படி, இரு நாடுகளுக்கு இடையிலான சென்சிடிவ் பகுதிகள் எது எது என கண்டறிந்து, அப்பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என, இலங்கை தரப்பு அரசு அதிகாரிகளால் வரையறை செய்யப்பட்டது.
அப்பகுதிகளுக்குள் மீன்பிடிக்க வந்தால், நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டுமென்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு, இந்திய அதிகாரிகள் அப்படியே ஒப்புதல் அளித்தனர்.
அப்படி, இலங்கை அதிகாரிகள் கேட்ட கோரிக்கைகளுக்கு, இந்திய அரசு அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் அது. அந்த ஒப்பந்தம் தான் இப்போதும் அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை தமிழக மீனவர்கள் மீறுகின்றனர் எனக் கூறி, இந்திய கடற்படையினரோ, கப்பல் ரோந்து படையினரோ பாதுகாப்பு தர முடியாத சூழ்நிலை உள்ளது.
நடைமுறையில் உள்ள உண்மை இது என்றாலும், இது பெரிய அளவில் வெளியில் தெரியாமல் உள்ளது.
இரு நாட்டு அரசுகள் கூட போடாமல், வெறும் இரு தரப்பு அதிகாரிகளே போட்டுக் கொண்ட அந்த ஒப்பந்தத்தை காரணம் காட்டி, மீனவர்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசியல் கட்சிகளோ, போராடும் பிற அமைப்புகளோ முன் வைப்பதில்லை.
இந்த ஒப்பந்தம் தான், தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலுக்கு வழி வகுக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்ட காலத்தில், பல காரணங்களுக்காக போடப்பட்டது அந்த ஒப்பந்தம்.
ஆனால், இப்போது புலிகள் அமைப்பே இங்கையில் இல்லை என்றாகிவிட்ட பிறகும், அந்த ஒப்பந்தம் ஏன் நீடிக்கிறது என்பது குறித்தும், அந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் தீவிரமாக எழாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறினர்...
நெஞ்சை பதற வைத்த ஒரு புத்தகம்...
பாவையர் மலர் தீயில் தன் உயிரை உருக்கிக் கொண்ட முத்துக்குமார் நினைவாக என்று தொடங்குகிறது புத்தகம்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலையை மனசாட்சி கொண்ட பெரிய வி.ஐ.பி.க்கள் முதல் சாதாரண மக்கள் வரை குமுறலாக வெளியிட்ட கருத்துகளை அங்கு நடந்த கொடூரம் மறையாக புகைப்படங்களுடன் வேதனையுடன் தொகுத்து தந்துள்ளார் ஆசிரியர் ஊடகச்செம்மல் பவா சமத்துவன்.
தமிழர்களான நாம் ஒவ்வொருவரும் இதை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் கொஞ்சமாவது சொரணையுடன் நடந்து கொள்வோமானால் அது ஆசிரியருக்குக் கிடைத்த வெற்றி...
புத்தகம் கிடைக்கும் இடம்...
புதுயுகம்
72/40, ஓ.வி.எம்.தெரு,
சேப்பாக்கம், சென்னை - 600005.
91-044-28515051...
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உண்மையில் நடந்தது என்ன..?
திக, திமுக கட்சியினரின் வாய் ஜாலத்தினால் மக்கள் தூண்டப் பட்டு, இந்த போராட்டத்தில் முதலில் கல்லூரி மாணவர்களும், பிறகு பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள்.
இவர்கள் வாய் வார்த்தையை நம்பி பலர் மொழிக்காக போர் என்றே முடிவு செய்து தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.
பொது சொத்துக்கள் தீக்கிரையாகின.
அண்ணாவும் பல தலைவர்களும் சிறை சென்றனர்.
ஆனால், இறுதியில் நடந்தது என்ன தெரியுமா..?
போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே..
இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது..
1965 ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது..
என்று அண்ணா அறிவித்து விட்டார்...
சிறை சென்ற பல தலைவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளி வந்தனர்.
இந்தி திணிக்கப் படமாட்டாது என்பதை மத்திய அரசின் அரசாணையாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தவர்கள் வெறும் வாக்குறுதியை மட்டும் சாக்காக வைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
பாவம், இவர்களை நம்பி தீக்குளித்த தமிழர்கள் தான் முட்டாள்கள் ஆனார்கள்...
Subscribe to:
Posts (Atom)









