27/11/2017

தேர்தல் ஆணையமும் ஏமாற்று வேலையும்...


தொப்பி தினகரனுக்கு ஆதரவாக எடப்பாடி, ஜெயக்குமார், செங்கோட்டையன், அவரு இவருன்னு ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாக வெளியான லிஸ்ட் இது...

இந்த லிஸ்டைக் காண்பிச்சுதான் தேர்தலை நிறுத்துனாங்க.

அப்போ டம்மி முதல்வரா இருந்த எடப்பாடி இப்போ நிஜமாவே முதல்வர் ஆகிட்டாரு.

இப்போ அதே தொகுதிக்கு திடீர்னு தேர்தல் வருது. ஆனா முதல்ல சொல்லப்பட்ட அந்தக் குற்றச்சாட்டு என்ன ஆச்சு?

தினகரன், எடப்பாடி & கோ திடீர்னு உத்தமர்களா ஆகிட்டாங்களா?

தேர்தல்கமிஷனே உன் விலை என்ன? இப்போ உன்னை யாரு வாங்கியிருக்காங்க?

அன்புச்செழியனால் தான் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதாக கூற முடியாது. அன்புச்செழியன் இல்லையென்றால் பாதி படங்கள் திரைக்கு வந்திருக்காது - முட்டு கொடுக்கும் சீமான்...


பேய்கள் ஜாக்கிரதை...


நாம் வாழ்கின்ற இந்த பிரபஞ்சத்தி த் பல விதமான விதிகள் இருக்கு. ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு சக்தி நிலையில இயங்குது.

ஆற்றல் அலைகளாக மாற்றபட்டு அணுக்களின் வழியே பயணிக்கிது.

ஒவ்வொரு அலையும் அணுவை அடைந்தவுடன் அது தான் இருக்கும் சக்தி நிலையில் இருந்து, தூண்டபடும் சக்தி நிலைக்கு உயருது. இவ்வாறுதான் அலைகள் பிரபஞ்சத்தில் பயணிக்கிறது.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒளியை உமிழ்கிறது. அதை நம் கண்கள் கிரகித்து காட்சியாக தெரிகிறது.

ஆனால் அனைத்தையும் நம்மால் காண முடிவதில்லை. உதாரணம் பூமி முப்பரிமாண அமைப்பை உடையது.

நாம் காண்பது ஒரு பரிமாணம் மட்டுமே. அதே போல நம் உடலும் இரண்டு பரிமாண தோற்றங்களை கொண்டது. நமக்கு தெரிவது ஸ்தூல உடல் மட்டுமே.

சூட்சம உடல் தெரிவதில்லை. ஸ்தூல உடல் அணுக்கள் உமிழும் ஒளியே சூட்சம உடல். மரணத்திற்கு பின்பு ஸ்தூல உடல் மட்டுமே அழிகிறது.

சூட்சம உடல் அழியாமல் குறிப்பிட்ட காலத்திற்கு பழக்கபட்ட விதத்தில் சுற்றித்திரிகிறது. பிறகு பிரபஞ்ச அணுக்களின் இடையூரினால் ஆற்றல் இழப்பு ஏற்பட்டு கரைந்துவிடுகிறது. ஒளி உடல் இருக்கும் வரை எண்ண பதிவின் தொடர்பு இருக்கும்.

தீராத ஆசையிலேயும் தீராத பாசத்திலேயும் தீராத கோபத்திலேயும் செத்தவன் ஆவியாக அலைவான்.

ஆவியை அடிக்கடி நினைத்து பயம் கொள்ளும் மனித மூளை அதன் அலைவரிசையில் தற்செயலாக தொடர்பு கொண்டு விடுகிறது. பிறகு அவர்களுக்கு அமானூசிய அனுபவம் ஏற்படுகிறது.

உயிர் பிரிந்த பின்னும் அது உடலையே சுற்றிசுற்றி வந்து மீண்டும் உடலில் புக முயற்சிக்கிறது. அந்த ஆவி மற்றவர்களை இடையூறு செய்கிறது.

வேறு உடலில் புகுந்து அந்த உடலை தன் கட்டுபாட்டிற்கு கொண்டு வருகிறது. அதனால் மந்திரவாதிகளால் பல்வேறு சடங்குகள் செய்து உடலில் இருந்து விரப்படுகிறது.

அந்த ஆவி மிகவும் பயந்து அலைகிறது. பிறகு மெல்ல மெல்ல உலக வாசனைகள் அற்று மோன நிலையில் ஆழ்ந்த உறக்க நிலையை அடைகிறது.

ஐம்புலன்கள் இல்லாமலேயே ஆவி நிலையில் நம்மால் பார்க்கவோ கேட்கவோ முடியும். சூட்சம உடலால் ஒளி வேகத்தில் பயணிக்க முடியும்.

ஆவிகளை தொடர்பு கொண்டு சாதாரணமாக பேசும் கருவிகளை கண்டு பிடிக்கும் காலம் விரைவில் வரலாம்...

தன் வளர்ப்பு தாய் இறந்த 22 நாளில் உணவு உண்ணாமல் தன் உயிரை விட்ட நாய் - நன்றி கெட்ட மனிதரைவிட நாய்கள் மேலடா...




திடீர் கோடீஸ்வரி பாஜக வானதி சீனிவாசன்...


ஊழலை ஒழிக்க வந்த ஆர்எஸ்எஸ் உத்தமர்களில் தமிழக உத்தமர் வானதி சீனிவாசனின் ஊழல்கள்..

வானதி சீனிவாசன் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மின்விசிறியை தவணை முறையில் வாங்கி அதில் கடைசித் தவணை கட்ட முடியாத ஒரு எளிய நடுத்தர வர்க்க குடும்பத் தலைவியாக இருந்திருக்கிறார்.

அக்காவை கூட்டம் மற்றும் போராட்டங்களில் பேச அழைக்கும் பா.ஜ.கவினர் அவருக்கு போக்குவரத்து மற்றும் வழிச்செலவுக்கு பணம் கொடுத்து உதவி வந்துள்ளனர்.

ஆனால் இன்று அக்கா வானதி சீனிவாசன் சில பல கோடிகளுக்கு அதிபதி. இதை நாம் சொல்லவில்லை. இதைச் சொன்னது அதே பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவரும், திருச்செந்தூரில் இருக்கும் முக்கிய பிரமுகருமான பாலசுப்பிரமணிய ஆதித்யன். இனி அவரே பேசுகிறார், கேளுங்கள்.

கடந்த 2003 -ம் ஆண்டு நான் பாஜக தூத்துக்குடி மாவட்ட பொருளாளராகவும், திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்த போது திருச்செந்தூரில் ஆர்பாட்டம் நிகழ்ச்சிக்கு பேச வந்து இருந்தீர்கள். வழிச் செலவு பணமும் தந்து சில நூறையும் தந்தோம்.

அப்போது நீங்கள் ஒரு நடுத்தர வாழ்வில் இருந்தீர்கள் என்பதை நன்கு அறிவேன்.

அது மட்டுமல்ல மையிலாப்பூரில் நம் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடையில் ரூ 700 விலை உள்ள Sealing Fan 5 Installment க்கு வாங்கி அதில் 4 தவணை மட்டும் தாங்கள் கட்டிய விபரம் உட்பட அரசல் புரசலாக நம் பாஜகவினரே பல முறை பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். இது கூட உங்களை சிறுமைப் படுத்த இங்கு குறிப்பிடவில்லை. உங்கள் பொருளாதார சூழலை சுட்டிக் காட்டவே விரும்புகிறேன் . ஒரு தவணை உங்களால் கட்ட முடியவில்லையாம்.

யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் இன்று தாங்கள் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கின்றீர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மைலாப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்...

அசையும் சொத்துக்கள் ரூ. 48,29,891 , அசையாச் சொத்துக்கள் ரூ. 68,80,000 , கடன் ரூ.  50,000. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,16,59,891.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்...

அசையும் சொத்துக்கள் ரூ. 1,17,51,853, அசையாச் சொத்துக்கள் ரூ. 5,30,50,000, கடன் ரூ. 35,17,344. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 6,12,84,509.

ஐந்தாண்டுகளில் அக்காவின் சொத்து மதிப்பு சுமார் ஐந்து மடங்கு அதாவது 525 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறுகிய காலத்தில் இவ்வளவு பணமும் சொத்துக்களும் எப்படி வந்தன?

அத்தனையும் தானும் தனது கணவர் சீனிவாசனும் வழக்குறைஞர் தொழில் செய்து சம்பாதித்தவை என்று வானதி சமாளிக்கக் கூடும். வழக்கறிஞர் ஊதியம் எவ்வளவு...? மத்திய அமைச்சர் பினாமி என்ற கருத்து வேறு..? உறுதிப்படுத்துவதாக உள்ளது வருமானம்.

ஆனால், இந்தச் சொத்துக்கள் வானதி குடும்பத்தினர் ஊழல்களாலும், தங்களது அரசியல் சொல்வாக்கை பயன்படுத்தி முறைகேடாக சம்பாதித்தவை என்று அம்பலப்படுத்துகிறார்கள் பாலசுப்பிரமணிய ஆதித்யனும், பா.ஜ.க-வைச் சேர்ந்த அவரது நண்பர் சங்கரநாராயணனும். சைலாக் சிஸ்டம்ஸ் (Zylog Systems) என்ற நிறுவனத்தில், வானதி சீனிவாசன் திட்டமிட்டு அவரது தம்பி சிவகுமார் கந்தசாமியை களமிறக்கி நடத்திய வங்கி மோசடியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார் பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

சென்னையிலுள்ள சைலாக் சிஸ்டம்ஸ் (Zylog Systems) 1995 -ம் ஆண்டு துவங்கப்பட்ட மென்பொருள் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக வானதியின் கணவர் சீனிவாசன் இருந்திருக்கிறார்.  வானதியின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தின் படி அந்நிறுவனத்தின் 20,000 பங்குகளையும் வைத்துள்ளார்.

சைலாக் சிஸ்டம்ஸ், ஜூலை 20, 2007 அன்று ஆரம்ப பொதுப் பங்கு விநியோகத்தின் (IPO) மூலம் முதலீடுகளை பெறுவதற்காக ரூ.10 முக மதிப்புள்ள 3,600,000 பங்குகளை வெளியிட்டது. வர்த்தகம் தொடங்கும் போது அதன் ஆரம்ப விலை ரூ. 350-ஆக நிர்ணயிக்கப்பட்டது. பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் செய்வதற்கு, யார் வசம் எவ்வளவு பங்குகள் உள்ளன, எத்தனை பங்குகள் சந்தையில் வெளியிடப்படுகின்றன போன்ற இதர விவரங்களை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் (SEBI) கொடுக்க வேண்டும்.

சைலாக்கின் நிறுவனர்கள் தங்கள் வசமுள்ள பங்குகளைப் பற்றி பொய்யான மற்றும் தவறான தகவல்களை கொடுத்ததாகக் கண்டறிந்த செபி, இந்நிறுவனதையும், அதன் நிறுவனர்கள் சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் ஷேஷரத்தினம் ஆகியோரையும் பங்கு சந்தையிலிருந்து தடை செய்து 2012 -ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தன. இந்த காலத்தில் இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்தவர் வானதியின் கணவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி, இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் வசூலித்த சேவை வரி சுமார் ரூ.3 கோடியை அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.

மேலும், 2012 -ம் ஆண்டு காலகட்டத்தில் தனது ஊழியர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் கொடுக்காமலும் இருந்துள்ளது. ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியையும் (PF) அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.

சைலாக் நிறுவனம் தனது தொழில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 2009-2013 காலகட்டத்தில், யூனியன் வங்கி, பெடரல் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் பல நூறு கோடிகளை கடனாகப் பெற்றது. ஆனால், அவற்றை தொழில் வர்த்தகத்திற்கு பயன்படுத்தாமல், முறைகேடாக பல்வேறு சொத்துக்களை வாங்கிக் குவித்தனர் அதன் நிறுவனர்கள். அவற்றுள் சைலாக்கின் ஐரோப்பிய கிளை (Zylog systems Europe Ltd) வாங்கிய சொத்துக்களும் அடக்கம். அதாவது இந்திய வங்கிகளில் வாங்கிய கடனைக் கொண்டு வெளிநாட்டில் முறைகேடாக முதலீடுகளை செய்துள்ளனர். இந்த கால கட்டத்தில் ஐரோப்பிய கிளையின் இயக்குனராக வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி இருந்துள்ளார்.

மேலும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகையையும் கட்டாமல் ஏமாற்றி வந்துள்ளது இந்நிறுவனம். இதனால் 2013-ம் ஆண்டு அவ்வங்கிகள் சுமார் ரூ.740 கோடியை வராக்கடனாக அறிவித்தன. அத்துடன், மத்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்து அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்திய பொதுத்துறை வங்கிகளை பட்டை நாமம் போட்டு ஏமாற்றிய கயவர்கள் பட்டியலில் மல்லையா மற்றும் இதர முதலாளிகள் மட்டுமல்ல, சைலாக் நிறுவனர்களான சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் இராமானுஜம் ஷேஷரத்தினம் போன்ற ஆர்.எஸ்.எஸ்-காரர்களின்  நிறுவனங்களும் உள்ளன. ஆம், வானதியின் வர்க்கம் மேம்பட ‘வர்த்தக’ வசதி செய்து கொடுத்த சைலாக் நிறுவனத்தின் மூலவர்கள் சாட்சாத் ஸ்வயம் சேவகர்கள்.

கடன் கொடுத்த வங்கிகள், கடன் தீர்ப்பாயத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தன. அதில் அதிகாரபூர்வ கடன் தீர்ப்பாளரை (Official Liquidator) நியமித்து சொத்துக்களை முடக்கி, அச்சொத்துக்களை ஏலம் விட்டு நிலுவையைக் கட்ட நவம்பர் 2014 -ல் தீர்ப்பளித்தது, சென்னை உயர் நீதிமன்றம்.

மோடி அரசு பதவியேற்ற பின் நவம்பர், 2014-ல் வானதியின் கணவர் சு. சீனிவாசன் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படுகிறார். இதற்குப் பின் 2015 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சைலாக் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி சைலாக் தாய் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்க பரிந்துரைக்கப் படுகிறார்.

மோடி அரசு, “என் நாடு, என் அரசு, என் குரல்” என்ற முழக்கத்துடன் அரசில் மக்கள் பங்கேற்கும் திட்டத்தை அறிவித்து ’என் அரசு’ (mygov.in) என்ற வலைத்தளத்தை நடத்தி வருகிறது. அந்த வலைத்தளத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை சைலாக் நிறுவனம் 2015 -ம் ஆண்டில் பெற்றது.

இப்போது எல்லாப் புள்ளிகளையும் இணைத்து பாருங்கள். தலை மோடி அரசு முதல் வால் வானதி வரை இந்த ஊழல் வரலாற்றில் முக்கியமான பாத்திரத்தை ஆற்றியுள்ளார்கள்.

இதனிடையே சைலாக் நிறுவனத்தின் துணை நிறுவனமான சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் 2009 -ம் ஆண்டு யூனியன் வங்கியிலிருந்து ரூ.61.5 கோடியை குறுகிய கால கடனாகப் பெற்றுள்ளது. இணைய சேவை வழங்கல் தொடர்பான வைஃபை (WiFi) திட்டத்தில் பொருட்களை வாங்க முதலீடு செய்வதற்கென்று இந்தக் கடன் பெறப்பட்டது. இந்தக் கடனை சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை.

அது மட்டுமல்ல, போலியான நிறுவனங்களை உருவாக்கியும், போலியான ரசீதுகளை உருவாக்கியும் பொருட்களை வாங்கியதாக கணக்குக் காட்டியது சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம். அப்படி உருவாக்கப்பட்ட பெயர்ப்பலகை நிறுவனங்களின் மூலம், வங்கியில் பெறப்பட்ட நிதியை வெளியேற்றி விட்டு, நட்டமடைந்து விட்டதாக ஏமாற்றியிருக்கிறார்கள். இதைக் கண்டறிந்த யூனியன் வங்கி, சைலாக் நிறுவனர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சி.பி.ஐ) புகார் அளித்தது. மோசடி மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் ஜனவரி 30, 2017 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் தான் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது  தொலைக்காட்சி விவாதங்களில் கருப்புப் பணத்தை மீட்பதற்கு நாட்டு மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்கள். ஏடிஎம் வரிசையில் நின்று செத்த மக்களைக் கொச்சைப் படுத்தினார்கள்.

ஆயினும் வானதி சீனிவாசனின் இந்த ஊழலை மறுப்பதற்கு அவரோ அவரது பக்தாள் கூட்டமோ கடப்பாறையை விழுங்க வேண்டியிருக்கும்...

சித்தர்கள் காட்டிய கோவிலும் மனிதர்கள் கட்டிய கோவிலும்...


நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து, வென்று சிவத்தை (கடவுள்தன்மை) யடைந்த மனிதர்களை (சித்தர்களை) வழிபட்டு இருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை.

ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.

"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"

- ஆசான் திருமூலர்

என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த ஆசான் திருமூலர். இதோடு நின்று விடாது,

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"

என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!

என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.

உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது.
ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல).

கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்.

-ஆசான் வள்ளலார் - 14.

குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம்
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார்
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே.
-ஆசான் கருவூர் முனிவர் -11-

மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம்..

சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள்.

அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும்.

மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள்.

என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது.

அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.

எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள்..

அந்த வரிசையில் போகமகாரிஷி, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.

இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.

இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார்.

எனவே, ஞானிகளை பூஜிப்போம், நலம் பெற்று வாழ்வோம்..

ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும்.

நம் உள்ளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும்.

ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும் தான். எனக்கும் சேர்த்துத் தான்...

தரக்குறைவாக விமர்சித்து போஸ்டர் ஓட்டியதால் உசிலம்பட்டியில் பரபரப்பு...


திலீபனின் இறுதி உரையிலிருந்து…


என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது..

நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன.

நான் திருப்தி அடைகிறேன்.

இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன்.

ஆனால் நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழவைத்துக் கொண்டுள்ளது.

நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்.

நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான்.

நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன்.

ஆனால் பெரும் பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.

நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார்.

நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும்.

மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்..

இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும்.

எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல் தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்..

எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது..

இதில் பிழைகள் இருக்கலாம்.. இதை நீங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்..

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்...

நவம்பர் 27 அண்ணன் தியாகதிபம் லெப்.கேணல் திலீபனின் 54வது பிறந்தநாள்... புகழ் வணக்கம் அண்ணா...


தமிழ் தேசிய மாவீரர்கள் நாள்...


உன்னத இலட்சியத்திற்காக.. தமது உயிரை அர்ப்பணித்த உத்தமர்களின் நினைவுகளை.. தமிழ் மக்களது மனங்களில் இருந்து அழித்துவிட முடியாது..

எமது இன விடுதலைப் போராட்டத்திற்காக தங்களுடைய உயரிய உயிரையே அர்ப்பணித்த மாவீரர்களுடைய தினம் எப்போதும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

அவர்களது மன உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் ஒரு போதும் முடியாது...