10/06/2018

ரெண்டு படத்தையும் ஒன்றா பாத்தா பல விஷயம் புரியுது பா...


சாதி எப்படி வந்தது?


சாதியின் பரிணாமம்...

மனித இனத்தின் வளர்சியை தொழில் வளர்ச்சியால் அளவீடு செய்யலாம். அப்படி தொழில் வளர்ச்சியில் உயர்ந்திருந்த இனங்கள் தனக்கு என ஒரு தொழிலை தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்த தொழிலில் அனுபவ அறிவில் முதிர்ச்சி பெற்று தொழில் நுணுக்கங்களை கண்டறிந்தனர்.

தலைமுறை தலைமுறையாக ஒரே தொழிலை செய்ததனால் பட்டறிவின் மூலம் தொழில் நுட்பங்கள் அறிமுகமானது. நீண்ட காலமாக ஒரே தொழிலை செய்யும் குடும்பங்கள் தொழில் குலமாக மாறியது.

ஆங்கிலத்தில் உள்ள தொழில் பெயர்கள் பெரும்பாலும் ஸ்காட்டிஷ் செர்மனி பிரான்சு உள்ளிட்ட மக்களின் சாதி/குல பெயர்கள்.

Potter குயவர்
Hunter வேட்டையாடி
Mason கட்டட பணியாளர்
Fisher/Fischer/Fischer மீனவர்
Smith கொல்லர்
Sangster பாடகர்
Master ஆசான்
Jardine(garden)தோட்ட கலைஞர்
Taylor தையலர்
Shepherd மேய்ப்பர்
இப்படி இன்னும் ஏராளம்.

சீனர்கள் ஒவ்வொருவரின் சாதி/ பட்டப் பெயர் சீனர்களின் அரச குடும்பத்தை அவர்களின் வரலாற்றை குறிக்கும்.

கிருத்தவ மதத்தை தழுவிய சீனர் தாய் மொழியான சீனத்திலும் குடும்பப்பெயரை சேர்த்தும் தன் குழந்தைகளுக்கு பெயர் வைக்கின்றனர்.
Wang (king) அரசர்
Lau (han dynasty) அன் அரசாட்சி
Leong (architect) கட்டுமான வடிவமைப்பாளர்
Thong (tang dynasty ) தாங் அரசாட்சி
Fu (teacher ) ஆசிரியர்

இப்படி உலகின் பழமையான பன்பாடு நாகரிகம் கொண்ட இனங்கள் பட்டப் பெயரை பெருமையோடு தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்து கொள்கிறார்கள். தங்கள் இனத்தின் வரலாற்றை பறை சாற்றுகிறார்கள்.

சாதிய ஏற்ற தாழ்வுகள் அங்கு இல்லை. பெருளாதார ஏற்றத்தாழ்வு தான் அங்கெல்லாம் தனிமனிதனை தரநிர்ணயம் செய்ய உதவுகிறது.

அப்படி தான் தமிழரின் குலப்பெயர்கள்/பட்டப்பெயர்கள்/சாதிப்பெயர்கள்/ குடும்பப்பெயர்கள் தமிழர்களிடமும் நிலவியது.

ஒவ்வொரு தொழில்குலங்களும் தன்முனைப்போடு தொழில் வளர்ச்சியடைந்தது. ஒரு தொழில் குலத்திற்கு என்று தொழில் நுணுக்கம் தொழில் நுட்பம் என எல்லாம் இருந்தது. ஒரு குலத்தை மற்ற குலங்கள் சார்ந்திருக்க வேண்டிய தேவை எல்லா குலங்களுக்கும் இருந்தது.

கப்பல் கட்டுமானத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள். ஐந்தினைகளிலும் உணவு உற்பத்தி செய்தார்கள். ஆள் கடலில் முத்துக்குளித்தார்கள். மீன் பிடித்தார்கள். கப்பல் வழியே உலக நாடுகளுடன் வணிகம் செய்தார்கள். கட்டிடக்கலையில் கட்டுமான தொழிலில் உயர்ந்திருந்தனர். உயர் கலை நுட்ப சிற்பங்கள் செதுக்கினர். இலக்கியங்கள் படைத்தனர். என்றெல்லாம் வரலாற்றில் படிக்கிறோமே அது எல்லாம் தமிழரின் தொழில் குலங்களால் தான் சாத்தியமானது.

வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு தமிழர் சாதி பெயர்கள் பின்னால் இருக்கும் தொழில்சார் அறிவியலை பற்றி விளக்கியிருக்கிறார்.

பின் எப்படி சாதி இழிவானது?

அயலார் ஆட்சியில் அவர்களுக்கு தமிழர்களை பிரித்தாள வேண்டிய தேவை இருந்தது.

மனிதனை பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கும் வருணாசிரம படிநிலை சாதியில் புகுத்தப்பட்டது.

ஒரு சாதியை உயர்வென்றும் மற்றொன்றை தாழ்வு என்றும் கற்பிக்கப்பட்டது.

குறிப்பிட்ட சாதிகளுக்கு சலுகைகளும் ஏனைய சாதிகளை வஞ்சித்தும், சாதிகளுக்கு இடையே வெறுப்பையும் உருவாக்கினர்.

சாதியால் தொழில் வளர்சியை நோக்கி முன்னேறிய முன்னேற்றம் சார்ந்த உலகமயமாக்கலை அறிமுகம் செய்த தமிழர் சாதியின் பெயரால் துண்டாடப்பட்டு வீழ்ந்தனர்.

புராணங்கள் மூலம் பொய் கதைகளை பரப்பினர்.

கோத்திரங்கள் என்று ஒன்றை உருவாக்கி உயர்வு தாழ்வு கற்பித்தனர்.

இந்த சாதிய புராணங்கள் 16 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் தான் உருவாக்கப்பட்டது என ஆய்வாளர்கள் நிறுவுகின்றனர்.

சாதிகளால் பிரிந்திருந்தாலும் இனத்தால் அனைவரும் தமிழர்களே.

தீர்வு தான் என்ன?

அடுத்த தலைமுறைக்கு சாதிய குலங்கள் பற்றி, அவர்களின் வரலாறு பற்றி, அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் பற்றி கல்வியில் சேர்த்து பாடம் எடுத்தால் ஒரு சாதியை தாழ்வாகவோ மற்றொரு சாதியை உயர்வாகவோ யாரும் கருதமாட்டார்கள்.

சாதி தேவை தானா?

சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட சாதிகள் சாதியின் அடையாளத்தில் தான் தன் உரிமைகளை பிரதிநிதித்துவத்தை இட ஒதுக்கீட்டை பெற முடியும்.

ஒரு தேசிய இன்த்தையோ மரபினத்தையோ சாதியின் அடையாளத்தை வைத்து தான் வரையரை செய்கின்றனர்.

கன்னடர் என்றோ தெலுங்கர் என்றோ மலையாளி என்றோ அவர்களின் சாதி பெயர்களை தான் அடையாளப்படுத்துகிறது.

தமிழக அரசின் சட்டநாதன் ஆணையம் சாதிகளை வைத்து தான் தமிழர்களை வரையரை செய்கிறது.

சாதிய இழிவு அறியாமை..

ஒரு காலத்தில் தமிழர்கள் தொழில் வளர்ச்சியில் முன்னேற காரணமான சாதி.

இன்று ஒரு இனத்தை வரையரை செய்யும் அடையாளமாக மட்டும் இருக்கிறது.

ஒழிக்கப்பட வேண்டியது சாதிய படிநிலைகள் வருணாசிரம கொள்கைகள் மற்றும் ஏற்ற தாழ்வுகளை தான்..

மண்ணின் மக்களே சாதிய ஏற்ற தாழ்வுகளை  ஒழித்தால் ஒழிய சாதிய இழிவுகள் ஒழியாது...

மீத்தேன் - தண்ணீர் - அரசியல்...


நீங்கள் நினைத்தது நடக்க செய்யும் பிரபஞ்சத்திற்கான மாயாஜால நன்றி செயல் முறைகள்...


இது ஒரு அற்புதமான பிரபஞ்சம், இப்பிரபஞ்சம் எல்லா நல்ல விஷயங்களையும் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.

இப்பிரபஞ்சம் எல்லா நல்ல விஷயங்களிலும் எனக்கு சாதகமாக இயங்குகிறது . நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இப்பிரபஞ்சம் எனக்கு ஆதரவு அளித்து வருகிறது.

என் அனைத்து தேவைகளையும் இப்பிரபஞ்சம் உடனடியாக பூர்த்தி செய்து வருகிறது.

இந்த அற்புதமான பிரபஞ்சத்திற்கு நன்றி, அபரிமிதமான இயற்கை வளங்களுக்கு நன்றி..

தினமும் இதை பலமுறை சொல்லி கொண்டே இருங்கள்..

தினமும் உங்களால் நம்ப முடியாத மாற்றத்தை உணர்வீர்கள்...

உளவியல் அறிவோம்... கருத்தியல் விதைகள்...


கப்பற்படையே வைத்து உலகையே ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப் பேரரசு...


கப்பலோட்டி உலகை வென்ற இராசராச சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்...

இராசராச சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை முடிசூடிய மாமன்னன் என்றால் சாதாரணமா என்ன.

பண்டையக் காலத்திலேயே கப்பற்படை வைத்து உலகை ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப்பேரரசு.

ஆயிரம் வருடம் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, ஆயிரம் வருடங்களாக கப்பற்படையை வைத்து அரசு நடத்தியப் பெருமை உலகிலேயே சோழ பேரரசிற்கு மட்டும் தான் இருக்கிறது.

கனம் - இந்த கப்பற்படையில் நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ஒன்று பிரிக்கப்பட்டிருக்கும், அவர்களை கனம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை தலைமை தாங்கி இருந்தவரை, கனாதிபதி என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

கன்னி - தமிழில் கன்னி என்பதற்கு இளம் மங்கை என்று மட்டும் பொருள் அல்ல, பொறி என்ற மற்றொரு பொருளும் இருக்கின்றது. எதிரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கப்பற்படை வீரர்களை, கன்னி என்று அழைத்திருக்கின்றனர். இவர்கள் தான் சிறப்பு பணியில் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை நிர்வாகிப்பவர், கலபதி என்று அழைக்கப்படுவார்.

ஜதளம் அல்லது தளம் - கப்பற்படையில் சக்தி வாய்ந்த குழுவாக திகழ்பவர்களை, ஜதளம் என்பார்கள். சுருக்கமாக இவர்களை தளம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களை நிர்வகிப்பவர், ஜலதலதிபதி என்னும் நபர் ஆவார்.

மண்டலம் - கப்பற்படையின் பாதி நிரந்திர போர் குழுவை, மண்டலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களை தலைமை வகிக்க மண்டலாதிபதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பார். இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனி, தனியாகவும், குழுவாகவும் சென்று போர் புரிவதில் வல்லமைப் பெற்றவர்கள்.

நிரந்திர போர் பிரிவு நாம் முன்பு குறிப்பிட்டிருந்த, கனம் பிரிவை சேர்ந்தவர்கள் தான் நிரந்திர போர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களிடம் 100 இருந்து 150 கப்பல்கள் வரை இருக்கும். மூன்று மண்டலம் குழுவை உள்ளடக்கி இருக்கும் குழுவானது கனம் என்று கூறப்படுகிறது.

அணி - பெரிய போர்களில் ஈடுபட மட்டுமே உபயோகப்படுத்தப்படும் குழுவை அணி என்று கூறுகின்றனர். ஒரு அணியில் மூன்று கனம் குழு உள்ளடங்கி இருக்கும். 300-500 கப்பல்கள் வரை இந்த குழுவில் இருக்கும். மாபெரும் அணியான இதை தலைமை தாங்குபவர், அணிபதி என்று அழைக்கப்படுவர்.

அதிபதி - இதெல்லாம் போக இந்த அனைத்து குழுக்களையும் தலைமை தாங்கும் நபர் தான் அதிபதி. இவரின் கட்டளைகளுக்கு இணங்க அனைத்து குழுக்களும் இயங்கும். இவர் இளவரசருக்கு கீழ் இருப்பவர்.

கைப்பற்றிய பகுதிகள் - இந்த மாபெரும் கப்பற்படையை வைத்து தான், இந்தோனேசியா, யா(ஜா)வா, மாலத்தீவு, சிங்கப்பூர், இலங்கை, ஆங்கோர், கடாரம் போன்ற பல பகுதிகளை வென்றுள்ளது சோழப் பேரரசு.

நாவாய் பண்டைய தமிழர்களின்  நாவாய் என்ற கப்பற்படையின் பெயர் தான் ஆங்கிலத்தில் நேவி (Navy) என்று அழைக்கப்படுகிறது...

சாகர்மாலா திட்டமும்.. இந்திய அரசியலும்...


உடலுக்கு தேவை நடை பயிற்சி....


நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடைபயிற்சி தான் நல்ல தீர்வைத் தருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது நடைபயிற்சி போங்க என்பதாக தான் இருக்கும்.

ஒரு மணி நேரம் தொடர்ந்து நடந்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும். படிப்படியாக தூரத்தை அதிகரிக்க வேண்டும். முதலில், தினசரி இரண்டு கி.மீ நடக்க ஆரம்பித்து நிமிடத்துக்கு சுமார் 100 அடி எடுத்து வைத்து நடக்கலாம்.

இது ஆண்களுக்கு 92 முதல் 102 பாத அடியாகவும் பெண்களுக்கு 91 முதல் 115 பாத அடியாகவும் இருக்க வேண்டும். பெண்களின் பாத அளவு, கால்களின் உயரம் குறைவாக இருப்பதால், அவர்கள் அதிக அடி எடுத்து வைத்து நடந்தால் தான் ஆண்களுக்கு இணையாக நடக்க முடியும். நடைப்பயிற்சியின் போது வியர்வையை உறிஞ்சக்கூடிய தளர்வான பருத்தி ஆடையை அணிந்து கொள்வது நல்லது.

மூச்சு வாங்கும் அளவுக்கு வேக நடை கூடாது. அருகில் நடப்பவர் வேகமாக நடக்கிறார் என்று நம் வேகத்தைக் கூட்டுவது ஆபத்தில் கொண்டு போய்விடும். நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும். தோள் பட்டையை தளர்த்தி கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். அடிவயிறு சற்று எக்கியபடி நடப்பது நல்லது.

சாலைகளில் நடப்பதைவிட பூங்காக்கள், கடற்கரை, விளையாட்டு மைதானத்தில் நடப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாற்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் இருதய நிபுணரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

தசை, மூட்டு தொந்தரவு இருந்தால் அதற்கு சிகிச்சை பெற்று பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். காலுக்கு பொருத்தமான வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி காலுறைகள் (shocks), செருப்பு அணிந்து நடப்பது அவசியம். காலணியின் அடிப்பாகம் பாதத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மேடு பள்ளம் இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும்...

விழித்துக்கொள் தமிழா...


செங்கோட்டை பகுதியில்... அறிவிக்கப்படாத மின்வெட்டு..


செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில்  தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் இன்று மாலை வரை அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக செங்கோட்டை பகுதிக்கு உட்பட்ட காடுவெட்டி, மோட்டை, சதியன்மேடு, மூன்று வாய்க்கால், கண்ணுப்புள்ளி மெட்டு பகுதியில் நேற்று இரவு 9 மணி முதல் தற்போது வரை 24 மணி நேர தொடர் மின் வெட்டு  ஏற்பட்டுள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...