17/10/2018

நீ விதைக்கும் கருத்தியலை ஏற்காதவர்களிடம்.. குழந்தைகளை போல் அவர்களிடம் எடுத்து கூறு...


ஏனெனில் இங்கு மக்களின் மனநிலை பலநிலையில் இருக்கிறது,

ஆனால் அவர்களின் மனநிலை ஒரு இடத்தில் மட்டும் சரியாக இருக்கும்..

அந்த இடம் “எத்தனை நாளைக்கு தான் நாம் இந்த பொருளாதார சூழ்நிலையில் அடிமையாக இருப்பது, நமக்கென அரசியல் வாழ்வியல் இருக்காதா” என்ற மனநிலை..

அந்த மனநிலையை இங்கு ஒருமித்த கருத்துக்களில் ஒன்றிணைக்க முயற்சி செய்..

ஏனெனில் தடைகள் அதிகம் இங்கு..

வெகசன மக்களின் ஒருவன்...

இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்...


பணி வரன்முறை, ஓய்வூதியம், மருத்துவ படியை உயர்த்த வேண்டும், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எடையாளர்கள் நியமிக்க வேண்டும், வாணிபக் கிடங்கில் இருந்து எடை குறையாமல் மண்ணெண்ணெய், பாமாயில், துவரம் பருப்பு என அனைத்துப் பொருள்களையும் முறையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30  கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில், சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொள்வராகள் என்றும் 30 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடப்படும் என கூறினார்.

இன்று மற்றும் நாளை மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்...

மணல் கடத்தல் பற்றி புகார் அளித்தால் சிறையில் தள்ளுவேன் - மண்ணச்சநல்லூர் தாசில்தார் மிரட்டல்...


பெண்மையை போற்ற வேண்டாம், புகழ வேண்டாம்...


நம்மை இந்த உலகிற்கு தந்த பெண்மைக்கு இறுதிவரை ஆண்மை என்ற பலத்தோடு பாதுகாப்பாக, உறுதுணையாக இருப்போம்..

அதுவே நம்முடைய பிறவி பலன்...

பாஜக மோடியின் வாக்கு இயந்திர மோசடி....


மார்க்கங்களும் கிரகங்களும்...


1. பக்திமார்க்கம் − குரு, சனி.

2. கர்மமார்க்கம் − செவ்வாய், புதன், சுக்கிரன்.

3. யோகமார்க்கம் − சூரியன், சந்திரன்.

4. ஞானமார்க்கம் − ராகு, கேது..

இலுமினாட்டிகளும் வேற்றுக்கிரகவாசிகளும்...


மேலைநாட்டு கலைகளை கையில் வைத்திருக்கும் இந்த ஒரு விழி ரகசிய சமூகத்திற்க்கும், பிரபஞ்ச வழி ரகசிய சமூகத்திற்க்கும் என்ன தான் ஒப்பந்தம் உள்ளது.?

இதைகூற காரணம் என்னவென்றால், இனிவரும் வேற்றுகிரக உயிரினங்கள் இருப்பை பற்றிய சில பதிவுகள். மேலைநாட்டு கலைகளில் இருந்தே மேற்கோள் காட்டப்படும்..

இந்த ஒரு விழி கூட்டத்தின் பிடியில் என்னை கவர்ந்த ஒரு மேலைநாட்டு பாடகியும் உள்ளார்.

"கேட்டி பெர்ரி" (Katy Perry).
"கணீர் காந்தக் குரல் அழகியவள்", அப்பட்டமாக அவர்களின் சின்னங்களை பிரதிநிதித்துவம் செய்கிறாள்.. வருத்தமாக உள்ளது.

இறுதியாக ஒரு வேத வசனம்...

மந்தையைக் காக்கிற விக்கிரக மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயமே அவன் புயத்தின் மேலும், தன் வலது கண்ணின்மேலும் சுமரும்; அவன் புயம் உலர்ந்துபோம், அவன் வலதுகரம் வெளுக்கப்படும்  -சகரியா 11:17

இது கடவுளைக் குறிக்கும் பழமையான மற்றும் மிகவும் பரவலான அடையாளங்களில் ஒன்றாகவும் கூறப்படுகிறது,

அது எகிப்தில், இந்தியாவில் காணப்படுகிறது..

ஒன்று எகிப்தின் திறந்த கண் ஒசைரிஸ்வை பிரதிநிதித்துவம் செய்கிறது.

மற்றொன்று இந்தியாவில் உள்ள சிவனின் ஒரு கண்ணால் பிரதிநிதித்துவம் பெறுகிறது...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


ரஷ்யாவில் உள்ள வோல்கோகிராட் பிராந்தியத்தில் விசித்திரமான கல் தட்டுகளை யுஎஃப்ஒ விசாரணைக் குழுவானது கண்டுபிடித்திருக்கிறது.

இந்த கல் தட்டுகளில் டங்க்ஸ்டன், என்ற இராணுவ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தபடும் உயர் அடர்த்தி உலோகம் பயன்படுத்தி உள்ளதாக குழு கூறுகிறது. தட்டுகளின் தன்மை ஒரு மர்மமாகவே இருப்பதாகவும் கூறுகிறது.

சதித்திட்டத்தின் தத்துவவாதிகள்,
இந்த கல் தட்டுகள் பறக்கும் தட்டுகளின் உருவத்தைப் போன்ற வடிவத்தை ஒத்திருக்கிறது என,  தங்கள் பங்குக்கு கற்பனை குதிரையை பறக்க அனுமதிக்கின்றனர்," 

சர்வதேச வணிக டைம்ஸ் செய்தி "UFO Sightings Daily" இது  வேற்றுகிரகவாசிகள் இருப்பதை நிரூபிக்கிறது என்றும் மற்றும் இந்த தட்டுகள் டங்ஸ்டன் மூலம் தயாரிக்கப்பட்டது என்று கூறுகிறது.

டங்க்ஸ்டன் வொல்ஃப்ராம் என்றும் அழைக்கப்படுகிறது, இது சிறப்பு இராணுவ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது." என்று யுஎஃப்ஒ விசாரணைக் குழுவானது கண்டுபிடித்த பொருள் பற்றிய உண்மையை உறுதிப்படுத்தியது.

யுஎஃப்ஒ விசாரணைக் குழுவானது கல் தட்டுகள் பற்றி பெருமளவிலான கூற்றுக்களை வெளியிட்டுள்ளது, இது ஒரு மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருப்பதாகக் கூறியதுடன், அவர்கள் பெரும்பாலும் பூமியில் விழுவதற்கு முன்பு செவ்வாய்க்கு எதிரான தாக்குதலில் சேதமடைந்த இராணுவ டிரோன்கள் இருப்பதாகக் கூறியது.

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய கல் தட்டுகள் தற்போது சோர்கிரோவ்ஸ்கி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது, அருங்காட்சியகத்தில் உள்ள விஞ்ஞானிகள் நடைமுறை அணுகுமுறைகளை பயன்படுத்தி இந்த தட்டுகளின் வயது மற்றும் மூலக்கூறுகளை ஆராய்ந்தனர். பெரிய கல் தட்டு பாறைகள்  மனிதனால் கூட உருவாக்கப்பட வாய்ப்பில்லை என்று சில சந்தேகிக்கின்றனர், மேலும் வெறுமனே இயற்கை அரிப்பைக் கொண்ட சாதாரண பாறைகள், இந்த பறக்கும் தட்டு போன்ற வடிவத்தில் உருவாக்கியிருக்க விளைவாது என்கின்றனர்.

இந்த ஆண்டு முன்னதாக ரஷ்யாவின் ஒரு நிலக்கரி சுரங்க நிறுவனம் மற்றொரு பறக்கும் தட்டு வடிவ கல் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது, இது  சைபீரியாவில் குஸ்னெட்ஸ்க் பஸின். 40 மீட்டர் நிலத்தடி உள்ள நிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டது, இது மிகவும் பழமையானது என்கின்றனர். 1.2 மீட்டர் விட்டம் கொண்ட முழுமையான சுற்றளவு கொண்ட இந்த கல் தட்டை ஆய்வு செய்த தொல்பொருள் ஆய்வாளர்கள் இது மனிதனால் உருவாக்கிருக்க முடியாது என்று அடித்து கூறுகின்றனர்.

எண்ண விதைத்தல்...


multi beam pendulam
water drop splash

(law of attraction ) ஈர்ப்பு விதியை கொஞ்சம் வெற மாதிரி செய்ய முயற்சி செய்வேன்  அதில் இரு முறைகளை சொல்லுறேன்..

நமது எண்ணங்களுக்கு ஏற்பதான் நிகழ்வுகள் நடக்கிறது என்று நாம் அறிந்த ஒன்றே..

அப்போ நமக்கான தேவைகளை நமக்குள் விதைத்து எண்ண அலைகளை உருவாக்கினால் அது பிரபஞ்சத்தில் விதைந்து நினைத்ததை நிகழ்த்தும் நமது ஆழ்மனத்திலும் பதிவாகி அதற்கேற்ப subconscious ல் விதைத்து அது மூளையில் வளரும் அதற்கு ஏற்ப நமது அசைவுகளும் மாறும் மாற்றப்பட்டும்..

multi beam pendulam...

இந்த வகையான pendula தை அசைத்தால் அதாவது ஒரு beam ஐ இழுத்து விட்டால் அந்த குண்டு மற்ற குண்டுகளின் மீது மோதும் நாம் இழுத்து விட்ட அதே வேகத்தில் மறுபக்கத்தில் உள்ள கடைசி இரும்பு குண்டும் தானாக பின் சென்று அதே வேகத்துடன் அதே போல  அதன் அருகே உள்ள குண்டை இடிக்கும் இந்த செயல் ஓயாது இயற்பியல் விதி அப்படி
நாம் நிறுத்தும் வரை நிக்காது.

அப்படி இந்த இரும்பு குண்டுகளின் மோதலில் உருவாகும் ஒலிகளில்  அதிர்வுகள் உண்டாகும் தானே. இந்த ஒலி யானாது ஓம்(அ+உ+ம்) எனும் பிரவனத்தில் தான் சேர்கிறது.

இந்த அதிர்வுகளில் நமக்கு தேவையானதை முறையிட்டு / விதைத்து எண்ணங்களை இதன் உதவியோடு  இணைதால் பிரபஞ்சத்திடம் (ௐ ) சேர்த்துவிடும் ..

இதை நமது மனதிற்குள்ளும் செய்யலாம் ஆனால்  பின் பற்ற முடியுமா? அதுவும் எத்தனை முறை மனதில் நினைப்போம் நாம் ? எனவே இந்த முறையை பயன் செய்வேன். நாம் நல்லா இருக்கனும்னு என்ற எண்ணங்களை மற்றவர்கள் சொல்லி எண்ண அலைகளை உருவாக்காகி இறைவனிடம் வேண்டுவது போல்.

விதைப்பது : இரும்பு குண்டை இழுத்து விடும் போது முறையிடு சாமிட்ட வேண்டுவது போல வாய்விட்டு தேவைகளை சொல்லலாம்.


water drop splash...

பொதுவாக எல்லா பொருட்களும் தன்னோட நினைவுகளை பதிவு செய்து கொள்ளும் என்று நாம் அறிந்த ஒன்று தான் உயிராக இருந்தாலும் சரி உயிரற்றவைகளாக இருந்தாலும் சரி
நீரும் அப்படி பட்டது தான.

water has memory என பலரும் அறிவியல் பூர்வமாக நிறுவிறுக்காங்க பலர். இதை தான் நாம் இப்போ பயன்படுத்த போறோம்..

நான் 3 மாதங்களுக்கு முன் ஊருக்கு  சென்றிருந்த போது இதை செய்தேன் ஒரு சின்ன plastic  bottle லில் நீரை ஊற்றி அதில் எனது தேவைகளை சொல்லுவேன் கடவுளிடம் முறையிடுவது போல ஆனால் தினமும் ஒவ்வொரு தேவையை முறையிட மாட்டேன் இரண்டே தேவை முக்கியமானதேவை தான்.

தினமும் அந்த தேவை மட்டுமே முன் வைப்பேன் பின் அந்த bottleலின் கீழ் சிறு துளை போட்டேன் அதிலிருந்து நீர் கீழே சொட்டுவது போல் வடிவமலத்தேன்.

plastic bottle ல அந்தரத்தில் சில கருவிகளின் உதவியோடு நிறுத்தி 30sec க்கு ஒரு துளி தரையில் விழுந்து சிதறுவது போல் செய்தேன் , நான் வச்சிருந்த bottle அளவில் 15  நிமிடம் இந்த நிகழ்வு நடக்கும்.

தாய பழித்தாலும் தண்ணீரை பழிக்காத என்று சொல்வாங்க காரணம் நீர் எண்ணகளை பதிவு செய்யும் என்பதால்..

அதற்கேற்ப இயங்கும் நீரும். எங்க வீட்டில் உள்ள மரத்திற்கு நீரை ஊற்றும் போது அந்த நீர் மரத்திற்கு என்ன செய்ய வேண்டும் சொல்லி தான் ஊற்றுவேன்.

(சாபம் விடும் போது கமண்டலத்தில இருக்கிற நீரால அவர்களோட வார்த்தைகளை /மந்திரங்களை/எண்ணங்களை விதைத்து தெளிச்சி விடுவாங்க may be இதுவாக கூட இருக்கலாம்)

எனது எண்ணங்களை பதிவு செய்த நீர்கள் ஒவ்வொரு துளியாக தரையில் விழுந்து தெரித்து உருவாக்கும் அதிர்வுகள் நமது எண்ணங்களை ஒலிக்கிறது. அதிர்வாகளில் எனது எண்ணங்கள்  இணைந்து பிரபஞ்சத்தில் விதைக்கிறது.

இப்படியும் எண்ணங்களை விதைத்து அறுவடை செய்யலாம்...

நீயும் நானும் ஒரு மேம்பட்ட பரிணாமத்தில் ஜனனித்திருக்கலாம்...


இந்த வாழ்க்கை நமது வாரஇறுதி விடுமுறை நாளை கழிக்க நம் பரிணாமத்தில் வடிவமைக்கப்பட்ட நாம் விளையாடும் ஒரு விளையாட்டாக இருக்கலாம்.

எந்த பரிணாமமாக இருந்தால் என்ன ? அதிகாரம் எங்கும் இருக்கும்.. நம் பரிணாமத்தில் அதிகாரத்தில் உள்ளவன் அவனுக்கு பிடித்தவாறு மூளை செயல் பாடு , சுற்றுசூழல், காலக்கட்டம் ஆகியவற்றை அவனது கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருக்கலாம். அவ்வளவு ஏன் நம் பரிணாமத்தில் கீழ் நிலையை சேர்ந்தவன் தன் நிஜ வாழ்வில் அனுபவிக்காத வாழ்க்கையை, அதிகாரத்தை அனுபவிக்க இந்த விளையாட்டில் மேம்பட்ட கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம். என் சிலர் கடவுள் கதாபாத்திரங்களில் கூட விளையாடலாம்.

நீயும் நானும் அருகருகே அமர்ந்து இந்த ஆட்டத்தை விளையாடி கொண்டிருக்கலாம். ஒரு ஆட்டத்தில் நண்பர்களாக, ஒரு விளையாட்டில் விரோதிகளாக, சில நேரம் பாலினத்தை மாற்றி, விளையாட குறைவான நேரம் கிடைக்கும் நேரத்தில் ஈசல்களாக, சில நேரங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் என பல் வேறு சூழ்நிலைகளில் பல் வேறு அனுபவங்களை பெற்றிருக்கலாம்.

எனினும் நான் ஏன் இந்த ஆட்டத்தில் இந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்தேன் ? விளையாட்டை முடித்த பின் நான் என்னை பார்த்து கேட்கப்போகும் முதல் கேள்வி.

அதே போல் கடவுளுக்கு ஒரு செய்தி ( நம் பரிணாமத்தில் இந்த ஆட்டத்தை வடிவமைத்தவனுக்கு ) " உன் விளையாட்டு சலிப்புத்தட்டத் தொடங்கிவிட்டது ".

ஒரே ஒரு சுவாரசியமான ஆசை, என்னுடைய தற்போதைய கதாபாத்திரம் இந்த விளையாட்டை விளையாடும் என்னுடைய உண்மையான உடல் (எண்ணம்) தொடர்புகொள்ள முடியுமா ? அப்படி தொடர்பு கொண்டவர்களைத்தான் " முக்தி " பெற்றோர் என்கிறோமா ?

இப்படியும் இருக்கலாம் ஒரே ஒரு மேம்பட்ட எண்ணோட்டம் பல கதாபாத்திரங்களை வடிவமைத்து அனைத்து கதாபாத்திரங்களையும் அதுவே விளையாடிக் கொண்டிருக்கலாம்.

என்ன இருந்தாலும் எண்ணோட்டங்கள் அனைத்தும் நதிபோல் ஓடி இறுதியில் பெரும் எண்ண கடலில் சேர்கின்றன. ஒவ்வொரு எண்ணங்களும் ஓடும் வழியில் பல்வேறு அனுபவங்களை திரட்டி இறுதியாக ஒற்றை எண்ணக்குவியலில் விழுகிறது.

எது எப்படியோ ஆட்டம் முடிந்ததும் நம் பரிணாமத்தில் சந்திப்போம்...