26/08/2020

அங்க போய்... அதை பாக்க எதுக்குடா நீங்க சட்டசபைக்கு போகனும் 🤣😂😅


இல்லைனா மட்டும் அப்டியே அறுத்து தள்ளிருப்பீங்க 🤣😂😅


திமுக கனிமொழி கலாட்டா...


கொரிய மக்களின் தெய்வம் ஒரு தமிழிச்சி...



மறைக்கப்பட்ட தமிழர்கள் வரலாறு
தமிழர் வரலாறு எப்படி மறைக்கப்பட்டது, திரிக்கப்பட்டது.

ஒரு உதாரணம்..

கொரிய நாட்டின் மன்னன் சுரோவை மணந்தவர் நெடுந்தொலைவில் உள்ள ஒரு நாட்டின் இளவரசி.

அவர் படகுகள் மூலமாக கொரியாவுக்குச் சென்று மன்னனை மணந்தார். அந்த இளவரசியின் படகு புறப்பட்ட இடம் ஆயுத்த, இதுதான் கிடைத்த தகவல்கள்.

இங்கேதான் டிவிஸ்ட் வைத்தார்கள்.. நாக்பூர் உருவாக்கிய வரலாற்றாய்வாளர்கள்.

அந்த இளவரசி அயோத்தியாவின் இளவரசி.

அவர்தான் கொரிய மன்னனை மணந்தவர் என்று புத்தகம் எழுதியதுடன், கொரியர்களையும் நம்பவைத்து அவர்களினன் அயோக்கியத்தனத்தால்  அயோத்தியாவில் நினைவு மண்டபம் வரை எழுப்பி விட்டார்கள்.

ஆனால் உண்மையை அறிய.

பேராசிரியர் கண்ணன் இதுபற்றிய ஆய்வுகளைத் தொடங்க, கடல்சார் பண்பாட்டாய்வாளர் அய்யா ஒரிஸ்ஸா பாலு அவர்கள் இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து ஒரு பெருமுயற்சி எடுத்து இதுபற்றி ஆய்வு மேற்கொண்ட போது..

அயோத்தியாவில் கடலே இல்லை என்பதில் தொடங்கி அந்த இளவரசி மற்றும் அவரது வழிவந்தவர்கள் ஆகியவர்களைப் பற்றியெல்லாம் ஆய்வு மேற்கொண்ட போது, அந்த இளவரசியின் பெயர் செம்பவளம்.

அவர் புறப்பட்ட இடம் ஆயுத்த என்று அப்போது அழைக்கப்பட்ட தற்போதைய கன்னியாகுமரிப் பகுதி என்பதையும் நிரூபித்தனர்.

இதற்கேற்றார் போலவே, இரு நாட்டு கலாச்சார, பண்பாடு, மொழிக்கலப்பும் உள்ளதையும் பல தரவுகள் மூலமாக நிரூபித்தனர்.

இதை கொரியர்களும் ஏற்றுக் கொண்டதுடன், கொரிய துணைத் தூதரகம் இதுபற்றிய தெளிவான வரையறையைக் கொண்டுள்ளதுடன், கொரியாவில் பலலட்சம் பேர் வணங்கும் வகையிலான கடவுளுக்கு ஒப்பானவர் செம்பவளம் ஒரு தமிழச்சி என்பதை ஏற்றுக் கொண்டார்கள்.

செம்பவளம், படகு மூலமாகச் செல்லும் போது படகை (Balance) சமநிலை செய்வதற்காகக் கொண்டு சென்ற பவளப்பாறைகளை இன்னமும் வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் கொரியர்கள்.

தமிழின் வேர்கள் மிக ஆழமானவை, அறிவார்ந்தவை...

பாஜக தெலுங்கு முருகா பதில் சொல்லுடா...


பெரியார் எனும் கன்னடர் ராமசாமி நாயக்கர் வாயில் இருந்து உதிர்ந்த வார்த்தைகள்...



"சிலப்பதிகாரம் ஒரு தேவடியாள் கதை. தேவடியாள் எப்படி வெளியே அழகாக, உள்ளே வஞ்சகத்துடன் இருப்பாளோ அதுபோலவே சிலப்பதிகாரமும்"

"வள்ளுவன் மூடநம்பிக்கையும் ஆரிய மத கருத்தையும் சொன்னான். திருக்குறள் ஒரு மலம். அதை வீசி எறி"

"தமிழனுக்கு இலக்கியம், வரலாறு, குடும்பம், பண்பாடே கிடையாது. இங்கு பிராமணன் வந்து எழுதியதும், பிராமண அடிமை எழுதியதும்தான் இலக்கியம்"

"தமிழில் இலக்கியம், வரலாறு என்ன இருக்கிறது? தமிழை விட்டால் என்ன கேடு? தமிழ்த்தாய் சத்தில்லாமல், அதன் பிள்ளைகள் நடைப்பிணமாகவே இருக்கிறார்கள்."

"இந்தி எதிர்ப்பு அரங்குக்கு போனேன். இந்திக்கு பதில் இங்கிலீஷ் போதனாமொழி என ராஜகோபாலாச்சாரி சொன்னார். நான் இங்கிலிஷ் போதனாமொழி மட்டுமல்ல. பேச்சுமொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ் எழுத்துகளை நீக்கி, இங்கிலீஷ் எழுத்துகளை வைக்கவேண்டும் என்றேன்."  - பெரியார்

1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சனவரி முதல் நாளில் இரண்டாவது உலகத்தமிழ்மாநாடு நடத்தப்பட்டது. அப்போது  திருவள்ளுவர், கம்பர் உள்ளிட்ட பத்து தமிழ்ச்சான்றோர்களின் சிலை திறக்கப்பட்டது.

அப்போது தந்தை பெரியார் "உலகத்தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்! இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?" (விடுதலை 15.12.1967) என்று அறிக்கை விட்டார். தனது எதிர்ப்பை மேலும் காட்டுவதற்காக பெரியாரால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந் நூலின் பெயர் "தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?".
பிறகு அந்த நூலின் தலைப்பு  "தமிழும் தமிழரும்" என்று மாற்றப்பட்டது. தற்போது வரை ஐந்து பதிப்புகள் திராவிடர்கழகம் சார்பில்  வெளி வந்துள்ளது. "தமிழ் நீசபாஷை" என்று  கூறும் ஆரிய நூல்களுக்கும், "பெரியார்  தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்று எழுதிய இந்த நூலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

ஈ.வே.ராமசாமி பற்றியும் திராவிடம் பற்றியும் தலைவர்கள் கருத்து:

பொதுவுடைமை போராளி சீவானந்தம்:

1957ஆம் ஆண்டில்
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பின் இரட்டைத்தன்மை குறித்தும், அவரின் சாதி ஒழிப்புக்கொள்கை குறித்தும்  ஒரு பொதுக்கூட்டத்தில் தோலுரித்துப் பேசினார். பா.சீவானந்தம்.

அது வருமாறு: "விரும்பினால் இராம மூர்த்தியை ஆதரிப்பார், இராஜ கோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார், இது ஒர் சித்தம்! வேறொரு பித்தம் கிளம்பினால், அக்கரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார். நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், ஸ்ரீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்கு ஒரு காரணம் சொன்னார். இன்று ஜாதிஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்லுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார். அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நாடறியும். அவர் காட்டிய வழியில் தமிழ்நாட்டில் ஜாதிய வெறியும், ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய கருத்து" என்றார்.

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்:

பெரியார் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கத்தை திடீரென்று 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று மாற்றினார். இதன் மூலம் எழுந்து வந்த தமிழ்த் தேசிய எழுச்சிப் போராட்டம் திசை திருப்பப்பட்டது. இதனை கி.ஆ.பெ.வி.யின் மனம் ஒப்புக் கொள்ள வில்லை. பெரியார் மீது 25 குற்றச்சாட்டுகளை கூறி நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார். பிறகு 1994இல் நீதிக்கட்சி 'திராவிடர் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்த போது அக்கட்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இது குறித்து தான் நடத்திய 'தமிழர் நாடு' (1950) இதழில் எழுதினார்: "நான் திராவிடர் கழகத்தில் இருக்கவுமில்லை. விலகவுமில்லை. அவர்கள் தான் 'தமிழ் வாழ்க' என்பதிலிருந்து 'தமிழ்நாடு தமிழருக்கே' என்பதிலிருந்து 'தமிழ்க்கொடி' தூக்குவதிலிருந்து விலகிப்போனவர்கள்."

நாவலர் சோமசுந்தர பாரதியார்:

"தமிழன் தன்னைத் தமிழெனன்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டுத் திராவிடன், திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? சுயமரியாதை, சுயமரியாதை என்று ஆரியமொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் தன்மானம் என்று தமிழாகப் பேசுகிறார்கள்" என்று இடித்துரைத்தார்.

 1953 தங்கோவின் தமிழக எல்லை தற்காப்பு மாநாடில்,
"நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்து விட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை, திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று" என்றார்.

அண்ணல் தங்கோ:

'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே காதில் நாராசம் பாய்ச்சியது போல இருக்கிறது " என்று 1950 முத்தமிழ் மாநாட்டில் பேசினார்.

உணர்ச்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்:

"அண்ணல்! பெரியாரும், அண்ணாத்துரையும் இல்லாத ஊருக்கு (திராவிட நாடு) வழிகாட்டி விட்டார்கள்!. தமிழினத்தை திசை திருப்பி விட்டார்கள். ஆனால் இறுதியில் உன்றனின் தனித்தமிழ்நாடு என்ற குறிக்கோளே வெற்றி பெறும்! அன்று தமிழகம் உன்னை நினைக்கும்" என்று தங்கோவிடம் கூறியுள்ளார்.

"நமக்கு திகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம்" என்றார்.

குடும்ப விளக்கு நூலின் 2ஆம் பதிப்பு 1960லும் 3ஆம் பதிப்பு 1963லும் வந்தது. இவ்விரு பதிப்பிலும் மேற்படி பாடலில் வரும் திராவிடன் என்பது தமிழன் என்றும் திராவிட மக்கள் என்பது தமிழ்மக்கள் என்றும் மாற்றப்பட்டது.
"....தமிழன் என்று நீ செப்படா தம்பி"
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
வாழிய தமிழ் மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!"

தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகள் என்று பெரியார் கூறினார். அப்போது,
பாவேந்தர் பாரதிதாசன்,
 "நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி! -முறைப்படி நூலைப் படி! -சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி!" என்று பெரியாருக்கு உறைக்கும்படி கூறினார்.

வடகெல்லை மீட்பு போராளி மா.போ.சிவஞானம்:

பெரியார்: தாய்ப்பாலை -தமிழை- எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?

ம.பொ.சி:

தமிழ்மொழியோடு ஆங்கிலத்தையும் பயில வேண்டும், அதுவே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதல்ல பெரியார் கட்சி. "தமிழைப் படிக்க வேண்டாம்; ஆங்கிலம் படித்தாலே போதும். அதுவே வீட்டு மொழியாக- நாட்டு மொழியாக இருக்கலாம்" என்பது தான். இது "பரங்கி மொழிப் பைத்தியம்" அல்லாமல் வேறு எதுவோ? ஆனால் பெரியார் இன்றளவும் வீட்டில் கன்னடமும் நாட்டில் தமிழும் பேசித்தான் நடமாடுகிறார். ஆங்கிலத்தில் பேசுவதில்லையே!

இப்படி தமிழர் தலைவர்களை புரக்கணித்து, எதிர்த்து தமிழியத்தை விழுங்கி திராவிட கருத்தியலை திணித்தார்.

தமிழர் இன அடையாள ஒழிப்பு
தமிழ் ஆட்சி மொழியாவதற்கு எதிர்ப்பு
தமிழ் எல்லை மீட்புக்கு மறுப்பு
என தமிழினத்திற்கு சொல்லொனா துரோகம் செய்தவர் தான் ஈ.வே.ராமசாமி.

இன்றைய தமிழரின் இழிநிலைக்கும், மரபு வளங்கள் இழந்த நிலைக்கும், தமிழ் அழிந்து வரும் நிலைக்கும், தமிழர் உரிமை இழப்பிற்கும், அயலார் ஆட்சிக்கும் காரணமானவர் தான் ஈ.வே.ராமசாமி.

அயலார்கள் தமிழர் மேல் எளிதாக அதிகாரத்தை செலுத்தவும், தமிழர்கள் மேல் விமர்சனங்கள் வைக்கவும், தமிழர் நாட்டில் அழிவு திட்டங்களை திணிக்கவும், மண்ணின் மைந்தர்கள் தாய் மண்ணை ஆள்வதை இனவாதம் என்று கருத்தாக்கம் செய்யவும், வழிவகுத்தவர் தான் இந்த ஈ.வே.ராமசாமி.

இவரின் முகத்திரையை பயன்படுத்தி தமிழர் விரோத அரசியல் நடத்தவே இவர் உதவுகிறார் என்பதை தாண்டி தமிழர்களுக்கு ஈள்ளளவும் பயனில்லை என்பதை தமிழர் இனம் உணர தொடங்கிய காலம் இது.

தமிழியத்தால் வஞ்சனைகளையும் பகைகளையும் வென்றெடுப்போம். நாளை பறக்கும் தமிழ் கொடி மீது உறுதி. அமைய போகும் தமிழர் நாட்டின் மீது உறுதி. திழைக்கப் போகும் தமிழர் நல்லாட்சி மீது உறுதி...

விசிக திருமா விற்கு.. மாநில சுயாட்சி என்றால் என்னவென்று முதலில் தெரியுமா.?



விசிக தொடங்கி இதுவரை தமிழராக ஒரு முறை கூட தனித்து நின்று தேர்தலை சந்தித்தது இல்லை...

திராவிடத்தின் காலையே நக்கி பிழைப்பு நடத்தும் விசிக..

மாநில சுயாட்சி பற்றி பேசுவதே அரசியல் வியாபாரம் தான்..

அனைத்து மாநிலமும் அந்தந்த மொழிக்காரன் ஆளும் போது...

இங்கு எழுச்சி தமிழன் என்று சொல்லிக் கொண்டு தானும் ஆள நினைக்காமல்..

தமிழனாக தமிழ் தேசியக் கொள்கை கொண்டவர்களையும் இன வெறியர்கள் என்று சொல்லிக் கொண்டும்...

திராவிடம் என்ற பேரில் தெலுங்கரை ஆள வைத்து தமிழனை அடிமையாக வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்ற வேலையை மட்டுமே செய்துக் கொண்டிருப்பதும்.. எல்லாமே மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுவது விசிக வும் தான்...

அதை போலவே.. தமிழ் தேசியத்தை உருவாக்கி தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும் என்று... போராடிக் கொண்டிருக்கும்.. பாமக மற்றும் நாதக வை.. எதிர்த்து திராவிடத்துடன் கூட்டு வைத்து அழிக்க நினைக்கும் இந்த விசிக திருமா...

திராவிடம் என்ற பேரில் தெலுங்கரை ஆள வைக்க நினைக்கும் விசிக திருமா.. மாநில சுயாட்சி பற்றி பேசுவதே அரசியல் வியாபாரம் மட்டுமே...

குறிப்பு : விசிக திருமா என்றுமே தமிழ்தாட்டை தமிழன் தான் ஆளணும் என்று சொல்ல மாட்டார்... காரணம் புகைப்படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்...

https://youtu.be/qh5hiRLqcNs

திமுக ஓட்டுக்காக அடுத்து பழனிக்கு காவடி எடுக்கும்...


அப்படி தானே... நடத்துங்க PK நாடகத்தை...

தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கு என்று சொன்னால் அது தமிழர்களுக்கானது...



ஆனால்.. விசிக திருமா சொல்வது தமிழ்நாட்டு வேலை தமிழ்நாட்டு மக்களுக்கு என்று திராவிட திருட்டு வேலையை தன் தெலுங்கு திமுக முதலாளிக்கு வேலை பார்க்கிறான்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...

தெலுங்கர் திருமா... தெலுங்கர் ஸ்டாலின் க்கு தான் கூஜா தூக்குவார்...

கன்னட ஈ.வே. ராமசாமி நேர்மையான இறை மறுப்பாளரா?


நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன் - ஈ.வே.ரா  (விடுதலை 1.1.1962).

ஆனால் ஈ.வே.ரா குடியரசு இதழைத் தொடங்கிய போது வயது 46. அந்த முதல் இதழில்...

இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக. என்று எழுதியுள்ளார்.

குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கி வைத்து ஈ.வே.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்...

அதாவது 46 வயது வரை இறை நம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வே.ரா எழுதியுள்ளார்.

நன்றி:- முதல் ”குடியரசு” சில பிரச்சனைகள், விமர்சனங்கள்.
ஆசிரியர்: முருகு இராசாங்கம்...