கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதல் அணுஉலை, முழுமையாக இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், ரஷ்யா-இந்தியாவின் பொறுப்பில் செயல்பட்டுவந்தது..
கூடங்குளத்திலுள்ள அணுஉலை, 1000 மெகாவாட் உற்பத்தித்திறன்கொண்டது. இது, முழுக்க முழுக்க ரஷ்யத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது.
இங்கு தற்போது, இரண்டு அணுஉலைகள் செயல்பட்டில் உள்ளன.
மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகளின் கட்டுமானப் பணி தற்போது நடைபெற்றுவருகிறது.
கூடங்குளம் அணு மின்நிலையம், ரஷ்யாவின் மிகப்பெரிய அணுசக்தி நிறுவனமான ரோசாட்டமின் (Rosatom) துணை நிறுவனமான ஏ.எஸ்.இ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. முதல் இரண்டு அணுஉலைகள், ஏ.எஸ்.இ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவந்தது.
இந்த நிலையில், இந்திய அணுமின் கழகம் - ரஷ்யா ரோசாட்டம் நிறுவனத்துக்கு இடையே கூடங்குளம் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகி உள்ளது.
அந்த ஒப்பந்தத்தில், முதல் அணு உலையின் முழுப் பொறுப்பும் இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.