செங்கோட்டையன் 37 பாகங்கள் 32, 830 வாக்காளர்களுக்கு , ரூ. 13 கோடியே 13 லட்சத்து 20 ஆயிரம்..
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் 38 பாகங்கள், 33, 193 ஓட்டுகள் ரூ. 13 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் என்றும் கூறப்பட்டுள்ளது...
ராஜ்யசபா எம்.பி., வைத்திலிங்கம், 27,837 ஓட்டுகள், ரூ. 11 கோடியே 13 லட்சத்து, 48 ஆயிரம்...
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 36 பாகங்கள், 32,092 வாக்காளர்களுக்கு ரூ.12 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரம்...
மின்சார துறை அமைச்சர் தங்கமணிக்கு 37 பாகங்கள், 31, 683 வாக்காளர்களுக்கு, ரூ.12 கோடியே, 67 லட்சத்து, 32 ஆயிரம்..
உள்ளாட்சி துறை அமைச்சர் வேலு மணிக்கு 42 பாகங்கள், 27,291 வாக்காளர்களுக்கு ரூ.14 கோடியே, 91 லட்சத்து, 64 ஆயிரம்..
நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு 33 பாகங்கள் 29219 வாக்காளர்களுக்கு ரூ.11 கோடியே 68 லட்சத்து 76 ஆயிரம்...
என அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது...
மொத்தம் 89,65,80,000 ரூபாய்..
இவை ஓட்டுக்காக ₹4000 வீதம் வாக்களர்களுக்கு வழங்க ஏறக்குறைய
₹90 கோடி ரூபாய்.. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது..
இதுவரை ₹50 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.
இனியும் என்ன தயக்கம்.. வெளிபடையாகவே பணம் தருவது தெரிகிறது.. அதை அமைச்சர்களே முன்னின்று பிரித்து வழங்கியதற்கான ஆதாரம் சோதனையின் போது சிக்கியிருக்கிறது..
அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்து விசாரிப்பது தானே முறை.. ஆளுநர் அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டு முழு அளவிளான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்...
எப்படியும் வெற்றி பெற வேண்டும் அதைவிட பன்னீர் அணியைவிட கூடுதலாக வாக்குகளை பெற வேண்டுமென்பதற்காக ₹90 கோடியை சதாரணமாக செலவு செய்கிறார்கள்..
தினகரனுக்கு எங்கிருந்து வந்தது இந்த பணம்.. வரிஏய்ப்பு செய்து ₹28 கோடியை இன்னமும் அபதாரமாக செலுத்தாமல் இழுத்தடிக்கும் தினகரன் ₹90 கோடியை சர்வசாதாரணமாக செலவிட்டு ஜெயிக்க பார்க்கிறார்..
முதலில் பெரும் பொருட்செலவை செய்த இவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.. பிறகு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்..
நியாயமான தேர்தலை உறுதி செய்ய வேண்டும் ஆணையம்.. அப்போது தான் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை மிளிரும்.. இல்லையெனில் நேரடியாகவே IPL போல ஏலம் விட்டு விடலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.