நீதிபதி கர்ணன் விசயத்தில் முக்கிய கேள்விகள் இனி எழும்.
1) SC, ST வன்கொடுமை புகார் அளித்த கர்ணனின் மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
2) நீதிபதிகள் 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்த கர்ணனின் புகார் ஏன் விசாரிக்கப்பட வில்லை. நீதிபதிகள் சட்டத்திற்கு அப்பால்பட்ட புனிதர்களா?
3) கீழ்கோர்ட் நீதிபதிகள் நியமனம் தொடர்பான விதிமீறல், ஊழல் நீதிபதிகளின் வங்கி கணக்குகள் ஆராயப்பட வேண்டும் என சொன்னதன் மீதான நடவடிக்கை என்ன?
4) சங்கர மடம் போல நீதிபதிகளே தனக்கு அடுத்த நீதிபதிகளை நியமிக்கும் போக்கை மாற்ற சொன்ன கர்ணனின் கோரிக்கை ஆராயப்படுமா?
4) உச்ச நீதிமன்றம் மீது புகார் சொன்ன கர்ணனை பாராளுமன்றம் வழியே மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, 7 நீதிபதிகள் சேர்ந்து கொண்டு கர்ணனின் பதவியை செயலிழக்க செய்ய முடியுமா?
5) பாராளுமன்றம் செய்ய வேண்டிய நீதிபதி மீதான நடவடிக்கையை தானே எடுக்கும் அளவு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடவுளுக்கு நிகரானவர்களா?
6) உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது உச்ச நீதிமன்றம் அதிகாரம் செலுத்த முடியுமா? உயர் நீதிமன்றம் தனி சுதந்திரமானதா அல்லது உச்ச நீதிமன்றத்தின் கூலியாளா?
7) நீதிபதி கர்ணனின் புகாரை விசாரிக்க உத்தரவிடாமல், பாராளுமன்றத்திற்கு அனுப்பாமல் கோர்ட் அவமதிப்பு என சிறைத்தண்டனை அளிப்பது சட்டப்படி செல்லுமா?
நீதிபதிகள் எனும் பாசிச பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற விவாதங்களால்..
குடுமி நீதிமன்றம் எனும் ஆரிய இனவெறி தாதாக்களுக்கு முடிவுரை எழுதப்போகும் தமிழர் நீதிபதி கர்ணன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.