அமெரிக்காவில் இருக்கும் நண்பர்களோ அல்லது உறவினர்களோ சொல்வதை கேட்டிருப்பீர்கள், அங்கு மருத்துவத்திற்கு ஆகும் செலவு எவ்வளவு என்று...
சாதாரண அறுவை சிகிச்சைகளுக்கே 8 முதல் 10 லட்சங்கள் ஆகும். பிரசவ செலவுகளுக்கு எவ்வளவு ஆகும் என்று கேட்டுப் பாருங்கள். அங்கு முறையான மருத்துவக்காப்பீடு எடுக்கவில்லையெனில் சில சமயங்களில் மருத்துவ செலவுகளுக்காக ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பையும் இழக்க நேரிடும்.
இவற்றை எல்லாம் விடுங்கள், உங்களிடம் பணமே இருந்தாலும் ஒரு மருத்துவ வல்லுனரிடம் அப்பாயின்டமென்ட் வாங்க மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும்.
அங்கு காப்பீட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் ஒட்டுமொத்த மருத்துவதுறையும் உள்ளது.
சென்னையில் 300 ரூபாய் கட்டணத்தில் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணரை அதே நாளில் பார்க்க முடியும். கொஞ்சம் காத்திருப்பதாக இருந்தால் அரசு மருத்துவமனையில் இலவசமாகவே பார்க்க முடியும்.
இனி நீட் என்ற பெயரில் ஏழை, நடுத்தர மாணவர்கள் மருத்துவ துறையில் நுழைவதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்துவார்கள்.
கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் வேலை செய்பவர்களுக்கு மருத்துவ மேல் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டை நிறுத்துவதின் மூலம் மருத்துவர்கள் அரசு வேலைகளில் சேர்வதையே நிறுத்துவார்கள்.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவ படிப்பிற்கான அனுமதி அளிக்கப்படும்.
மருத்துவக்காப்பீடு இல்லாமல் இங்கும் மருத்துவம் பார்க்கவே முடியாத நிலைமைக்கு தள்ளப்படுவோம்.
ஆம் நாம் அமெரிக்கா போல் வளரப்போகிறோம். இந்தியா வல்லரசாக நீட் தேர்வை ஆதரித்து நாம் மீண்டும் பிச்சைகாரர்களாவோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.