அன்று : நாம் தமிழர் மணி செந்தில்...
ஒரு முக்கிய அறிவிப்பு...
தலைமை அலுவலகம்,
நாம் தமிழர் கட்சி. 19-04-2015
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் சீரிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
தமிழ்ச்சமூகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு,சாதி மத எதிர்ப்பு, பெண்ணடிமை தகர்ப்பு,போன்ற பல்வேறு தளங்களில் தந்தை பெரியார் ஆற்றியுள்ள பங்களிப்பினை என்றும் மிகவும் நன்றியுடன் நினைவு கூர்கின்ற நாம் தமிழர் கட்சி, அவரை தனது பெருமைமிக்க வழிகாட்டிகளில் ஒருவராக வைத்து போற்றுகிறது...
சமீப காலமாக இணைய வெளிகளில் பெரியார் தொடர்பான கண்டிக்கத்தக்க,அருவருக்கத்தக்க, அவதூறு மிக்க பதிவுகள் உலவி வருவதை நாம் கவனிக்கிறோம். மேற்கண்ட பதிவுகளில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலரின் பங்களிப்பினையும் நாம் கண்காணித்து வருகிறோம். இந்துத்துவா-காவி அபாயம் சூழ்ந்துள்ள இக்காலத்தில் தந்தை பெரியாரை இழிவுப்படுத்துகிற எச்செயலும் இந்துத்துவா-காவி கும்பலுக்கு வலு சேர்க்கிற செயல்களாகவே அமைந்துவிடும் என்பது உறுதி.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ்த்தேசிய இன விடுதலைப்பாதையில் மாபெரும் வழிகாட்டியாக தந்தை பெரியார் விளங்குகிறார் என்று நேற்று நடந்த அண்ணல் அம்பேத்கார் வீரவணக்க பொதுக்கூட்டத்திலும் தொடர்ச்சியாக பல்வேறு கூட்டங்களிலும் புகழாரம் சூட்டி வருகிறார். கட்சியின் பொது கருத்தியல் இவ்வாறு இருக்க, தந்தை பெரியார் குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிடும் எவரும் நாம் தமிழர் கட்சிக்கு தேவை இல்லை எனவும், அவர்கள் கட்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் எனவும்,இந்த அறிவிப்பினையும் மீறி தந்தை பெரியார் குறித்த அவதூறு செய்திகளை வெளியிடும்,பரப்பும், கீழமை வார்த்தைகளால் விமர்சிக்கும் எவரும் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கிட நாம் தமிழர் இணையத்தள பாசறை பரிந்துரைக்கும் எனவும் இதன் மூலம் கண்டிப்பாக அறிவிக்கப்படுகிறது.
கட்சியின் கட்டுப்பாட்டிற்கு, கட்சியின் பொதுநோக்க கருத்தியலுக்கு விரோதமாக செயல்படுவோரை கண்காணிக்க இணையத்தள பாசறையின் நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், அனைத்துப்பாசறை பொறுப்பாளர்கள்,செயல்வீரர்கள், ஆதரவாளர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
-மணி செந்தில்,சே.பாக்கியராசன்
இணையத்தளப்பாசறை தலைமைப் பொறுப்பாளர்கள்
நாம் தமிழர் கட்சி.
இன்று : பெரியாரை தமிழின தலைவராக ஏற்க முடியாது.
தேவைக்கு ஏற்ப கொள்கை மாற்றி சந்தர்ப்பவாத சுயநல ஒட்டு.திராவிட தமிழ் தேசிய அரசியல்
பாவம் இது புரியாமல் அவதி படும் தொண்டர்கள்..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.