12/05/2017

தமிழன் திராவிடனும் அல்ல.. இந்தியனும் அல்ல...


சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது...

முதலையை முறியடிப்பது எப்போது?
சேற்றிலிருந்து எழுவது எப்போது?

நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம். இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்.

திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது.

தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இளித்தவாயனாக வளம் வருகின்றார்கள்.

வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது. அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக் கொண்டுள்ளது.

தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல.. தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டு வந்துவிட்டனர்.

கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது.

ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.

இதுதான் திராவிடம் செய்த கோலம்..

தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்து போனது.

தாழ்ந்த தமிழகம் தலை நிமிர. இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்.

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டும்.. தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.