இயேசு நாதர் பிறப்பதற்கு முன் பல நூற்றாண்டுகளாக தமிழக எகிப்து வணிக தொடர்பு இருந்துள்ளது..
எகிப்து அரசன் ஃபாரோ (பிர்அவுன்) காலத்திலேயே தமிழக வியாபாரிகள் பாரோவிடம் வியாபார தொடர்பு வைத்து இருந்தனர்.
அதனை தொடர்ந்து செய்துவந்த நிலையில் தான் பல வருடங்கள் கழித்து ரோமர்கள் எகிப்தை கைப்பற்றுகின்றனர். இந் நேரத்தில் ரோமர்களுக்கும் வியாபார தொடர் தொடர்கிறது.
கப்பல் வழியே செல்லும் போது கடல் கொள்ளையர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகின்றது.
இதை தடுக்க கப்பலில குறிப்பார்த்து வில் எய்தக்கூடிய படைகளையும் சேர்த்தே கூட்டி சென்றனர் இருப்பினும் சொற்பமான பொருட்களை மட்டுமே கொள்ளையர்ககளிடமிருந்து காப்பாற்றி எகிப்து கொண்டு சேர்தனர்.
இதை உணர்ந்த கிரேக்க வாணிபர்கள் தமிழகத்திற்கு வரும் கப்பலில் உரோம படை வீரர்களையும் அழைத்து சென்றது.
இப்படி இந்தியாவுக்கு வந்த உரோம வீரர்களின் கரடுமுரடான தோற்றம் போர்கள் செய்தே பழகிய இவர்களது பழக்க வழக்கங்கள் தமிழக அரசர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதன் அடிப்படையில் இந்தியாவில் முதன் முறையாக பாண்டிய மன்னன் பரம்பரையை சேர்ந்த ஒரு அரசன் உரோம மன்னன் அகஸ்டஸ் சீசருக்கு இரண்டு தூதுக்குழுக்களை அனுப்பினர்.
ஒரு தூதுக்குழு சீசரை சந்திந்த நாள் கிமு 20 இல் டெரெகோனா என்ற தீவில் சந்தித்த்தாகவும்..
இரண்டாவது தூதுக்குழு கிமு 26 இல்
Island of samous இல் சீசரை சந்தித்த்தாக வரலாறு உள்ளது..
இதன் பின் ரோம வீரர்கள் பாண்டிய மன்னர்கள் அரசவையில் பாதுகாப்பு அதிகாரிகளாக அமர்த்தப்பட்டனர்.
இதை வர்ணித்து தமிழ் புராண புத்தகமான முல்லை பாட்டு அடிகள் 59 இல் இருந்து 66 வரை காணலாம்.
இவர்கள் தமிழக அரசவையில் சைகை செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்துக் கொண்டனராம்.
ம்ம் ரோமானியர்களுக்கே
வேலை கொடுத்த எம் மூதாதையர்கள் எங்கே...
எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்து கொடுத்து விட்டு வேலை இல்லாத திண்டாட்டத்தை உருவாக்கி தன் பிழைப்புக்காக அயல்நாடுகளில் வேலை செய்து வருவோரையும் அந்த வரி இந்த வரி என்று திருடும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே..
இன்றைய அரசியல்வாதிககளுக்கு
மிகப்பெரிய செருப்படி தான் இந்த பதிவு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.