04/06/2017

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில். தங்கத்திற்கு 3 சதவீதம் வரி.. செருப்புக்கு 18 சதவீதம் வரி...


வரும் ஜூலை மாதத்தில் இருந்து நாடு முழுவதும் ஜி.எஸ்.டி முறை அமல் படுத்தப்பட உள்ளது. இதனையடுத்து ஜி.எஸ்.டி குறித்து பல்வேறு கூட்டங்கள் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 15-வது ஜி.எஸ்.டி கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது ஜி.எஸ்.டியில் தங்கத்திற்கு 3சதவீதம், 500 ரூபாய்க்கு குறைவாக வாங்கும் செருப்புகளுக்கு 5 சதவீதமும் 500 ரூபாய்க்கு மேல் வாங்கும் செருப்புகளுக்கு 18 சதவீதம் வரையிலும் வரி விதிக்கப்படும்.

மேலும் பட்டை தீட்டப்படாத வைரங்களுக்கு 0.25 சதவீதம் வரியும், பிஸ்கட்டுக்கு 18 சதவீதம், ஆடைக்கு 12 சதவீதம், பீடிகளுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என கூறினார்.

வாழ்க கார்ப்பரேட்.. வீழ்க நாட்டு மக்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.