தமிழ்நாட்டு மாணவர்கள் 41 சதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி... உண்மை என்ன?
நீட் தேர்ச்சி என்பது எழுதிய மொத்த மாணவர்களில் முதல் பாதி இடங்கள் பெற்றோர் என்பதே..(50 percentile)
அதாவது இந்தியாவில் நீட் எழுதிய 11 லட்சம் பேரில் முதல் 5.5 லட்சம் பேர் தேர்ச்சி என்பதாகும்.
இந்த 5.5 லட்சம் பேரில் தமிழ்நாட்டில் தேர்வெழுதிய 90 ஆயிரம் பேரில் 41 சதம், அதாவது 36 ஆயிரம் பேர் தேர்வு என பொருள்.
தமிழ்நாட்டின் மருத்துவ இடங்கள் 15 சதம் இந்திய ஒன்றியத்துக்கு ஒதுக்கப்படும். மீதமுள்ள 85 சத இடங்கள் சுமார் 3000 மருத்துவ இடங்கள் தமிழ்நாடு ஒதுக்கீடு எனப்படும்.
இந்த தமிழ்நாட்டு ஒதுக்கீடு என்பது தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்களுக்கு மட்டும் என்பது அல்ல, இது தமிழ்நாட்டில் 5 வருடங்கள் படிக்கும் அனைவருக்குமானது, சிபிஎஸ்ஈ மாணவர்கள் உள்பட..
ஆக நீட் தேர்ச்சி 36 ஆயிரம் பேர் தமிழக மாணவர்கள் என்றாலும் இதில் முதல் மூவாயிரம் பேர் யார்? அவர்களுக்கே தமிழ்நாட்டு மருத்துவ இடங்கள்..
தேர்வெழுதிய 90 ஆயிரம் பேரில் சிபிஎஸ்ஈ மாணவர்கள் 4 ஆயிரம் பேர், தமிழ்நாட்டு பாடத்திட்ட மாணவர்கள் 86 ஆயிரம் பேர்.
இதில் முதல் மூவாயிரம் இடத்தில் சிபிஎஸ்ஈ மாணவர்களே இருப்பர் என்பதே எதார்த்தம். அவர்களுக்கே தமிழ்நாட்டின் மொத்த மருத்துவ இடங்களும் கிடைக்கும்.
தமிழ்நாட்டு பாடத்திட்ட மாணவர்கள் நாமம் சாத்தப்படுவர் என்பதே இன்றைய நடைமுறை உண்மை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.