29/06/2017

ஊடகங்களின் கழுத்தில் காவிகளின் கத்தி...


சமீப காலங்களில் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக பிரமுகர்கள் தவறாமல் இடம்பெறுவதை கவனித்திருப்பீர்கள்..

விட்டால் நம் கழுத்தை கடித்து துப்பிவிடுவதுபோல் அவர்கள் தொலைக்காட்சிகளில் குரைத்துக்கொண்டிருப்பார்கள்.

தமிழ் நாட்டில் செல்லாகாசாக இருக்கும் பாஜகவினருக்கு ஏன் ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.. என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருந்தால் நீங்கள் ஊடகப்போரை கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

பாஜகவினருக்கு.. அல்லது காவி அமைப்பினருக்கு ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுப்பதற்குப்பின் பல அரசியல் காரணங்கள் உண்டு.

அதில் ஒன்று ஊடக முதலாளிகளின் வர்த்தக ரீதியிலான டெல்லி அதிகார மையத்துடனான தொடர்பு.

தமிழகத்தில் ஜெயலலிதாவின் மரணத்திற்குப்பின் தமிழக அரசை நடத்துவது டெல்லி தான் என்பது மற்றொன்று.

கழுதை ஏதோ ஒன்று இருந்துவிட்டு போகட்டும். ஆனால் இந்த ஒன்று மற்றொன்றுகள் எல்லாம் வந்து நிற்கும் புள்ளி, தமிழகத்தில் பாஜக ஒரு பிரமாண்ட சக்தியாக தமிழகர்களின் உளவியலுக்குள் புகுத்தப்பட வேண்டும் என்பதுதான்.

தொலைக்காட்சியில் விவாத நிகழ்வில் பணிபுரியும் நண்பர்களிடம் பேசினால் இந்த மாற்றத்தை அழகாக விளக்குகிறார்கள்.

முன்னாடியெல்லாம் எங்களை கூப்பிடுங்க என்று போன் போட்டு கெஞ்சுவார்கள். ஆனால் இப்போது நாங்கள் யாரை கூப்பிட வேண்டும்.. யாரை கூப்பிடக்கூடாது என்பதை உத்தரவிடும் அளவுக்கு அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்கிறார்கள் அந்த நண்பர்கள்.

மக்கள் பிரச்னைக்காக ரோட்டில் இறங்கி போராடுவது எல்லாம் வேலைக்காகாது என்பதும், ஊடகம்.. ஊடகம் தான் வலிமையானது என்பதும் டவுசர்களுக்கு நன்கு தெரியும்.

அந்த ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பின்னர் அந்த ஊடகங்களின் வழியாக தங்கள் அரசியலை திணிக்க வேண்டும்.

இந்த செயல்திட்டத்திற்கு இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பத்திரிகை தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாம் அடிமையாகிவிட்டன.

தமிழர் அரசியலை பேசிய ஆதித்தனாரின் தந்தி சமீபத்தில் எடுத்த இந்தி வாந்தி ஒன்று போதும் அதற்கான உதாரணத்திற்கு.

தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஊடகங்களை எடுப்பது மட்டுமல்ல.. அதில் தங்களுக்கு எதிரான அரசியல் கொண்டவர்களை அப்புறப்படுத்தும் பணியிலும் இந்த கும்பல் இறங்கியிருக்கின்றன.

இப்போது நியூஸ் 7 தொலைக்காட்சியில் நாராயணன்- மதிமாறன் விவாதத்தையொட்டி நெல்சன் மீது டவுசர் கும்பல் கட்டம் கட்ட தொடங்கியிருக்கின்றன. நெல்சன் என்ற பெயர்தான் அவர்களுக்கு பிரச்னை.

நெல்சனுக்கு பதில் ஸ்ரீராம் என்று இருந்திருந்தால் நம்ம ஆள் ஒருத்தன் முற்போக்கா இருக்கான் என்று கண்டுக்காமல் விட்டுவிடுவார்கள்.

இது தொடர்பாக ஒரு கண்டன கூட்டத்திற்கு இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் முயற்சி செய்தார்களாம்.. உடனே ஸ்டாலினிடம் நாடக நடிகர் எஸ்வீ சேகர் போன் போட்டு பேசினாராம். உடனே அவரும் தன் கட்சி ஆளை அந்த கூட்டத்துக்கு அனுப்பவில்லை என்று சொல்லிவிட்டாராம். நாடக நடிகர் சொன்னதை இதுவரை ஸ்டாலின் மறுக்கவில்லை என்பது இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விசயம்.

இந்த இடத்தில் நீங்கள் பார்ப்பன எதிர்ப்பு பேசி அதிகாரத்தைக் கைப்பற்றிய திருட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் யோக்கியதையை புரிந்து கொள்ளலாம்.

இதில் ஸ்டாலினுக்கு முட்டுக்கொடுக்க சுப வீரபாண்டியன் பாய்ந்து வந்து ஒரு மடல் எழுதியிருக்கிறார்.

ஒரு நாடக நடிகர் போன் போட்டு சொன்னதும் முடிவை மாற்றிக் கொள்ளும் அளவுக்குதான் திராவிடத்தின் செயல்தலைவரின் யோக்கியதை இருக்கிறது என்பதைப்பற்றி ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம்..

அறிவாலயத்தின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டான சுப.வீயிடம் அதை எதிர்பார்க்க முடியாதுதான்.

போகட்டும் இந்த காமெடிகளை எல்லாம் கடந்து.. தமிழ் நாட்டின் ஊடகங்களின் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கின்றன காவிகளின் கத்தி என்பது மட்டும் உண்மை.

ஒவ்வொரு செய்திக்குப்பின்னும் ஒரு அரசியல் இருக்கிறது.. எனவே தமிழர்கள் கவனமாக இருங்கள்..

பதிவு - கார்ட்டூனிஸ்ட் பாலா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.