07/07/2017

இந்துத்வா விற்கு எதிராக பொங்கி ஒரு காலத்தில் போலிசில் புகார் கொடுத்த ஆள் நம் சேட்டிலைட் சேகர் என்ற விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...


பன்னி வாயன் SVசேகரை இந்துமகாசபா கண்டிக்கிறது என போஸ்டர் ஒட்டிய கதையை பலரும் மறந்திருப்பீர்கள்..

செப் 2, 2013..

நடிகர் எஸ்.வி.சேகர் நடத்தி வரும் 'மகாபாரதத்தில் மங்காத்தா' என்ற நாடகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 'தமிழ்நாடு இந்து மகாசபை' என்ற பெயரில் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில், 'இந்துக்களின் புனித நூலாகிய 'மகாபாரதத்தை' கொச்சைப்படுத்தும் வகையில் நாடகத்தின் தலைப்பை ''மகாபாரதத்தில் மங்காத்தா'' என்று வைத்து ஒட்டுமொத்த இந்து மக்களையும் இழிவுபடுத்தும் பன்னி வாயன் எஸ்.வி.சேகரை தமிழ்நாடு இந்து மகாசபை சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்...' என எழுதப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்-யிடம் புகார் மனு அளித்துள்ளார் நடிகர் எஸ்.வி.சேகர். அந்த புகார் மனுவில்,

1980ல் அரங்கேற்றம் செய்து இன்று வரை 1000 காட்சிகள் நடத்தப்பட்டுள்ள என்னுடைய மகாபாரதத்தில் மங்காத்தா (Police Licence Number 271/14198/E2/79) என்ற நகைச்சுவை நாடகத்திற்கு எதிராக விலாசமில்லாத இந்துமகாசபா என்ற அமைப்பு சென்னை முழுவதும் என் புகைப்படத்துடன் என்னை மிக தரக்குறைவாக விமர்சித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் என்னை இது மிகவும் புண்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட அமைப்பின் மீதும், நபர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்து மகா சபா என்ற இந்துத்வா அமைப்பிற்கு எதிராக போராடிய போராளி S.V.சேகர் என்பதை நாம் எப்போதும் மறந்து விடக்கூடாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.