மண்ணையும் வளங்களையும் ஆற்றுநீரையும் அடுத்தவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு தமிழினத்தையே இருளில் மூழ்கடித்துவிட்டனர்..
இனி என்ன செய்வது? என்று இப்போது தமிழினம் விழிபிதுங்கிக் கிடக்கிறது..
ஈழத் தமிழர்கள் 3 லட்சம் பேரைப் பலிகொடுத்தும் ஈழத்திற்கு விடிவு இல்லை..
தமிழ்நாட்டுத் தமிழராகிய நாமோ மெது நஞ்சு ஊட்டப்பட்டு முடங்கிக் கிடக்கிறோம்.
காவிரி இல்லை.
கடனாறு இல்லை.
கருப்பாநதி இல்லை.
பொருநை இல்லை.
பெரியாறு இல்லை.
பாலாறு இல்லை.
அங்கே எஞ்சிக் கிடந்த மணலும் இல்லை..
1000 மீனவர்கள் செத்தும் தீர்வு இல்லை..
கர்நாடகத்தில் இருக்கும் பெங்களூரு குடிநீர்த் திட்டமும் தமிழ்நாட்டின் ஒக்கனேக்கல் திட்டமும் ஒரு ஒப்பந்தத்தின் இரு கூறுகள். ஆனால் முன்னது நடந்தது. பின்னது முடங்கியது..
வந்தேறிகள் நாட்டை பிடித்து வைத்துக் கொண்டு வளங்களை அறுவடை செய்து அவனவன் நாட்டிற்கும் வீட்டிற்கும் சேர்க்கிறான்.
ஆனால், உனக்கு அவன் சாராயக்கடை நடத்துகிறான்..
உனக்கு சன் டிவி, கலைஞர் டிவி, செயா டிவி நடத்துகிறான்..
புளுத்த அரிசியைக் கொடுத்துவிட்டு மற்ற பொருட்களின் விலைவாசிகளை விண்ணைத் தொட வைத்திருக்கிறான்..
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பேரில் வளமான தமிழ்நிலங்களை மேலும் பல வந்தேறி நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கிறான்..
மழைக் காலத்திலும் மின்வெட்டு..
உன்னைச் சாதிக்குள் குறுக்கி இட ஒதுக்கீடு என்று பிச்சைக்கார அரசியலுக்குள் தள்ளுகிறான்..
மண்ணுரிமை, ஆட்சியுரிமை, நாட்டுரிமை பற்றிப் பேசாதே என்கிறான்..
இனி என்ன செய்வது?
இப்படிப் புலம்பிப் புலம்பி நொந்து நூலாவதில் பயனில்லை தமிழா..
திராவிடத்தையும் திராவிடச் சாயலில் வரும் அத்தனை இயக்கங்களையும் கட்சிகளையும் முற்றாக முழுதாகப் புறந்தள்ளுவோம்..
ஆக்கபூர்வச் செயல்களில் இறங்குவோம்..
தேவைப்படும்போது அதிரடியாவும் களம் இறங்குவோம்..
காடே பற்றி எரியும்போது மரங்கள் மட்டும் சிரித்துக் கொண்டா இருக்கும்..
நாடே அழியும்போது தனி ஆட்களும் குடும்பங்களும் தப்பித்துவிடும் என்று கனா காணாதீர்கள்..
பம்மாதே,
பதுங்காதே,
படுக்காதே,
சோர்வுறாதே,
சோரம் போய்விடாதே..
எழு, விழி, பரப்பு.. எட்டிப்பார்..
காவிரி மீண்டும் சலசலக்கும்...
நாடு மீண்டும் கலகலக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.