ரிபப்ளிக் டிவி பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுவதாக கூறி ரிபப்பளிக் டிவி ஆப்பையே காலி செய்த கேரள மக்கள், ஃபேஸ்புக் பக்கமும் சூரை, ரிபப்பளிக் டிவிக்கு எதிராக தொடரும் கேரள மக்களின் இணையதள யுத்தம்..
தொடர்ச்சியாக பாஜகவின் ஏஜெண்டாக ரிபப்ளிக் டிவி செயல்பட்டு வருவதாகவும், பிரிவினை வாதம், இனவாதம், பாஜவிற்கு கொடி பிடிக்கும் விதமான நிகழ்ச்சிகளையே நடத்தி வருவதாகவும் கேரள மக்கள் குற்றச்சாட்டுக்களை வைத்து ரிபப்பளிக் டிவிக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை காட்ட இணையதள யுத்தத்தை துவங்கியுள்ளனர்.
இதில் முதல் கட்டமாக 4.2 ஆக இருந்த அந்த டிவியின் ஃபேஸ்புக் ரேட்டிங்கை 2.6 குறைத்துள்ளனர், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 1 ஸ்டார் கொடுத்து அர்னாபை அதிர வைத்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல் , அந்த டிவியின் ஆப்பின் ரேட்டிங்கை 1.8 ஆக குறைத்துள்ளனர், இது தனது டிவியின் பெயரை கெடுத்து விடும் என அஞ்சி ரிபப்பளிக் டிவி தனது ஆன்ட்ராய்டு ஆப்பையே google play ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.
Google search ரிசல்ட்டில் காண்பிக்கும் ஆப்பை google play ஸ்டோரில் காணவில்லை.
சமூக வலைதளம் , மற்றும் வாட்சம் மூலம் தங்களது இணையதள யுத்தத்தை கேரள மக்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனால் ரிபப்ளிக் டிவிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
போட்டிக்கு ரிபப்ளிக் டிவியும் தங்களது ஆதரவாளர்களை வைத்து தங்களது ஃபேஸ்புக் பக்கத்திற்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்க வைத்து வருகின்றது. இதனால் ஒரு சில நாட்களில் 35 ஆயிரம் பேர் 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளனர். எனினும் 53 ஆயிரம் பேர் 1 ஸ்டார் ரேட்டிங்கு கொடுத்துள்ளதால் ஓவரால் ரேட்டிங் குறைந்த வண்ணமே உள்ளது.
யார் ஜெயிக்கப் போவது ? பொறுத்து இருந்து பாருங்கள் எனக் கூறுகின்றனர் கேரள மக்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.