வியட்நாமில் ஒரு மலை பகுதியில் விவசாயி ஒரு குகையை கண்டு பிடித்தார். பெரிய மலையில் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்த ஒரு குகை அது.
அதற்க்கு உள்ளே என்ன இருக்கும் ? யாருக்கும் தெரியாது.
1991 இல் விவசாயி அதை கண்டு பிடித்த பின் 2009 இல் பிரிட்டிஷ் காரரால் அது ஆராய பட்டது.
அதன் மறு முனையில் என்ன இருந்தது என்பதை அறிந்த போது அதை பார்த்தவர்கள் வாய் பிளந்து ஆச்ரயத்தில் உறைந்தார்கள்.
அதற்க்கு அடுத்த பக்கம் ஒரு தனி உலகமே இருந்தது. குகை மொத்தம் 40 மாடி கட்டிடத்தை தூக்கி உள்ளே வைக்கும் அளவிற்கு.. 200 மீட்டர் உயரம் 150 மீட்டர் அகலம் கொண்டிருந்தது.
உலகின் மிக பெரிய குகை இது என்று அறிய பட்டது..
உள்ளே ஒரு மழை காடே இருந்தது..
ஆறு இருந்தது. குளம் இருந்தது
தனக்கென்று ஒரு பீச் இருந்தது. விலை உயர்ந்த முத்துக்கள் இருந்தது..
இப்படி 130 கிமி க்கு அது பரவி இருந்தது. குகையை மொத்தமாக சுற்றி பார்க்க வார கணக்கில் ஆனது.
2013 இல் முதல் முறையாக விசிட்டர்கள் அனுமதிக்க பட்ட போது... குகை என்றால் ஏதோ மற்ற குகை போலவே இதை நினைத்து கொண்டு சென்றவர்கள் அந்த மறைந்திருந்த மாயஜால உலகத்தின் அழகை பார்த்து மெய் மறந்தார்கள்.
அந்த மாய ஜாலத்தை வார்த்தையில் விவரிக்க முடியாது என்று உணர்ந்தார்கள்.
நீங்களும் இதை படித்து விட்டு மட்டும் அதன் அழகை புரிந்து கொள்ள முடியாது என்பதாலும்..
நிச்சயம் அதன் அழகை நீங்கள் கண்டு வியக்க வேண்டும் என்பதாலும்...
கட்டாயமாக நான் இணைத்திருக்கும் அந்த மறைந்திருந்த மாயாஜாலத்தின் அணைத்து படத்தையும் பாருங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.