தமிழ்நாட்டில் மட்டும்தான் மூடநம்பிக்கை இருந்தது, இங்கே மட்டும்தான் ஏற்றத்தாழ்வு இருந்தது, சாதிக் கீழ்மைகள் இருந்தன என்று சொல்வதெல்லாம் இவர்களை நியாயப்படுத்துவதற்காக சொல்லப்படும் மோசமான கருத்து.
நீதிக்கட்சி தான் சமூக சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்னது, இட ஒதுக்கீடு பெற்றுக்கொடுத்தது என்றெல்லாம் திராவிடக் கட்சி கூறுகிறது..
நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இடஒதுக்கீடு அறிமுகமாகி விட்டது.
தமிழர்களுக்குத் துரோகம் செய்தது நீதிக்கட்சி என்பதே வரலாறு.
1920 இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி வரலாற்றில் ஒரு முதலமைச்சர்கூட தமிழர் கிடையாது.
1919 இல் அன்றைய சென்னை மாகாண அரசு இடஒதுக் கீடு ஆணையைக் கொண்டு வந்தது.
எழுத்தர் போன்ற பதவிகளுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள தெலுங்கர், தமிழர்கள் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று அந்த ஆணையில் இருந்தது.
நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த அம்சத்தை எடுத்து விட்டார்கள்.
1923 இல் இரண்டாம் ஆணையில் தெலுங்குப் பகுதிகளில் தெலுங்கர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு என்று கொண்டு வந்து விட்டார்கள்.
1909லிருந்து தெலுங்குப் பகுதி தெலுங்கர்களுக்கே என்று போராட்டம் நடத்தியவர்கள், தமிழர்கள் ஆட்சி நடத்தக்கூடாது என்று போராடியவர்கள் தான் இந்த ஆணையைக் கொண்டு வந்தார்கள்.
ஆந்திராவில் தெலுங்குப் பல்கலைக்கழகம் கொண்டு வந்தார்கள்.
தமிழ்ப் பல்கலைக்கழகம் வேண்டும் என்று அப்போது தமிழன் போராட்டம் நடத்தினான். ஆனால் அவர்கள் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
தெலுங்கர்களின் ஆதிக்கத்தை நிலைத்திருக்கச் செய்ய பார்ப்பனரல்லாதார் இயக்கம் எப்படி தோற்றுவிக்கப்பட்டதோ, அதன் தொடர்ச்சியாகத்தான் நீதிக்கட்சியின் (திராவிடத்தின்) வேலைகளும் இருந்தன...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.