கம்போடியா நாட்டில் அன்கோவார்ட் (Ankor wat) என்னும் மிகப் பிரமாண்டமான சிவன் ஆலயம், ஒரு தமிழ் மன்னனால் கட்டப்பட்டது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்..
இந்தக் கோவில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது..
எகிப்தில் உள்ள பிரமிட்டுக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதேயளவு முக்கியத்துவம் இதற்கும் கொடுக்கப்பட வேண்டும்..
இந்தப் பழமையான கோவிலில் நம்பவே முடியாத ஒரு அதிசயமான நிகழ்வு நடந்திருக்கிறது..
அன்கோவாட்டே ஒரு அதிசயம். அதில் இன்னுமொரு அதிசயம்.
அன்கோவாட் கோவிலின் சுவரொன்றில் ஒரு டீனோசௌரஸின் (Dinosours) படம் செதுக்கப்பட்டிருக்கிறது.
இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
டீனோசௌரியாக்கள் பூமியிலிருந்து அழிந்து போய் இலட்சம் ஆண்டுகளுக்கும் மேலாகின்றன.
அவற்றின் எலும்புக்கூட்டுச் சுவடுகளை (Fossils) நவீன மனிதர்களான நாம், 19ம் நூற்றாண்டில்தான் கண்டு பிடித்தோம்..
அந்த எலும்புக்கூடுகளின் சுவடுகளை வைத்து டீனோக்களின் வடிவங்கள் இப்படி இப்படி இருக்கலாமெனத் தெரிந்து கொண்டோம்..
ஆனால் 11ம் நூற்றாண்டிலேயே 'ஸ்டெகொசௌரஸ்' (Stegosaurus) என்ற டீனோவின் உருவத்தை அன்கோவார்ட் சிவன் ஆலயத்தில் செதுக்கியுள்ளார்கள்..
இது எப்படிச் சாத்தியமாகும்?
உண்மையில் நம்பவே முடியாத அதிசயம் இது..
எப்பொழுதோ அழிந்துவிட்ட டீனோசௌரஸை, 11ம் நூற்றாண்டுத் தமிழன் எப்படிக் கண்டிருக்க முடியும்?
அதன் எலும்புச் சுவடுகளைக் கண்டிருந்தாலும், எப்படி அதன் வடிவத்தைக் கணித்திருக்க முடியும்?
கொஞ்சம் யோசியுங்க மக்களே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.