3500 ரூபாய் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க வட்டாச்சியர் ராணி லஞ்சம் வாங்கியதாக கைது.
பாபநாசம் வட்டம் வீர மாங்குடியை சேர்ந்த விவசாயி அன்பழகன் தனக்கு சொத்து மதிப்பு வழங்க பாபநாசம் வட்டாச்சியரிடம் மனு செய்திருந்தார். வட்டாட்சியர் ராணி இவரிடம் 3500 ருபாய்லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பமில்லாத அன்பழகன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் தெரிவிக்கவே, நேற்று மாலை பவுடர் தடவிய 3500 ருபாய் நோட்டுக்களை வட்டாட்சியர் ராணியிடம் தந்த போது லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். பிடிபட்டவட்டாச்சியர் ராணியிடம் லஞ்ச ஒழிப்பு போலிசார் விசாரனை நடத்தினர்.
2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற விசாரனைக்கு பின் வட்டாட்சியர் ராணி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.