1. தமிழகத்தில் உள்ள ஏழு பெரும் அணைகளான மேட்டூர், பவானிசாகர், வைகை, பாபநாசம்-காரையாறு-மணிமுத்தாறு, பேச்சிப்பாறை அணைகள் நிலத்திற்கடி பெரும் குழாய்கள் மூலம் இணைக்கப்பட வேண்டும். நீரில்லா அணைகள் நீருள்ள அணைகளிடமிருந்து நீர் பெரும்.
2. கல்லனைக்கருகில் கொள்ளிட ஆற்றில் பெரும் அணை கட்டப்பட்டு மழை காலத்தில் வீணாக கடலில் சேரும் வெள்ளம் தடுக்கப்பட வேண்டும்.
3. தமிழகத்திலுள்ள அணைகள், ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் அனைத்தும் இணைக்கப்பட வேண்டும்.
4. காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி ஆறுகளின் கரைகள் கட்டப்பட்டு மணல் கொள்ளை தடுக்கப்படுவதோடு நீர் வழிப் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும்.
5. செந்நெல் போன்ற அரிசி ரகங்கள் ஆராய்ச்சி தொடங்கப்பட்டு மக்களுக்கு நீரிழிவு போன்ற நோய்களைத் தராத அரிசி ரகங்கள் மட்டுமே பயன்பாட்டிற்கு வர வேண்டும்.
6. அரிசி தவிர கம்பு, கேழ்வரகு, சாமை, போன்றவைகளால் ஆன உணவு, எல்லா உணவகங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும்.
7. தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக விவசாயமும் தொடங்கப்பட வேண்டும்.
உதாரணமாக,
தஞ்சை பகுதியில் அரிசி, மதுரைப்பகுதியில் சோளம், தானியங்கள், மலர்,
நெல்லையில், காய்கறிகள், பழங்கள் பண்ணைகள்,
கோவைப்பகுதியில் பருத்தி, கரும்பு போன்றவை.
8. விவசாயிகளின் நில அளவு, உற்பத்திக்கேற்ப, நாட்டிற்கான அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப மாதச்சம்பளம், ஓய்வூதியம் போன்றவை வழங்கப்பட வேண்டும்.
9. விவசாயமும் ஒரு தொழிலாக்கப்பட்டு பலரும் ஈடுபடும் வகையில் லாபகரமாக்கப்பட வேண்டும்.
10. ஒரு எம்.எல்.ஏ வின் அடிப்படை சம்பளமும், ஒரு விவசாயியின் அடிப்படை சம்பளமும் சமமாக இருக்க வேண்டும்.
அது போன்றே அனைத்து துறைகளின் அடிப்படை சம்பளமும், திரைத்துறை நடிகர் சம்பளம் உட்பட இருக்க வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.