பதஞ்சலி நிறுவனம் பல்லாயிரம் கோடிகள் முதலீட்டில் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. 'சுதேசி' என்னும் உள்நாட்டு தயாரிப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து அசுர வேகத்தில் தன்னுடையே பொருட்களை சந்தைப்படுத்தி வருகிறது பதஞ்சலி நிறுவனம்.
பத்தாயிரம் கோடிகள் பெறுமானமுள்ள நிறுவனமாக இப்போது இந்நிறுவனம் இந்தி பாஜக அரசின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.
இவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும் கட்டாயம் இந்தி எழுத்துக்கள் இருக்கும் படி பார்த்துக் கொள்கிறது பதஞ்சலி நிறுவனம். இந்தி அல்லாத மற்ற இந்திய மொழிகளுக்கு இடமில்லை என்பதை தெளிவுபடுத்தியும் வருகிறது இந்நிறுவனம்.
உள்நாட்டு தயாரிப்பு என்று கூறிவிட்டு உள்நாட்டு மொழிகளுக்கு பதஞ்சலி நிறுவனம் இடமளிப்பதில்லை.
மேலும் இவர்களுக்கு வரும் இலாபத்தை சமஸ்கிருத வளர்ச்சிக்கும் ஆரிய வேத மத வளர்ச்சிக்கும் பயன்படுத்துவோம் என்று பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதை நேரடியாக சொல்லாமல் ஆன்மிகம், மதம் சார்ந்த வளர்ச்சிப் பணிகள் செய்வோம் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளது இந்நிறுவனம்.
இதில் வேடிக்கை என்னவெனில் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களை சந்தைப்படுத்த பன்னாட்டு ஆதரவு நிறுவனமான 'futura group' என்ற நிறுவனத்தை தான் பொறுப்பில் அமர்த்தியுள்ளது பதஞ்சலி நிறுவனம்.
இந்த நிறுவனம் அமெரிக்கா மற்றும் இத்தாலி நிறுவனங்களுடன் ஏற்கனவே கைகோர்த்து வணிகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது .
http://economictimes.indiatimes.com/industry/cons-products/fmcg/patanjali-enters-big-retail-with-future-group-tie-up/articleshow/49285002.cms
http://www.futuregroup.in/about-us/milestones.aspx
பதஞ்சலி நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே போட்டியல்ல.
பல உள்நாட்டு நிறுவனங்களுக்கும் இது போட்டி நிறுவனமாக அமைந்துள்ளது தான் வேதனை.
பதஞ்சலி நிறுவனம் கொடுக்கும் விலையில் உள்நாட்டு நிறுவனங்களால் பொருட்களை கொடுக்க முடிவதில்லை. இதற்கு காரணம் பதஞ்சலி நிறுவனத்திற்கு இந்துத்வா அரசின் முழு ஆதரவும் உள்ளது .
பாஜக அரசு பதஞ்சலி நிறுவனத்திற்கு பல நூறு ஏக்கர் நிலங்களை வழங்கி உள்ளது.
http://www.hindustantimes.com/india/maha-govt-allots-over-600-acres-of-land-for-baba-ramdev-s-patanjali/story-MDaQ0KAQIZ6v5LYjjBaFLJ.html
மேலும் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் ஒரு 'பெருநிறுவன' சாமியார்.
இவர் சாமியாராக இருந்து சம்பாதித்தது பல்லாயிரம் கோடிகள். இந்த கறுப்புப் பணத்தையும் வெள்ளைப் பணமாக மாற்ற இந்நிறுவனத்தை பயன் படுத்தியுள்ளார் பாபா ராம்தேவ்.
அதிக அளவில் கறுப்பு பணம் முதலீடு செய்வதால் இவர்கள் சந்தை விலையை விட குறைவான விலையில் பொருட்களை கொடுக்க முடிகிறது.
ஆனால் மற்ற உள்நாட்டு நிறுவனங்களிடம் கறுப்புப் பணம் இந்த அளவிற்கு இல்லை.
அதனால் அவர்களால் உற்பத்தி விலையை விட குறைந்த விலையில் கொடுக்க முடியாது.
இது தான் பதஞ்சலி நிறுவனத்திற்கு பெரும் ஆதாயமாகும்.
பொதுவாக உள்நாட்டு தயாரிப்புகள் விலை கூடுதலாகத் தான் இருக்கும்.
செக்கு எண்ணை, மலைத்தேன் , நாட்டு சர்க்கரை, பனவெல்லம், பற்பசை, குளியல் பொருட்கள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியங்கள் அனைத்தும் விலை அதிகம் தான்.
காரணம் இதன் உற்பத்தி செலவுகள் அதிகம்.
இருப்பினும் பதஞ்சலி நிறுவனம் உள்நாட்டு தயாரிப்பு என்று கூறி தன்னுடைய பொருட்களை குறைந்த விலைக்கு விற்று வருகிறது.
இதனால் உண்மையான உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
பதஞ்சலிக்கு அரசின் மூலமாகவும், இந்துத்வா ஆதரவாளர்கள் மூலமாகவும், வெளிநாட்டில் இருந்தும் பெருமளவில் பணம் வருகிறது.
இதை வைத்துக் கொண்டு பதஞ்சலி நிறுவனம் மற்ற நிறுவனங்களை ஓரம்கட்டி தன்னுடைய நிறுவனத்தையும், இந்தி மொழியையும், சமற்கிருத மொழியையும் வளர்த்து வருகிறது.
ஒரே கல்லில் பல மாங்காய்கள் விழ வைக்கிறது பதஞ்சலி நிறுவனம்.
இந்தி தேசியத்தையும் ஆரிய இந்துத்வா சித்தாந்தங்களையும் வளர்க்கும் பதஞ்சலி நிறுவனம் உள்நாட்டு தொழில்களையும், உள்நாட்டு மொழிகளையும் பண்பாடுகளையும் அழிக்கும் வேலைகளையும் கட்சிதமாக செய்கிறது.
இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு தமிழர்களுக்கு நிச்சயம் உண்டு..
தமிழர்கள் எவரும் பதஞ்சலி நிறுவனப் பொருட்களை வாங்குதல் கூடாது. இந்தி மொழியில் எழுதப்பட்ட எந்த தனியார் நிறுவனப் பொருட்களையும் வாங்குதல் கூடாது.
தமிழ்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்குதல் வேண்டும்..
அது விலை கூடுதலாக இருந்தாலும் தமிழ்நாட்டு தயாரிப்புகளையே வாங்குதல் வேண்டும் . இப்படி ஒரு முடிவை எடுத்தால் மட்டுமே தமிழர்கள் தங்கள் வணிகத்தை தக்க வைக்க இயலும்.
பன்னாட்டு தேசம், இந்தி தேசம் முதலான அன்னிய பொருட்களை பொருட்களை புறக்கணித்து தமிழர் தேசத்தின் பொருட்களை வாங்குவது தமிழர்களின் பொருளாதாரம், பண்பாடு, வரலாறு, வாழ்வாதாரம், அரசியல் ஆகியவற்றை பாதுகாக்கும்.
விழிப்போடு இருப்போம் தமிழர் தேசத்தை பாதுகாப்போம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.