11/10/2017

ஈழத்தில் நடந்த அத்தனையும் தமிழ்நாட்டிலும் நடந்தே தீரும். இது உறுதி...


1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போது தமிழரின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் மீறி திராவிடத்தின் பேராதரவுடன் தமிழரிடமிருந்து அண்டை மாநிலங்களால் பிடுங்கப்பட்ப் பகுதி.

2009ல் சிங்களத்தால் இந்தியா மற்றும் 32நாடுகளின் படைவலிமையால் அபகரிக்கப்பட்ட பகுதி.

பிடுங்கப்பட்ட பகுதிகளில் சிறுபகுதியை மீட்டு இன்று 'தமிழ்நாடு ' என்னும் பெயரால் நீண்டகாலம் தமிழரல்லாதோரால் ஆளப்பட்டுவரும் பகுதி.

பூர்வீகத் தமிழரைவிட அதிக அளவில் வங்காளியரைக் குடியேற்றி இன்று அவர்கள் மூலம் தமிழர் ஒடுக்கப்பட்டுவரும் அந்தமான்-நிகோபர் தீவுப்பகுதிகள்.

இவையே இன்றைய தமிழர் பெரும்பான்மைப் பூர்வீக நிலப்பகுதி ஆகும்.

இது துல்லியமானதென்று கூறிவிட முடியாது, ஆனால் இதில் மிகச்சிறிய திருத்தங்களே ஏற்படும் என்று உறுதிகொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, இதில் திருவனந்தபுரம் சேர்க்கப்படவில்லை; ஆனால், திருவனந்தபுரம் தமிழர் பெரும்பான்மை பூர்விக மண்ணே ஆகும்.

தனிநாடு கோரும் அத்தனைத் தகுதியும் நமக்கு உள்ளது.

புரியும்படி கூறினால் தமிழருக்குத் தனிநாடு கோரும் தகுதி இல்லையென்றால் இவ்வுலகில் எந்த இனத்தினருக்கும் அத்தகுதி இல்லை.

அத்தகுதிகளாவன, வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு அதில் நீண்ட நெடிய இனவரலாறு மற்றும் வரலாற்றுச் சான்றுகள், தனித்தன்மையான மொழி, கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டுமுறைகள், திருமணச் சடங்குகள், ஈமக்கடன்கள், பழமொழிகள், சொலவடைகள், செவிவழிக் கதைகள், பண்டைய நிர்வாகமுறை, நகர்க்கட்டமைப்பு, பண்டிகைகள், கேளிக்கைகள், உடற்கூறு, தோற்றம், உறவுமுறைகள், சமூகக்கட்டமைப்பு, தொழில்முறைகள் ஆபரணங்கள் மற்றும் உடையமைப்பு.

தனித்தன்மையுடைய இசை, கலை, நடனம், இலக்கியம், காப்பியங்கள்;
கனிசமான எண்ணிக்கை, சுற்றிலும் கலாச்சார, மொழி, தோற்ற ஒற்றுமை கொண்ட வேற்றின மக்கள்..

ஈழம்.. ஒரு முன்னோட்டம்..

ஒட்டு மொத்தத் தமிழருக்கும் ஒரு முக்கியமான பாடம்..

ஈழ மக்கள் அடக்குமுறைக்கு அடிபணியாது போராடிவரும் வீரமறவர்கள்.

தமிழினத்தின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் நம் முன்னே வாழும் முன்மாதிரிகள்.

தமிழினம் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவது, வல்லாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம், அழிவுகளைத் தாங்கியபடி முன்னகரும் விடாமுயற்சி, சரியானத் தலைவனைத் தேர்ந்தெடுப்பது அவன் பின்னிற்பது, உலகம் முழுவதும் பரவிய தமது சொந்தங்களை ஒன்று திரட்டுவது, உலகையே வியக்கவைக்கும் சாதனைகள் மற்றும் தாய்மொழித் தமிழ் மீதான பற்று ஆகியவற்றை நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசான்கள்.

ஆயிரம் இன்னல்கள், பிரிவினைகளை மீறி இனவுணர்வுடன் உறுதியாக தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் ஈழமக்களிடம் உலகத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.