22/11/2017

மக்கள் முட்டை வாங்குவதை சில காலம் நிறுத்தி வைக்க வேண்டும், முட்டையில் நீண்ட நாளாக நடைபெறும் வியாபார சதி...


முட்டை விலை ரூ.7-ஐ நெருங்கி விட்டது. விரைவில் அது பத்து ரூபாயை எட்டி விடலாம். காரணம் வியாபாரிகளின் தந்திரம், செயற்கைத் தட்டுப்பாடு, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி.

இந்த முட்டையை நம்மால் வீடுகளில் உற்பத்தி செய்ய முடியாது. அவர்களிடம் மட்டும்தான் வாங்க வேண்டும். இது நீண்ட நாளாக நடைபெறும் அறிவியல் சதி.

இதை வென்றாக வேண்டும் என்றால், ம்க்கள் முட்டை வாங்குவதை சில காலம் நிறுத்தி வைக்க வேண்டும். முட்டை ஓர் அத்தியாவசியப் பொருள் அல்ல. சில நாள் முட்டை சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் உயிர் போய் விடாது. ஆனால் வியாபாரிகளின் உயிர் போய்விடும்.

முட்டையைப் பலகாலம் சேமித்து வைக்க முடியாது. செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி சில நாளிலேயே பல கோடிகள் லாபம் பார்க்கும் வியாபாரிகள், அத்தனை கோடிகளையும் இழந்து வீதிக்கு வந்து விடுவார்கள்.

வேறு வழியில்லாமல் முட்டை விலை தானாக இரண்டு ரூபாய்க்கு வந்து விடும். மக்கள் நினைத்தால் இது சாத்தியமாகும். சிங்கப்பூராக இருந்தால் இதை உடனே செய்வார்கள். நம் நாட்டிலும் இது செய்ய முடியும் என நிரூபிப்போம். நுகர்வோரின் பலத்தை நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.