சென்னையில் வருகின்ற டிசம்பர் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரைக்கும் சூறாவளி காற்று மழை மின்னல், இடி என புயல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என கன்னியாகுமரி புயலை கணித்த ஜோதிடர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தை ஜோதிடர் கே.என். நாராயணமூர்த்தி வெளியிட்டு வருகிறார்.
இந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது..
இந்த வருடம் அதிகமான சூறாவளி காற்று -மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம், ஆறுகள் தண்ணீரால் நிரம்பி ஓடும்.
அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கடுமையாக பாதிக்கப் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதத்தில் கன்னியாகுமரி பாதிக்கும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு இருந்தது. அதே போல புயல் வெள்ளத்தால் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
அந்தமானில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு புயல் வீசும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு உள்ளது.
தற்போது புதிய புயல் உருவாகி உள்ளது.
கடலூர், ராமேஸ்வரம் பாதிக்கும் என்றும் எழுதப்பட்டு உள்ளது.
எனவே அந்த 2 மாவட்டத்தை சேர்ந்த மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மேலும் ஆற்காடு பஞ்சாங்கத்தில் சென்னையில் மின்கசிவு ஏற்படும் என்றும் இருளில் மூழ்கும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு உள்ளது.
இது பற்றி ஜோதிடர் கே.என் நாராயண மூர்த்தியை செய்தியாளர்கள் கேட்டபோது, அப்போது அவர் கூறியதாவது...
9ம் தேதி முதல் 12-ம் தேதிவரை சென்னை பாதிக்கும், உலுக்கும், மிதக்கும்.
இதன் அர்த்தம் என்னவென்றால் 4 நாட்கள் சென்னையில் பலத்த மழை பெய்து சென்னை நகரம் பாதிக்கப்படும், வெள்ளத்தில் மிதக்கும். மின்சாரம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.