இந்தியாவை பொறுத்தவரை அரசியல் வாதிகளும் பணமுதலைகளும் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்...
அதற்க்கு நிறைய உதாரணங்கள் இருந்தாலும் இந்த கேடுகெட்ட ஊடகங்கள் மறைக்கக்கூடிய ஒரு விஷயத்தை தான் இப்பொழுது நான் சொல்லப் போகிறேன்...
இந்தியா ஒரு தனித்தண்மையுடைய நாடு சில நாடுகள் குளிராகவே இருக்கும் சில நாடுகள் வெப்பமாகவே இருக்கும் தட்ப வெட்பம் மிதமாக இருக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியா தான் முதலிடம் அதனால் தான் இங்கு பழங்காலத்தில் பிறந்த நமது முன்னோர்களுக்கு எந்த நோயும் இல்லை.
காரணம் மிதமான வெப்பமும் மிதமான மழையும் பொழியும் பொழுது மனித உடல் சீராகவே இயங்கும் வெப்பமும் குளிரும் மனித உடலுக்கு தேவை தானே.
இது மேற்கத்திய பணமுதலைகளுக்கு உருத்தியது.
இதற்காக கொண்டு வந்த வெளிநாட்டு ஒப்பந்தங்கள் ஏராளம்..
பசுமை புரட்சி என்பதில் தொடங்கி எவ்வளவோ..
இந்த இலுமினாட்டி இதெல்லாம் விடுங்கள் ஆனால் இவ்வுளகில் பல நூறு ஆண்டுகளாக வாழும் இந்தியர்கள் எப்போதுமே மேற்கத்திய கார்பரேட் முதலைகளால் கவனிக்க பட்டு கொண்டே இருக்கிறார்கள்.
அதனால் தான் இந்தியர்கள் உலகில் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.
அது அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று சில பிரதேசம் குளிராகவும் சில பிரதேசம் கடும் வெப்பமாகவும் இருக்கும் இதை தாங்க கூடிய வல்லமை இந்தியர்களுக்கு தான் உண்டு அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு.
இதை வைத்து தான் உலக அரசியல் எப்போதுமே நீ உண்ணை மேன்மையானவன் என்று எண்ணிவிட கூடாது என்பதில் மிகவுமே கவனமாக இருக்கிறது மேற்குடி கோட் சூட் ஆசாமிகள்.
அதான் நாம படிச்சி இருப்போமே யானை எப்போதுமே தம்முடைய பலத்தை பற்றி தெரிந்து கொள்வது இல்லை சிறிய ஈ எறும்புக்கு கூட பயந்து காதுகளை வீசி கொண்டே இருக்கிறது என்று அது தான்.
மொழியிலும் பண்பாட்டிலும் நாகரீகத்திலும் பூர்வ குடிகளிலும் இந்தியா முதலிடத்தில் இருக்கும் போது..
ஒரு 300 சொச்சம் வருடமே ஆன அமெரிக்கா ஆட்டி வைக்கிறது இந்தியாவை என்றால், எப்படி?
கலவரம் முக்கியமாக மத கலவரம். சாதிக்கலவரம், இவற்றை வைத்து நம்மை பிரித்து நீ இவ்வுலகில் பூர்வகுடி என்பதை யோசிக்கவே விடாமல் நம்மை பிரித்தாலும் சூழ்சியை தான் பயன்படுத்தி கொள்கிறது அண்டை கார்பரேட் நாடுகள்.
அவர்களுக்கு ஒரே ஒரு ஏஜென்ட் போதும் அரசியல் வாதி என்ற ஏஜென்ட்.
அதை தான் இன்றும் கடைபிடிக்கிறது பணக்கார நாடுகள்..
நாமளும் நம்ம பிரதமர் வெளிநாடெல்லாம் சுற்றுப்பயணம் செல்கிறார் அதற்ககாகவே நமக்கு பெருமை என்பதை நாம் எண்ணிக்கொண்டு இருக்கிறோம் விஷயம் அதுவல்ல..
ஒரு நாட்டுக்கு அரசமுறை சுற்றுப்பயணம் செய்தாலும் அங்கே சில ஒப்பந்தங்கள் உண்டு..
அது அவர்களுடைய நாட்டில் எல்லா செய்தியிலும் வரும் ஆஹா ஓஹோ என்று கொண்டாடுவார்கள்..
இந்திய செய்தி துறை எதை சொல்கிறதோ அதை தான் இந்திய ஊடகங்களும் ஒளிபரப்பும்...
இதனால் பல விஷயங்கள் நமக்கு தெரிவது இல்லை..
இதனிடையில் ஒரு வியாபரக்கொள்ளை இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது அது என்ன தெரியுமா ?
ஒரு ஆங்கில செய்தி நிறுவனம் இந்தியாவை பற்றிய வெளியிட்ட செய்தி
உலகில் மாம்பழம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் இடத்தில இருப்பது இந்தியா தான் என்பது தான் அந்த செய்தி..
தொடர்ந்து அந்த செய்தி நிறுவனம் சொல்கிறது ஒரு வருடத்திற்கு 15 மில்லியன் [tons ] டன் இந்தியாவை விட்டு
அயல்நாட்டிற்கு செல்கிறதாம்...
35 வகையான மாம்பழம் இந்தியாவை விட்டு வருடத்திற்கு 15 மில்லியன் டன் வெளிநாட்டிற்கு போகிறது என்றால் இந்திய மாம்பழ விவசாயிகள் பணக்காரர்களில் ஒருவர்களாக இருக்க வேண்டுமே எங்கே இவர்களது உழைப்பு?
மாம்பழ விவசாயிகள் என்று எந்த பத்திரிக்கையிலாவது செய்தி வந்தது உண்டா ?
அல்லது மாம்பழ விவசாயிகள் யாராவது இன்று பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்களா ?
மாம்பழம் பிழியப்படுவது போன்று பிழியத்தான் படுகிறது இந்திய பிரஜையின் உழைப்பு வெளிநாட்டுக்காக...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.