28/12/2017

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள்....


இந்த வாக்கியம் நம்மில் பலருக்கும் தெரியும், ஆராம்பத்தில் எதிரிகளால் இப்படி தவறாக மதிப்பிட பட்ட பலர் பின்னாட்களில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள்..

வியட்நாம், 1911 ஆம் ஆண்டின் ஒரு நள்ளிரவு. நிகே அன் பிராந்தியத்தின் சின்னஞ்சிறு விவசாய கிராமமான கிம்லியன் தூங்கிக்கொண்டிருந்தது. இந்தோ சீன பகுதியை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த நேரம் அது.

பிரெஞ்சு போலீஸ் லாரி ஒன்று புழுதியை கிள்ளப்பிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. அந்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியரையும் அவரின் மொத்த குடும்பத்தையும் லாரிக்குள் அள்ளி வீசியது. பிரெஞ்சு அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்பது அந்த ஆசிரயர் மீதான குற்றச்சாட்டு. கடைசியாக அந்த ஆசிரியரின் ஒரு மகன் மட்டும் லாரிக்கு வெளியில் நின்று கொண்டிருந்தான். உயராமாக மிகவும் மெலிந்து காணப்பட்ட பரிதாபத்திற்குரிய தோற்றம் கொண்ட சிறுவன் அவன்.

தானே சாவப்போற புழுவை நாம ஏண்டா அடிச்சு கொல்லனும், இவனை ஏத்த உள்ள வேற இடம் இல்லை என்று ஏளனம் செய்து விட்டு போலீசார் லாரியில் ஏறிக்கொண்டு ஊரை விட்டு வெளியேறி இருளில் மறைந்தனர். அந்த சிறுவன் அத்தோடு அவன் குடும்பத்தை மீண்டும் காணவில்லை..

கப்பல் ஒன்றில் உதவியாளனாக சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறினான். தன் தாய் நாட்டின் நலனை குறித்தும் தன்னை போலவே பலர் தொலைத்துவிட்ட குடும்பங்களை குறித்தும் சிந்திக்கலானான்.

அன்று தவறுதலாக மதிப்பிடபட்ட அந்த சிறுவன் தான் பின்னாளில் பிரெஞ்சு படைகளையும் பின்பு ஜப்பானிய படைகளையும் எதிர்கொண்டு வியட்நாமில் மன்னர் குடும்பத்தை துரத்தியடித்துவிட்டு மக்கள் ஆட்சியை நிறுவிய ஹோ சி மின்.

இத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை அவனின் போராட்டம்...

இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த காலம் அது. துரத்தி அடிக்கப்பட்ட மன்னன் பிரெஞ்சு, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறையிட இங்கிலாந்து அரச குடும்பம் இந்த விவகாரத்தை புதிய வல்லரசான அமெரிக்காவிடம் கையளித்தது.

அமெரிக்கா தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் வரைபடத்தில் தென் வியட்நாம் என்ற புதிய நாட்டை உருவாக்கியது. அதற்கு தலைவனாக அந்த மன்னனை அமர்த்தியது துணைக்கு தன் பெரும் இராணுவத்தை அனுப்பியது. குழந்தையாக தவழ்ந்து கொண்டிருந்த வியட்நாம் பயந்துவிடவில்லை. ஹோ சி மின் தலைமையில் மக்கள் அணி திரண்டனர். அமெரிக்கா ஆக்கிரிமிப்பில் இருந்த தென் வியாட்நாமில் மக்கள் கெரில்லா போராளிகளாக மாறினர்.

பகலில் வயலில் வேலை செய்யும் விவசாயி இரவில் ஆயுதம் ஏந்தினான், பகலில் பிள்ளைக்கு பால் கொடுத்த தாய் இரவில் வெடிகுண்டுகளோடு அமேரிக்க இராணுவத்தோடு போரிட்டால். உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது வியட்நாம் போர்.

[போரின் போது வியட்நாமில் சுமார் 8 மில்லியன் டன் வெடிகுண்டுகளை வீசியது அமெரிக்கா இது ஒட்டு மொத்தமாக இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளை விட மூன்று மடங்கு அதிகமாகம்.

அன்றைய வியட்நாமின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 300 டன் வெடி குண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டுள்ளது ].

அன்று ஏளனமாக எண்ணப்பட்ட அந்த சிறுவன் தான் யாராலும் தோற்கடிக்க முடியாது என்று மார்தட்டிக்கொண்ட (இன்றும் மார்தட்டிக்கொண்டிருக்கிற) அமெரிகக படைகளை மண்ணை கவ்வ செய்தவன். பெரும் சேதங்களுடன் அமெரிக்கா போரில் தோற்று வெளியேறியது. வியட்நாம் ஒரே நாடாக உலக வரைபடத்தில் இன்று கம்பீரமாய் காட்சியளிக்கிறது.

தெற்கு வியட்நாமின் தலைநகராக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட "சைகான்" அந்த சிறுவனின் பெயரை எடுத்துக்கொண்டது வரைபடத்தில் "ஹோ சி மின்" நகரம் ஆனது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.