ஆம் அந்த பயங்கரவாதிகளின் 2004 சுனாமி பேரிடர் மீட்பு நடவடிக்கை தான் உலகத்திலேயே தலைசிறந்த முன்மாதிரி மீட்பு நடவடிக்கை என சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
துவக்கை தூக்கி எறிந்து துடைப்பத்தை எடுத்தார்கள், எரிகணை சுமந்த கரங்கள் தான் வீடுகளை புணரமைத்தது, பீரங்கி இயக்கிய கைகள் தான் சாலைகளைச் செப்பனிட்டது, சைனடு குப்பிகள் தாங்கிய இதயங்கள் தான் சனங்களுக்கு சோறு போட்டது.
அங்கு நின்ற தலைவனுக்கு ஒரு நோக்கம் இருந்தது மக்களை பேரன்பு கொண்டு நேசிப்பதென்று..
அது தன் சொந்தக் குடிமகன்கள் கடலில் செத்து மிதப்பதை பாராமுகமாக இருக்கும் பிரதமருக்கோ, பனிரெண்டு நாட்கள் கழித்து எட்டிப் பார்க்க வரும் எடப்பாடிக்கோ சுட்டுப் போட்டாலும் வராது..
ஏனெனில் அவன் தலைவன், இவர்கள் தறுதலைகள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.