புயலில் படகு சேதமடைந்து மூழ்கியதும் கையில் கிடைத்த டீசல் கேன்களை ஒன்றாக இணைத்து அதில் தங்களையும் கயிறால் கட்டிக் கொண்டு நாம் எப்படியும் உயிர் பிழைத்து விடுவோம் என ரகு கொடுத்த நம்பிக்கையிலேயே மூன்று நாட்கள் நீந்தியிருக்கிறார்கள்.
முன்றாவது நாள், எனக்கு உடல் முழுவதும் அடிபட்டிருக்கு இனி என்னால் உயிர் பிழைக்க முடியாது நீங்கள் மட்டும் பிழைத்து கொள்ளுங்கள் என சபிணன் சொல்லியிருக்கிறார். செத்தால் மூன்று பேரும் சாவோம் பிழைத்தால் மூன்று பேரும் பிழைப்போம் என மூன்று பேரும் பிரிந்து சென்று விடாமல் இருக்க கயிறால் பிணைத்து கொண்டு உணவு தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்கள் நீந்தியிருக்கிறார்கள். மூன்றாவது நாள் லட்சத்தீவில் கரை ஒதுக்கிய கொஞ்ச நேரத்திற்கு முன்பே சபிணன் இறந்துள்ளார்.
மூன்று நாட்கள் கடலில் மிதந்தபடியே ஜீவ மரண போராட்டம் நடத்திய இந்த மீனவர்களை தேடுதல் பணிக்கு சென்ற கப்பல்களோ, ஹெலிகாப்டர்களோ கண்டுபிடித்து மீட்கவில்லை. அவர்களே கரையில் ஒதுங்கிய பின் மீட்கபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட இந்திய கடற்படை மீனவர்களை எப்படி பாதுகாக்கும். இது போல ஆபத்தான காலங்களில் மீனவர்களை மீட்க மீனவர்களை கொண்டு மாநில அரசு மீனவர் பாதுகாப்பு படை அமைப்பதே அவசியமானதாகும்.
மரணத்தின் பிடியில் மூன்று நாட்கள் நம்பிக்கையுடன் போராடி வென்ற ரகு, பரமசிவத்தின் துணிச்சல் அசாதரணமானது. அவர் கொச்சின் மருத்துவமணையிலிருந்து விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப இறைவன் அருள் புரியட்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.