31/12/2018

இலுமினாட்டி யும் - ஐயா நம்மாழ்வார் மரணத்தின் சந்தேகமும்...


தமிழின தந்தை பெரியார் நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம்...

இலுமினாட்டிகளின் செயலாக இருக்க வாய்ப்புண்டு..

மீத்தேன் திட்டத்தை எதிர்க்க உண்மையான தலைமைத்துவம் கொண்ட ஒரே ஆற்றல் ஐயா நம்மாழ்வார்..

அவரின் வழிகாட்டல் இல்லாமல் மீத்தேன் எதிர்ப்பு தவறாக மடைமாற்றப்படுகிறது..

நம்மாழ்வார் இறந்த நாள் 30.12.2013 , இலுமினாட்டிகளின் கணக்கியல் இங்கே நன்றாக பொருந்துகிறது..

30 , 3+0= 3
12 , 1+2= 3
2013, 2+0+1+3=6
336
33 6 .

இங்கு எதோ ஒரு பொருத்தப்பாடு இருப்பது சந்தேகமே...

தமிழர்களே விரைவில் சயல்ப்படுங்கள் , நம்மை சுற்றி நடக்கும் அரசியல் மிகவும் தவறான, ஆபத்தான ஒரு விடயமாக இருக்கிறது..

நம் இனம் ஆபத்தில் இருக்கிறது, உங்களால் தான் உங்களை காத்துக் கொள்ள இயலும்...

தமிழக அரசும் - காவல்துறை யும் கார்ப்பரேட் கைகூலியாகவே மாறிவிட்டது...


விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியம் கெடார் கிரமத்தில் தமிழர் திருநாள்  பொங்கலுக்காக பாணை, மண் அடுப்பு போன்ற மண் பொருட்கள் செய்வதற்காக செம்மண் ஏற்றிய மாட்டுவண்டியை பிடித்து காவல்துறையினர் துப்பாக்கியால் மாட்டை சுட்டுருக்கின்றனர....

இது போல் லாரியில்  திருட்டு மண்
ஏற்றுபவர்களை சுடுவார்களா?

ஆயுதம் எதற்காக வழங்கப்படுகிறது அப்பாவி ஏழை மக்களையும் கொள்வதற்கும்,  வாயில்லாத உயிரினத்தையும் சுடுவதற்குமா வழங்கப்பட்டது?

பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு - அரசியல் தீர்மானம் மற்றும் பிற தீர்மானங்கள்...


பாட்டாளி மக்கள் கட்சி புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு அரசியல் தீர்மானம் 2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு அதிகாரம்..

இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு 2019-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பொதுத்தேர்தல்கள் நடைபெறவுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானவை ஆகும். அதை உணர்ந்தே மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பா.ம.க. தயாராகிறது.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றாலும், மத்திய அரசு பெரியண்ணன் போக்குடன் தான் நடந்து கொள்கிறது. மாநிலங்களின் உணர்வுகளையும் மதிப்பதில்லை; மாநிலங்களின் உரிமைகளையும் கொடுப்பதில்லை. மத்திய அரசின் இந்தப் போக்கால் கடுமையாக பாதிக்கப்படுவது  தமிழ்நாடு தான். நீட் தேர்வு கட்டாயம், இந்தித் திணிப்பு, காவிரி உள்ளிட்ட ஆற்று நீர் பிரச்சினைகளில் துரோகம், தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவிகள் வழங்கப்படாதது என தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

வறட்சி நிவாரணம், வர்தா புயல் பாதிப்புகள், ஒக்கி புயல் பாதிப்புகள் ஆகியவற்றில் தமிழகத்திற்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய நிதி உதவிகள் கூட வழங்கப்படவில்லை. 2015&-ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு ரூ.13,731 கோடி நிதி கோரியது. ஆனால், மத்திய அரசு வெறும் ரூ.1940 கோடி மட்டுமே வழங்கியது. இது  கேட்டதில் 15% மட்டும் தான். 2016-ஆம் ஆண்டில் தமிழகத்தை தாக்கிய வர்தா புயலுக்காக தமிழக அரசு  ரூ.22,573 கோடி கோரியது. ஆனால், கிடைத்தது ரூ.266.17 கோடி மட்டும் தான். இது கிட்டத்தட்ட ஒரு விழுக்காடு மட்டுமே. 2017-ஆம் ஆண்டு வறட்சிக்காக தமிழக அரசு கோரியது ரூ.39,565 கோடி. ஆனால், கிடைத்தது ரூ.1748 கோடி தான். இது தமிழக அரசு கோரிய நிதியில் வெறும் 4% மட்டும் தான். 2017-ஆம் ஆண்டில் ஒக்கி புயல் பாதிப்புகளுக்காக தமிழக அரசு கோரியது ரூ.9300 கோடி. ஆனால் கிடைத்தது ரூ.133 கோடி மட்டும் தான். இது 1.5% நிவாரண உதவி மட்டுமே.

இப்போதும் கூட காவிரி பாசன மாவட்டங்கள் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கஜா புயலால் சிதைக்கப் பட்டுள்ளன. புயல் தாக்கி ஒன்றரை மாதங்களாகி விட்டன. மத்தியக் குழு தமிழகத்தில் ஆய்வு செய்து திரும்பி ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டன. ஆனால், தமிழகத்திற்கு இன்னும் நிவாரண உதவிகள் கிடைத்தபாடில்லை. உதவிக்காகவும், நிதிக்காகவும் தங்களிடம் கையேந்தும் நிலையில் தான் மாநில அரசுகளை மத்திய அரசு வைத்திருக்கிறது என்று தமிழக அமைச்சர் ஒருவரே ஒப்புக் கொள்கிறார்.

இந்த அவலநிலைகளுக்கெல்லாம் காரணம் மாநிலங்களின் உரிமைகளுக்காக சமரசமின்றி குரல் கொடுக்கும் கட்சிகளுக்கு மக்களவையில் போதிய வலிமையில்லாதது தான். பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்களவையில் அதிக உறுப்பினர்கள் இருந்த போது தமிழகத்தின் நலனுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் கடுமையான போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், தொடர்வண்டித்துறை இணையமைச்சராகவும் இருந்த போது தமிழகத்திற்கு கிடைத்த அத்துறை சார்ந்த திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட இப்போது கிடைக்கவில்லை. மத்திய அரசில் பா.ம.க. வலிமையாக இருந்த போது தான் ஆளும்  கூட்டணியின் வழிகாட்டுதல் கூட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் வலிமையாக வாதாடி மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார்.

இவை அனைத்துமே உணர்த்துவது மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மக்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான். இதை உணர்ந்து தான் மக்களவைத் தேர்தலுக்கான உத்திகளை பாட்டாளி மக்கள் கட்சி வகுத்து வருகிறது. இதற்காக ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு தீர்மானிக்கிறது. கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு வழங்குகிறது.

பாட்டாளி மக்கள் கட்சி புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம்...

தீர்மானம் 1 : வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குரு மறைவுக்கு இரங்கல்...

வன்னியர் சங்கத்தின் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான மாவீரன் ஜெ.குரு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில்  கடந்த மே மாதம் 25&ஆம் தேதி காலமானார். அவரது மறைவு பா.ம.க.வினருக்கு பெரும் சோகத்தை அளித்துள்ளது.

மாவீரன் குரு மீது மருத்துவர் அய்யா அவர்கள் மிகுந்த பாசம் கொண்டிருந்தார். மருத்துவர் அய்யா மீது மாவீரன் குரு மிகுந்த மரியாதையும், விசுவாசமும் கொண்டிருந்தார். ‘மரணம் மட்டுமே மருத்துவர் அய்யாவிடமிருந்து தம்மை பிரிக்கும்’ என்று முழங்கி மருத்துவர் அய்யா அவர்கள் மீது தாம் கொண்டிருந்த மரியாதையையும், பற்றையும் வெளிப்படுத்தினார். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை தமிழக  முதலமைச்சராக்க வேண்டும் என்பது தான் நமது லட்சியம்; அதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்திய மாவீரன் குரு அவர்கள், அதற்கேற்றவாறே செயல்பட்டு வந்தார்.

மாவீரன் குருவுக்கு உடல் நலம் பாதித்தது தெரிந்ததுமே மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் துடித்துப் போனார்கள். அவருக்கு உலகத்தர மருத்துவம் அளிக்க  நடவடிக்கைகள் மேற்கொண்டனர். கடுமையாக போராடியும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

மாவீரன் குரு அவர்களின் மறைவுக்குப் பிறகு அவருக்கு திரு உருவச்சிலை திறப்பு, சட்டக்கல்லூரி வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டல் என்று தொடர்ந்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்து நினைவு மணிமண்டபம் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் அன்பையும், பாட்டாளி மக்கள் கட்சியினரின் பாசத்தையும் பெற்றிருந்த மாவீரன் குரு அவர்களின் மறைவு அனைவரையும் பாதித்திருக்கிறது. அவரது மறைவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2 : மேகதாது அணை குறித்த ஆய்வுக்கான அனுமதியை திரும்பப்பெற வேண்டும்...

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைத் தயாரிக்கத் தேவையான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்திருப்பது தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிரானதாகும்.

கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி பாசன மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு பாலைவனமாகும் ஆபத்துள்ளது.

அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றின் குறுக்கே தமிழகத்தின் ஒப்புதல் இன்றி அணை கட்டுவது உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் அளித்த தீர்ப்புகளுக்கு எதிரானது ஆகும். அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை; ஆய்வுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு சார்பில் அளிக்கப்படும் விளக்கம் மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். அனைவருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய மத்திய அரசு, ஒரு மாநிலத்திற்கு ஆதரவாக செயல்படுவது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது மட்டுமின்றி, கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

எனவே, மேகதாது அணைக்கு திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3 : காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்...

காவிரி நீர்ப்பகிர்வு குறித்த நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக நீண்ட போராட்டத்துக்குப்  பிறகு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த ஜூன் 22-ஆம் தேதி அமைக்கப்பட்டது. அதன்பின் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் ஆணையத்துக்கு இன்னும் முழுநேரத் தலைவர் நியமிக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சமான ‘அணைகளை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் அதிகாரம்’ காவிரி ஆணையத்திற்கு வழங்கப்படவில்லை. நடப்பாண்டில் காவிரியில் அளவுக்கு அதிகமாகவே தண்ணீர் கிடைத்ததால் நீர்ப்பகிர்வில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஒருவேளை வரும் ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கர்நாடக அணைகளில் இருக்கும் தண்ணீரை  பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும். காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம்  நிறைவேற்ற மறுத்தால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காவிரி பிரச்சினையில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி தமிழகம் பெற்ற உரிமைகள் பயனற்றுப் போய்விடும்.

எனவே, காவிரி ஆற்று நீரில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கு முறையாக கிடைப்பதை  உறுதி செய்யவும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் காவிரி ஆற்றில் உள்ள அனைத்து அணைகளையும் கையாளும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும். அத்துடன், காவிரி ஆணையத்திற்கு உடனடியாக முழுநேரத்   தலைவரை நியமிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4. கஜா புயல் நிவாரண உதவியை மத்திய அரசு  உடனடியாக வழங்க வேண்டும்...

காவிரி பாசன மாவட்டங்களை கஜா புயல் தாக்கி இன்றுடன் 45 நாட்கள் ஆகும் நிலையில், பாதிக்கப் பட்ட பகுதிகளில் இன்று வரை இயல்பு நிலைமை திரும்பவில்லை. கிராமப் பகுதிகளுக்கு இன்னும் முழுமையாக மின்சாரம் வழங்கப்படவில்லை. வீடுகளை இழந்த மக்களுக்கு உதவி கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிவாரண உதவிகள் முழுமையாக சென்றடையவில்லை. ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கு மட்டுமே நிவாரண உதவி வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

மற்றொருபுறம் மத்திய அரசிடம் முதற்கட்டமாக தமிழக அரசு கோரிய ரூ.15,000 கோடி நிதியில் ஒரு பைசா கூட இன்னும் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு நவம்பர் 27-ஆம் தேதியே ஆய்வை முடித்து விட்டது. அதன்பின் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்று வரை மத்தியக் குழு அதன் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யவில்லை. மத்தியக் குழு எப்போது அறிக்கை தாக்கல் செய்யும்; எப்போது தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கும் எனத் தெரியவில்லை.

கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்கள் தங்க இடமின்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு இவ்வளவு தாமதம் செய்வது கண்டிக்கத்தக்கது. இனியும் தாமதிக்காமல் கஜா புயல் நிவாரண உதவியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தருவது உள்ளிட்ட மறுவாழ்வுப் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. சிறப்புப் பொதுக்குழு கோருகிறது.

தீர்மானம் 5: உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்...

தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரப் பாதைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் உழவர்களின் அனுமதி பெறாமல், உழவர்களின் விளை நிலங்களில் நுழைந்து அளவீடு செய்வது அரச அத்துமீறலாகும். இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மின்சாரமும், அதற்காக மின்பாதைகளும் அவசியம் ஆகும். ஆனால், அதற்காக உழவர்களில் விளைநிலங்களை ஆக்கிரமித்து, வாழ்வாதாரங்களை பறிப்பது நியாயம் அல்ல. இத்தகைய மின்பாதைகள் கேரளத்தில் சாலையோரங்களில் பூமிக்கு அடியில் அமைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, இந்தப் பாதைகள் சென்னை, சேலம், மதுரை, கோவை ஆகிய நகரங்களைக் கடந்து செல்லும் போது கூட பூமிக்கு அடியில் தான் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. இதேபோல், ஒட்டுமொத்த மின்பாதைகளையும் சாலையோரத்தில் பூமிக்கு அடியில் கேபிள்களை புதைத்து செயல்படுத்த வேண்டும்; அதன் மூலம் உழவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6: கொங்கு மண்டலத்தில்  தொழில்துறையினருக்கு  ஊக்குவிப்புத் திட்டம் தேவை...

தமிழகத்தின் தொழில் தலைநகரமாக திகழ்வது கோவை ஆகும். கோவை, திருப்பூர் மற்றும் அவற்றை ஒட்டிய கொங்கு மண்டலப் பகுதிகளில் இல்லாத தொழில்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து தொழில்களும் இப்பகுதியில் நடைபெறுகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த மோட்டார் பம்ப் தேவையில் 50 விழுக்காடும்,  கிரைண்டர் தேவையில் 90 விழுக்காடும் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. 15 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி  மூலம் ஆண்டுக்கு ரூ.25,000 கோடி அந்நிய செலாவணி கிடைக்கிறது. வேளாண் கருவிகள், நூற்பாலைகள், ஜவுளித் தொழிலுக்கான உபகரணங்கள், வாகன உதிரிப் பாகங்கள், காற்றாலைக்கான பாகங்கள், தங்க, வைர நகைகள் என அனைத்து வகையான தொழில்களும் கொங்கு மண்டலத்தில் நடக்கின்றன.

ஆனால், பல்வேறு காரணங்களால் அனைத்துத் தொழில்களும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து  வருகின்றன. இதே நிலை நீடித்தால் கோவை, திருப்பூருக்கு சென்றால் வேலை தேடி பிழைத்துக் கொள்ளலாம் என்றிருந்த நிலை மாறி, கொங்கு மண்டலத்தில் உள்ளவர்களுக்கே வேலை இல்லை என்ற நிலை உருவாகி விடும். தேவையான கொள்கை மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் மூலம் இந்த நிலையை மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.  கடந்த 2008-ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது, அதைப் போக்கி தொழில்துறையை முன்னேற்ற ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதேபோல், இப்போதும் கோவை மண்டலத் தொழில் வளர்ச்சிக்கான ஊக்குவிப்புத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் புத்தாண்டில் அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7:  ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதைத் தடுக்க சட்டப்பேரவையில் தனிச் சட்டம்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த ஆணை நியாயமற்றது; ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த மே 29-ஆம் தேதி தமிழக அரசு ஆணையிட்ட போதே அது வலிமையானது அல்ல; மக்களை ஏமாற்றுவதற்காக ஆலையை மூட உத்தரவிடுவது போல தமிழக அரசு நடிக்கிறது; தமிழக அரசின் இந்த ஆணை நீதிமன்றத்தில் நிற்காது என்று மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் சின்ன அய்யா அவர்களும் எச்சரித்திருந்தனர். அவர்கள் கூறியது தான் இப்போது உண்மையாகியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்ற தமிழக அரசு, அதனால் மக்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பை போக்கவே ஆலையை மூடுவது போன்ற நாடகத்தை நடத்தியது. இப்போதும் கூட பசுமை தீர்ப்பாயத்தின்  தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறும் தமிழக அரசு, அங்கு வழக்கை வலுவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மறுக்கிறது. தமிழகத்தில் தாமிர உருக்காலைகளுக்கு தடை விதித்து தொழிற்சாலைகள் சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்வது சட்டம் இயற்றி அதனடிப்படையில் இந்த வழக்கை எதிர்கொள்வது தான் சரியாக இருக்கும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.

தீர்மானம் 8 : சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்...

சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டம் தமிழகத்திற்கு தேவையற்றது என பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக 7000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்பதால் பத்தாயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து சொந்த ஊரில் அகதிகளாக வாழ நேரிடும் என்று எச்சரித்த  பா.ம.க, இச்சாலைத் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் கருத்துக்கேட்பு, போராட்டம் உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்தியது. எனினும் 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில் அரசுகள் உறுதியாக இருந்ததால், அத்திட்டத்திற்கு எதிராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொடர்ந்த வழக்கில், பசுமைச் சாலைத் திட்டத்திற்காக நிலங்களைக் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  ஆனால், அதன்பிறகும் நிலங்களைக் கையகப்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது. பசுமைச்சாலையை அமைத்தே தீருவோம் என்று தமிழக முதலமைச்சர் முழக்கமிட்டார். இவற்றையும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதன்பயனாக இந்த வழக்கின் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலனைக் காக்க மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவருக்கு இந்தப் பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.  இவ்வழக்கில் நல்லத் தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்.

சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் இருக்கும் நிலையில், நான்காவதாக இந்த பசுமைச்சாலை அமைப்பதால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. அதேநேரத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் அவர்களின் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். இந்த உண்மையை உணர்ந்து, பிடிவாதம் பிடிக்காமல், சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தை  கைவிட மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 9: உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த  வேண்டும்...

தமிழ்நாட்டில் 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்கள் அதன்பின் இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை நடத்தப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் பல முறை கண்டிப்புடன் கூறியும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக ஆட்சியாளர்கள் முன்வரவில்லை.

உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து உடனுக்குடன் முடிவெடுத்து செயல்படுத்த முடியவில்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், நிதிக்குழு பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை ஒதுக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. 2018-19 ஆம் ஆண்டின் முதல் பாதிக்கான ரூ.850 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ.5000 கோடி நிதி முடக்கப் பட்டுள்ளது.  இதனால் உள்ளாட்சிகளில் அன்றாட செலவுகளுக்குக் கூட நிதியில்லாத நிலை உருவாகியுள்ளது.

நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதி சீரமைப்புப் பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில்,  உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிடும்படி பா.ம.க கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 10: நெய்வேலியில் சுரங்கம்-3 அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்...

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் நெய்வேலி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில்  ஏற்கனவே 3 சுரங்கங்கள் அமைக்கப்பட்டு, அவற்றிலிருந்து ஆண்டுக்கு 28.50 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இதுவே தேவைக்கும் அதிகம் எனும் நிலையில், இப்போது சுரங்கம்-3 என்ற பெயரில் நான்காவது சுரங்கத்தை அமைக்க என்.எல்.சி. நிறுவனம் முடிவு செய்து, அதற்காக 12,125 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. தேவையற்ற  இச் சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களால் 26 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரங்களை இழப்பர்.

என்.எல்.சி. நிறுவனம் தேவைக்கும் அதிகமாகவே நிலக்கரியை உற்பத்தி செய்கிறது. எதிர்காலத் தேவைக்காக 10,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் தரும் நிலங்களை  உழவர்களிடமிருந்து பறிக்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி, புதிய சுரங்கத்திற்காக மணிமுத்தா, வெள்ளாறு ஆகிய ஆறுகளை விருத்தாசலத்திற்கு முன்பாக இணைக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனால், மழைக்காலங்களில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும். இது ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் ஆபத்தாகும். மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்பு, இயற்கைப் பேரிடர் தடுப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சுரங்கம் -3 அமைக்கும் திட்டத்தையும், அதற்காக நிலங்களை பறிக்கும் முடிவையும் என்.எல்.சி நிறுவனம் அடியோடு ரத்து செய்ய வேண்டும்.

தீர்மானம் 11: அத்திக்கடவு - அவினாசி உள்ளிட்ட பாசனத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்...

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டு கனவான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அத்திக்கடவு - அவினாசி திட்டம் ரூ.3523 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.1532 கோடிக்கு மட்டும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருப்பதால், திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாமோ? என்ற ஐயம் உழவர்களிடையே எழுந்துள்ளது. பொதுப்பணி துறைக்குரிய 31 ஏரிகள், பஞ்சாயத்துக்கு உட்பட்ட 40 குளங்கள், 538 குட்டைகள் ஆகியவற்றை நிரப்பும் அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட  உழவர்கள் குழுக்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் விருப்பப்படி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

அத்துடன், ஆணைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் பாண்டியாறு - புன்னம்புழா, பரம்பிக்குளம் - ஆழியாறு ஆகிய பாசனத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். இவை தவிர மேட்டூர் அணை உபரி நீர் மேலாண்மைத் திட்டம், மேட்டூர் அணை வலதுகரை கால்வாய் நீட்டிப்புத் திட்டம், சேலம் மாவட்டத்தில் தோனி மடுவு பாசனத் திட்டம், தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம், தருமபுரி மாவட்டத்தில் என்னேகொல்புதூர் பாசனத்திட்டம் உள்ளிட்ட பாசனத் திட்டங்களையும், பல்வேறு ஆறுகளில் தடுப்பணைகள் கட்டும் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின்  சிறப்பு பொதுக்குழு கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 12 : காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்...

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அறியப்பட்ட காவிரி படுகையை இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு மண்டலமாக மாற்ற மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மீத்தேன் எரிவாயுத் திட்டம், பெட்ரோக் கெமிக்கல்ஸ் மண்டலம் ஆகியவற்றைத் தொடர்ந்து காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய்க் கிணறுகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 149 எண்ணெய்க் கிணறுகள், எரிவாயு வயல்களை தனியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது.

தனியார் நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் எந்த வரையறைக்கும் கட்டுப்படாமல் எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களைச் சுரண்டும் என்பதால் காவிரிப் படுகையில் பூகம்பம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்படக்கூடும். ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடம் இந்த வயல்கள் இருந்தால் எவ்வளவு காலத்தில்  காவிரிப் படுகை பாலைவனமாகுமோ, அதில் பாதி காலத்தில் இப்போது பாலைவனமாகும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க வேண்டுமானால், காவிரி பாசன மாவட்டங்களில் வேளாண்மைக்கு எதிரான எந்த தொழிற்சாலைகளையும் அனுமதிக்கக்கூடாது. இதற்காக காவிரி பாசன மாவட்டங்களை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்டத்தை வரும் 02.01.2019 அன்று தொடங்கும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கோருகிறது.

தீர்மானம் 13:  7 தமிழர்களை புத்தாண்டில் விடுதலை செய்ய வேண்டும்...

இராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகளாக சிறைக் கொட்டடிகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஐந்தாண்டுகளாக  வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டையாக உள்ளது.

எழுவர் விடுதலை குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்  161-ஆவது பிரிவின்படி மாநில அரசே அவர்களை விடுதலை செய்து கொள்ளலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அதே மாதத்தின் 9-ஆவது நாளில் எழுவரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அத்தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டு இன்றுடன் 113 நாட்களாகி விட்டன. ஆனால், தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுனர் மாளிகை இதுவரை முடிவெடுக்காதது தமிழக மக்களிடம் அயற்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ஆளுனருக்கென தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை. அமைச்சரவையின் முடிவை செயல்படுத்துவது தான் அவரது கடமை.

எனவே, 7 தமிழர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று 7 தமிழர்களையும் புத்தாண்டில் விடுதலை செய்ய ஆளுனர் ஆணையிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 14:  தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்...

தமிழ்நாட்டில் மிகப்பெரிய சமூகத் தீமையாக மது உருவெடுத்துள்ளது. மதுவால் தமிழகத்தில் ஆண்டு  தோறும் 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சாலை விபத்துகளில் ஆண்டுக்கு சராசரியாக 16,000 பேர் உயிரிழக்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் மன நோய்க்கு ஆளாகின்றனர். இளம் கைம்பெண்களின் எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. இவற்றுக்கு முடிவு கட்டுவதற்காகத் தான் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. அத்துடன் சட்டப்போராட்டம் நடத்தி தமிழக நெடுஞ்சாலைகளில் இருந்த 3321 மதுக்கடைகளை மூடியது.

ஆனால், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அதிமுக, மதுக்கடைகளை மூடாமல், மூடப்பட்ட மதுக்கடைகளை திறப்பதில் தான் தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் மது விற்பனையும், மது வருவாயும் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் கேடு ஆகும். இந்த உண்மையை உணர்ந்து  தமிழ்நாட்டில் வரும் தைத் திருநாள் முதல் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 15:  ஊட்டி உருளைக்கிழங்கு ஆய்வு நிறுவனத்தை மூடும் திட்டத்தைக் கைவிடுக...

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகிலுள்ள முத்தோரையில் செயல்பட்டு வரும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை மூட இந்திய வேளாண் ஆராய்ச்சிக்குழு முடிவு செய்திருக்கிறது.1957-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய உருளைக்கிழங்கு நிறுவனம் தென்னிந்தியாவில் உருளை சாகுபடியை பெருக்குவதில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. உருளைக்கிழங்கு  விளைச்சலை பாதிக்கும் நூற்புழு தாக்குதல், இலைக்கருகல் நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்ட குப்ரி கிர்தாரி, குப்ரி ஹிமாலினி, குப்ரி சூர்யா, குப்ரி சக்யாத்ரி ஆகிய உருளைக்கிழங்கு வகைகளை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் பயிரிடுவதற்கு  ஏற்ற விதை உருளைக்கிழங்குகளை இந்த நிறுவனம் மட்டுமே உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் மூடப்பட்டால்  தமிழகத்தில் உருளைக்கிழங்கு சாகுபடியே செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு செய்தாலும் உருளைகள் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகி இழப்பு தான் ஏற்படும்.  ஒவ்வொரு பயிருக்கும் ஒரே ஒரு ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டால் போதுமானது என்ற அடிப்படையில் ஊட்டி உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை மூடும் மத்திய அரசின் முடிவு தவறானது. தென் மாநிலங்களில் லாபகரமான உருளை சாகுபடிக்கு ஊட்டி முத்தோரை மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் தான் ஆதாரம் ஆகும்.

எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில விவசாயிகளின் நலன் கருதி ஊட்டி உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என இப்பொதுக்குழு  கோருகிறது.

தீர்மானம் 16:  போர்க்குற்றம்: இலங்கையை தண்டிக்க ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வருக...

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழினத்திற்கு எதிரான போரில் ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றங்கள் இன்னும் தொடருகின்றன. இலங்கை மீதான போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா.மனித உரிமை ஆணைய விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அடுத்தக்கட்டமாக போர்க்குற்றங்கள் இழைத்தவர்களை நீதிமன்றக் கூண்டுகளில் ஏற்றி தண்டனை பெற்றுத்தரும்படி இலங்கைக்கு ஐநா மனித உரிமைகள் பேரவை ஆணையிட்டது. அதற்காக காலக்கெடு 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைகிறது. ஆனால், போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளை இலங்கை அரசு மேற்கொள்ளாத நிலையில், அது குறித்த அறிக்கையை, ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தில் ஆணையர் தாக்கல் செய்யவிருக்கிறார்.

அந்தக் கூட்டத்தில், ‘‘இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை விசாரித்து, ஆவணப்படுத்த, சிரியா, மியான்மர் நாடுகளுக்காக அமைக்கப்பட்டது போன்று, சர்வதேச பொறிமுறையை (International, Impartial and Independent Mechanism -IIIM) உருவாக்க வேண்டும்-இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் ( International Criminal Court ) விசாரணைக்கு உட்படுத்தக் கோரி ஐநா பொதுச்சபைக்கும் ஐநா பாதுகாப்புச் சபைக்கும் பரிந்துரைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க பொதுக்குழு கோருகிறது.

தீர்மானம் 17:  2019-ஆம் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாக கடைபிடிக்க உறுதி...

2017-ஆம் ஆண்டு இதே நாளில்  மதுரையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் 2018-ஆம் ஆண்டை இளைஞர்கள் எழுச்சி ஆண்டாக கடைபிடிக்க  தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பாட்டாளி இளைஞர்கள் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம், பாட்டாளி மாணவர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு அரசியல் பயிற்சிகள் வழங்கப் பட்டன. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்த அவர்கள் தயாராகியுள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தொழில் மற்றும் பொருளாதார நிலையில் சிங்கப்பூர், சீனா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாகவே தமிழ்நாடு திகழ்ந்தது. ஆனால், அடுத்த 50 ஆண்டுகளில், கல்வி, தொழில்துறை, வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் அந்த நாடுகள் எட்டிய வளர்ச்சியில் 10 விழுக்காடு அளவுக்குக் கூட தமிழகத்தால் முன்னேற்ற முடியவில்லை.

இதற்கான காரணங்களில் முக்கியமானவை தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஊழல், தொலைநோக்குப் பார்வையற்ற ஆட்சித் தலைமைகள், மக்கள் சிந்தித்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை மது, இலவசங்கள், திரைப்படம் ஆகியவற்றுக்கு அடிமையாக்கி வைத்தது ஆகியவை தான். இத்தீமைகளை ஒழித்தால் மட்டுமே தமிழகத்தை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக முன்னேற்ற முடியும்.

இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் தமிழக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2019-ஆம் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாக கடைபிடிக்கவும் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. இதற்காக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் துணை அமைப்புகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் பயிலரங்குகள், கருத்தரங்குகள், களப்பயிற்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தவும் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு உறுதியேற்கிறது...

பாமக அன்புமணி காணொளி...



Subscribe and share the youtube channel...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


இராமேஸ்வரம் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு...

பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்...


பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.

பெருங்காயம்,வெப்பத்தை (உஷ்ணத்தைத்) தரக்கூடியது, உணவை செரிப்பிக்கிறது, சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது, பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.

உபயோகங்கள்:

இது ஒரு நல்ல வாய்வகற்றி ; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது.

இது வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், நீரேற்றத்தையும்-சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது.

சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.

இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாதவிடாயின்போது இரத்தப்போக்கினை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது.

நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது.

பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.

இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்.

இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.

பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.

கோழி முட்டை மஞ்சட் கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்...

ஈழத் தமிழர்களை அழிக்க சிங்களவனுக்கு உதவிய இலுமினாட்டி இஸ்ரேல் நாடு...


இறந்து போன தாயின் சடலத்துடன் 18 நாட்கள் தங்கி இருந்த வாலிபர்.. பின்னணியில் அதிர்ச்சி தகவல்...


கொல்கத்தா சி.ஐ.டி அலுவலகத்தை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், சால்ட் லேக் பகுதியைச் சேர்ந்த தனது  நண்பரான மைத்ரேய பட்டாச்சார்யா என்பவர், இறந்து போன அவரது தாயை 18 நாள்களாக வீட்டில் வைத்துள்ளதாகவும், அந்த உடலை அடுத்த இரு நாட்களில் புதைக்கவுள்ளதாகவும் அதற்காக தன்னை உதவிக்கு அழைப்பதாகவும் கூறியுள்ளார்.

 இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்கு விரைந்துள்ளனர். பாழடைந்த அவ்வீட்டில் ஒரு வயதான பெண்மணி இறந்து கிடந்துள்ளார். பின்னர் அந்த பெண்மணியின் மகனும் அந்த வீட்டில்  இருந்தவருமான  மைத்ரேய பட்டாசார்யாவை காவல்துறையினர் பிடித்து விசாரிக்கையில் மேலும் சில வியப்பூட்டும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

கடந்த 2013-ஆம் ஆண்டு மைத்ரேய பட்டாச்சார்யாவின் தந்தை தீ விபத்தில் இறந்துபோன பிறகு அவரது நினைவாக வீட்டை புதுப்பிக்காமல், பாழடைந்த அந்த வீட்டில் மைத்ரேய பட்டாச்சார்யாவும் அவரது தாயும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் 18 நாட்களுக்கு முன்பு, அவரது தாய் கிருஷ்ண பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால், மருத்துவம் செய்யக்கூட பணமில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார்.

ஆனால் தன் தாய் இறந்ததும் வீட்டில் உள்ள அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு இறந்துபோன தாயுடன் தனியாக இருந்துள்ளார் மைத்ரேய பட்டாச்சார்யா.

கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பின்பு அதீத கடவுள் நம்பிக்கை காரணமாக, இறந்து போன ஒருவரை 21 நாட்கள் கழித்து சரியான மங்களகரமான நேரத்தில் புதைக்க வேண்டும் என்று மைத்ரேய பட்டாச்சார்யாவின் தந்தை கூறியதை நம்பி, அவர் இவ்வாறு இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியரான தன் அம்மாவுக்கும் இந்த விஷயத்தில் நம்பிக்கை இருந்ததாக கூறியுள்ள மைத்ரேய பட்டாச்சார்யா தன் தாயை முற்றத்தில் புதைக்க எண்ணி தன் நண்பருக்கு தொடர்பு கொண்டபோது, அவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துவிட்டதாகக் கூறியுள்ளார்...

பாஜக வின் ஏமாற்று வேலைகள்...


நாம் காணும் கனவுகள்...


ஓர் சராசரி மனிதன் ஒவ்வொரு நாளும் இரவில் 4 முதல் 6, ஆகவே ஒரு வருடத்தில் 1.460 முதல் 2.190 கனவுகளை காண்கிறான்.

அதிலும் ஒரு கனவு 5 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களைக் கொண்டதாக இருக்கும்.

இப்போ நீங்கள் யோசிக்கலாம் இது என்னடா… காலையில் எழும்பும் போது ஒரு கனவே நினைவில் இல்லையாம் அப்படி என்றால் எப்படி 6 கனவுகள் காண்கிறோம் என்று.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இது தான்..

நீங்கள் 95% முதல் 99% ஆகிய அனைத்து கனவுகளையும் உடனடியாக மறந்து விடுவீர்கள்..

ஏன் என்றால், நீங்கள் காணும் எல்லாக் கனவுகளுமே உங்களுக்கு சுவாரசியமாக இருப்பது இல்லை..

ஆகவே அவை அனைத்துமே மறந்து விடுகின்றீர்கள்.

மேலும் பார்ப்போம்…

நீங்கள் கனவுகளில் காணும் அடையாளம் தெரியாத நபர்கள் கூட உண்மையில் நீங்கள் எப்போதாவது சந்தித்த ஒருவராகத் தான் இருக்கும்.

அவர் பக்கத்து ஊர் McDonald’s இல் வேலை செய்யும் ஒருவராக அல்லது தெருவில் தற்செயலாக பார்த்த ஒருவராகத் தான் இருப்பார்.

கற்பனையிலேயே ஒரு புது முகத்தை நமது மூளை தயாரிப்பதில்லை.

நமது வாழ்நாளில் நாம் பார்த்த விஷயங்களை வைத்துத்தான் நமது மூளை கனவுகளை உருவாக்கின்றது.

சரி, கனவில் நடப்பதை நீங்கள் விரும்பும்படி மாற்றி அமைக்க முடியும் என்றால் நல்லா இருக்கும் அல்லவா?

உண்மை சொல்லப் போனால் அது கூட முடியும்..

Lucid Dreaming என குறிக்கப்படும் முறையை கற்றுக் கொண்டால் உங்கள் கனவுகளுக்கு நீங்களே கதை, வசனம், இயக்கம் மட்டும் செய்யாமல், நீங்களே கதாநாயகனாக திரிசா, நயன்தாரா, அசின், தமன்னா என்று எல்லோருடனுமே கனவில் ஒரு திரைப்படம் எடுக்கலாம்…

இப்போ நீங்கள் மட்டுமே காணக்கூடிய உங்கள் கனவுகளை எதிர்காலத்தில் YouTube இல் கூட upload பண்ணலாம் என்று விஞ்ஞானம் சொல்கிறது.

University of California Berkeleyயில் இது தொடர்புடைய ஆராய்ச்சி நடை பெறுகிறது.

இதில் சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா…?

12 சதவீதமானவர்கள் தமது கனவுகளை Black & White இல் தான் காண்கிறார்கள்…

நீங்க என்ன மாதிரி.. Color கனவா Black & White கனவா காண்கிறீங்க...

மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எல்லாம் கார்ப்பரேட் முதலைகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது...


தீட்சிதர்கள் தமிழை நீசபாசை என்றார்களா?


தில்லை அதாவது சிதம்பரம் சைவர்களின் இதயம்.

சிவனிய மதத்தின் தலைமை பீடம்.

மாலை ஆறுமணி.

கோவிலின் இரண்டு காண்டா மணிகள் கணீரென்று ஓசைகள் எழுப்பி சுற்றுப்புறத்தை ஒரு மைல் தூரம் அதிர வைக்கின்றன.

கோயிலை நெருங்கினால் காண்டா மணிகளின் ஓசையுடன் சிறுசிறு மணிகள் சேர்ந்துகொண்டு கிலுகிலுவென்று தம் பங்குக்கு ஒலியெழுப்புவதையும் கேட்க முடிகிறது.

இன்னும் நெருங்கினால் வேத முழக்கம் செய்யும் பார்ப்பனரின் குரலும் அந்தப் பேரோசையில் கலந்திருப்பது புலனாகிறது.

திடீரென்று அனைத்து ஓசைகளும் நின்றுவிடுகின்றன.ஒரு பேரமைதி சூழ்கிறது.

ஒரு குரல் ஒலிக்கிறது.பல ஆண்டுகள் பயிற்சி பெற்ற செம்மையான நடையில் பதிகங்களைப் பாடுகிறது.

என்ன மொழியில்?

ஆம், அது தமிழ்.

கோவிலின் உள்ளே நுழைகிறோம்.

பார்த்தால் தமிழில் பாடும் அந்த செம்மையான குரல் ஒரு பார்ப்பனப் பூசாரிகளில் ஒருவரின் குரல்.

ஆம். இப்பார்ப்பனர்கள்தாம் புகழ்பெற்ற தமிழ்ப் பார்ப்பனர்களான 'தில்லைவாழ் அந்தணர்கள்'.

அதாவது சோழியப் பார்ப்பனர்கள்.

தற்போது தீட்சிதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

மொத்தமே 360 குடும்பம்தான் இருக்கும்.
அனைவரும் தில்லை கோவிலைச் சுற்றிய தேரடி வீதிகளிலேயே வாழ்கிறார்கள்.

சிறிது நேரத்தில் அப்பார்ப்பனரான் தமிழ் வேதமுழக்கத்துடன் மீண்டும் சிறுசிறு மணிகளும் காண்டா மணிகளும் மங்கள இசைக்கருவிகளும் சேர்ந்து கொள்கின்றன.

நாத்திகருக்கும் பரவசமூட்டும் அந்த இசை வழிபாடு உச்சகதிக்கு போய் அரைமணி நேரத்தில் முடிவடைகிறது.

தில்லை நடராசர் கோவிலுக்கு போனால் நாள்தோறும் மாலை ஆறுமணிக்கு, ஆதிசங்கரர் தந்ததாக நம்பப்படும் ஸ்படிக லிங்கத்துக்கும் நடராஜருக்கும் இந்த பூசை நடக்கும்.

இதிலே பாடப்படும் தமிழ் மந்திரம் மற்ற எல்லா மனிதர்கள் காதிலும் விழும்.

ஆனால் 'பார்ப்பன வெறுப்பு' விசம் ஊட்டப்பட்ட அதிமுற்போக்கு மனிதர்களின் காதில் மட்டும் இது கேட்கவே கேட்காது.

பார்ப்பனர் தமிழ் ஓதினால் போதும் அதிமுற்போக்குவாதியின் காதுகள் சட்டென்று செவிடாகிவிடும்.

இவர்கள் காதுகள் வேறு எப்போதெல்லாம் செவிடாகும் தெரியுமா?

இரவு ஒன்பது மணிவாக்கில் நடக்கும் அர்த்த ஜாம பூஜையின் போது நடராஜரின் பாதுகைகளை பள்ளியறைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லும் போதும் தீட்சிதர்கள் தமிழ் பதிகங்கள் பாடுவார்கள்.அப்போது செவிடாகி விடும்.

தேர் தரிசன உற்சவத்தின் போது பத்து நாட்களும் மாணிக்கவாசகர் சிலை கொண்டு வரப்பட்டு அனைத்து சாதி பக்தர்களும் ஓதுவாருடன் சேர்ந்து திருவெம்பாவை பதிகங்களை சத்தமாக பாடுவார்கள்.

திருவெம்பாவை தமிழ்தான்.அப்போதும் அதிமுற்போக்காளர் செவிடாகி விடுவார்.

தேர் திருவிழாவின் போது தேர் நிலைக்கு வந்ததும் நடராஜரை கோவிலுக்குள் கொண்டு செல்வதற்கு முன் தமிழ் பதிகங்களை பாடித்தான் தீப ஆராதனை நடக்கும்.

இது சிதம்பர ரகசியம் அல்ல. வெளிப்படையாக நடக்கும் நிகழ்வு.

சிதம்பரத்தில் வாழும் யாரையும் கேட்டுப் பாருங்கள்.

ஆனால் அதிமுற்போக்காளரை அங்கே கொண்டு நிறுத்தி கேட்டாலும் அவர் மட்டும் மறுப்பார்.

ஏனென்றால் அவர் காதுதான் அப்போது அவிந்து போய் விடுமே.

அப்படி என்றால் சிதம்பரம் தீட்சிதர்கள், ஆறுமுகசாமி என்ற ஓதுவாரை தமிழில் பாட விடாமல் தடுத்தார்கள் என்று செய்தி வந்ததே?

தமிழ் நீஷபாஷை என்று தீட்சிதர்கள் கூறியதாக கேள்விப்பட்டோமே?

ஆம். அப்படியெல்லாம் பரப்புரை செய்பவர்கள் 'பார்ப்பன எதிர்ப்பு' விசத்தை வியாபரம் செய்பவர்கள்.

ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் தடுத்ததற்குக் காரணம் அவர் கருவறை இருக்கும் மேடையான திருச்சிற்றம்பலத்தில் நின்று பாடுவேன் என்று அடம்பிடித்தது தான்.

தீட்சிதர்கள் கருவறை இருக்கும் மண்டபத்தில் ஏறி பாட தடை எதுவும் கூறவில்லை.

அவர்கள் கூறுவது கருவறை மேடைக்கு வரக்கூடாது என்பது தான்.

ஆக இங்கே பிரச்சனை தமிழ் இல்லை.
திருச்சிற்றம்பலத்தில் ஏறி நாள்தோறும் மாலை தமிழில் தான் தீட்சிதர் பாடுகிறார்.

இதை தமிழுக்கு ஏற்பட்ட இழிவாக ஏன் திரிக்கிறார்கள்?அந்த திரிப்பு எப்படி எடுபடுகிறது?

திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியான பொய்ப் பிரச்சாரம் இது எடுபட வழி செய்துள்ளது.

சாதிப் பெயர்கள் வைத்து எத்தனையோ கடைகள் உள்ளன.

ஆனால் 'ஐயர் கபே' என்று கடை வைத்தால் அந்த கடை முன்னே சென்று படுத்து உருண்டு பெயரை மாற்றச் செய்வார்கள்.

அரசியலுக்காக இதைச் செய்கிறார்கள்.

வாஞ்சிநாதன் ஆஷ்துரையைச் சுட்டுக்கொன்ற பின் அவர் பையில் வைத்திருந்த சீட்டில் பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜை பஞ்சமன் என்று வடமொழி வடிவத்தில் எழுதிவிட்டார் (பஞ்ச்சம் = ஐந்தாவது) உடனே பார்ப்பான் வெள்ளைக்காரனைக் கூட கீழ்சாதியாகப் பார்க்கிறான் என்று ஆங்கில அடிவருடி கொள்கையையுடைய திராவிடவாதிகள் பரப்புரை செய்தனர்.

மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஒன்றைக் கூறுகிறேன்.

இராஜாஜி தன் ஆட்சிக்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் ஆசிரியரின் பணி நேரத்தை பல வகுப்பு மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தார்.

ஆசிரியர் இல்லாத நேரத்தில் என்ன செய்யலாம் என்று பேட்டியில் கேட்டதற்கு "வீட்டிற்குச் சென்று பெற்றோருக்கு உதவிகள் செய்யலாம்" என்றார்.

அவ்வளவு தான்.

"பார்ப்பான் மனுதர்மப்படி குலத் தொழிலை செய்யச் சொல்லிவிட்டான்" என்று பொய் பிரச்சாரம் செய்து செய்தே அவரை பதிவியிலிருந்து இறங்கினார் அண்ணாதுரை.

இன்று அத்திட்டத்தின் பெயரே 'குலக்கல்வித் திட்டம்' என்றாகிவிட்டது.

ஆனால் அந்த திட்டம் இராசாசி போட்ட திட்டம் கிடையாது.குலம் பற்றி அதில் எதுவுமே கூறப்படவில்லை.

இதுபோல பார்ப்பனர் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் உடைக்க முடியும்.

ஆனால் பார்ப்பனர் தமிழர் என்று கூறினாலே காரணமே இல்லாமல் பல நல்லவர்களுக்கும் கூட கண் அவிந்து காது திருகி மூளை மழுங்கி போய் விடுகிறது.

ஆகவே தமிழரே, பார்ப்பனர் தமிழனத்தின் ஒரு குலத்தினரே.

தமிழ்ப் பார்ப்பனர்களை பிறமொழிப் பிராமணருடன் குழப்ப வேண்டாம்.

தமிழ் ஓலைச்சுவடிகளை பாதுகாத்தோர் இந்த தில்லை சோழியப் பார்ப்பனர்கள் தான்.

இராசராசன் அவற்றை மீட்ட கதை தெரியும் தானே?

அந்நிய படையெடுப்பின் போது நடராசர் சிலையை பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று மறைத்து வைத்து பாதுகாத்ததும் இதே தில்லைவாழ் சோழியப் பார்ப்பனர்கள் தான்.

எத்தனையோ கொடுமைகளையும் கொலைகளையும் சந்தித்த பிறகும் அவர்கள் சிலைகளை மறைத்து வைத்த இடத்தைக் காட்டிக் கொடுக்கவில்லலை.

சிதம்பரம் கோயிலுக்குள்ளேயே எட்டு சிலைகள் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்ததைப் பின்னர் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர் (ஜோப் தாமஸ், ‘திருவெண்காடு ப்ரோன்ஸ்’ (Tiruvengadu Bronzes), க்ரியா, 1986).

மாலிக் கபூர் படையெடுப்பை ஒட்டிய குழப்பமான காலகட்டத்தில் உமாபதி சிவாச்சாரியர் என்பவர் சாதி எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் ‘பேதமற தீக்கை’ (பேதமற்ற தீட்சை) தந்து தீட்சிதர் ஆக்கினார்.

முதலில் அவரை எதிர்த்த தீட்சிதர் பிறகு மனம் மாறி உமாபதி சிவாச்சாரியாரை மீண்டும் திருக்கோயில் பூசனைகளுக்கு அழைத்தனர்.

விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் (1400 - 1700) சிவன் கோயில்கள் புறக்கணிக்கப்பட்டன.

பல சைவ கோவில்கள் அரசு ஆதரவின்றி அழிந்து போயின.

அப்போது தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயிலை தாமே பொறுப்பெடுத்துக் கவனித்துக் கொள்ளத் தொடங்கினர்.

கிறித்துவ மிஷனரிகளின் சூழ்ச்சியால் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாடார்களுக்கு ஆதரவாக தீட்சிதர்கள் சாட்சி கூறியதும் அதனால் (மிஷனரிக்கு ஆதரவான) பிரிட்டிஷ் நீதிபதிகளால் கடுமையான அவமதிப்புக்கும் ஆளானார்கள்.

(தோள்சீலைக் கலகம், ‘சிஷ்ரி’ (SISHRI), 2010)

நாடார்கள் லண்டன் வரை மேல்முறையீடு செய்தும் அநியாயமான தீர்ப்பே வந்தது.

எனவே தீட்சிதர்கள் எந்த அரசாங்கத்தையும் நம்புவதில்லை.

அதனால் தான் கோவிலை அறநிலையப் பொறுப்பில் ஒப்படைக்க மறுக்கிறார்கள்.

அதற்காக தீட்சிதர்கள் செய்வதெல்லாம் சரியென்று கூற முடியாது.

தீட்சிதர்கள் மீது இன்னும் எவ்வளவோ விமர்சனங்கள் உண்டு.

அவர்கள் சைவ ஆகமத்தை பின்பற்றாது பதஞ்சலி முனிவர் வகுத்த முறையை பின்பற்றுகின்றனர்.

கோவில் நகைகள் காணாமல் போனது.

காசு கொடுத்தால் சிறப்பு பூசை.

மாத சந்தா கொடுத்து விட்டால் கோவிலுக்கு வராமலே அர்ச்சனை செய்து பிரசாதம் பெறும் வசதி செய்து தருவது.

ஆண்களை சட்டையைக் கழற்றச் சொல்வது.

பிறமதத்தாரை உள்ளே விடாதது.

திருமணம் ஆனால் தான் தீட்சை பெற்று தீட்சிதர் ஆகும் தகுதி கிடைக்கும் என்பதால் இளவயது திருமணம் செய்வது.

என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் உள்ளன.

அதைப் பற்றி நான் இங்கே கூற வரவில்லை.

நான் கூற வருவது தீட்சிதர்கள் தமிழுக்கு எதிரானோர் இல்லை என்பதைத் தான்.

ஆகவே தமிழர்களே...

திராவிடத்தை எதிர்க்கும் அதே நேரத்தில் தமிழரல்லாத அந்த திராவிட வந்தேறிகள் ஊட்டிய பார்ப்பனருக்கு எதிரான சாதிவெறிக்கு நீங்கள் இரையாகி உள்ளீர்கள்.

இனியாவது அந்த விசத்தைக் கக்குங்கள்.

பார்ப்பனர் தரப்பு நியாயத்தை சிந்தியுங்கள்.

பார்ப்பனரை ஏறெடுத்துப் பாருங்கள்...

தமிழக விவசாயத்தை அழிக்க துடிக்கும் பாஜக - அதிமுக...


சித்தர் ஆவது எப்படி.. சித்தர் என்பவர் யார் - 1...


இந்த உலகில் சித்தர்கள் இருக்கின்றார்களா ? என்ற கேள்வி பல வருடங்களாக சாதாரண மனிதர்களால் கேட்கப் பட்டு வருகின்றது....

சித்தர்களை பார்க்கத் துடிக்கின்ற மனிதர்கள் பலர் இன்னும் இருக்கின்றார்கள்....

சிலர் தாம் பார்த்ததாக சொன்னார்களே தவிர யாரும் யாருக்கும் காட்டியதாக தெரியவில்லை...

மனிதகுலம் தம் தம் காலங்களில் தோன்றிய சில மாமனிதர்களை சித்தர்களாக, இல்லை இல்லை சித்தர்கள் போல சித்தரித்தார்களே தவிர அதில் உண்மை துளியும் இல்லை..

இறைவன் என்ற ஒரு உயர்நிலை இருக்க சித்தர்களை இறைவனை விட உயர்வாக போற்றும் போற்றிய மர்மம் என்ன ?

இறைவனால் சாதிக்காததை அப்படி என்ன சித்தர்கள் சாதித்தார்கள் ?..

சித்தர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்றும் நம்பும் உலகம் ஒருவரையேனும் இன்று பார்க்க முடியவில்லையே அது ஏன் ?

இன்று என்ன உண்மையோ அப்படிதானே முன்னும் இருந்து இருக்க வேண்டும்..

அப்படியென்றால் சித்தர்களை இதுவரை எவரும் சரித்திரத்திலோ அல்லது எந்த தலைமுறையிலோ காண வில்லை என்ற பொருளாகி விடுமா ?

இது போன்ற கேள்விகள் எழுகின்ற போது பலரது புருவங்கள் உயர்த்தப் படலாம் என்பதில் சந்தேகம் இல்லை..

மன கசப்பும் அவர்களுடைய நம்பிக்கை உடையும் அபாயம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..

சற்று பொறுமை இழக்காமல், சித்தர் ஆவது எப்படி என்ற தொடர் பதிவினை முழுமையாக படிக்குமாறு வேண்டுக் கொள்கின்றேன்...

முழுவதுமாக படித்தால் மட்டுமே உள்ளதை உள்ளவாறு அறிந்து கொண்டு சித்தர் பாதையில் நேர் வழியில் பயணப்பட முடியும்...

சித்தர் ஆவது எப்படி என்ற தலைப்பில் வரும் பல பகுதிகளில் பல உண்மைகள் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியோடு தொடர்பு கொண்டமையால், படித்த பதிவின் நினைவு கொண்டால் மட்டுமே தொடர்ந்து வரும் பகுதியை சரியாக புரிந்து கொள்ள முடியும்..

ஆகவே ஒவ்வொரு பதிவினையும் உற்று கவனித்து படிக்குமாறும், படித்ததை நினைவில் கொள்ளுமாறும் வேண்டுகிறேன்....

நம் பஞ்சபூதங்களிலேயே அதிகம் மாற்ற அடையக் கூடியதும், அதனால் நம் வாழ்வியலை பல மாற்றங்களை ஆக்கக் கூடியதும் ஆனது நீர் தன்மை உடைய சித்தம் என்ற பூதம்..

இந்த சித்தம் என்ற பூதத்தை முறை படுத்தி மண், ஆகாயத்தை போல் ஸ்திர தன்மை பெற்றால் மட்டுமே நித்திய நிலையாகிய மரணமில்லா பெரு வாழ்வு அடையமுடியும்..

மாறும் போக்கு உடைய சித்தம் என்ற பூதம் உறுதி தன்மை அடைய வாழும் முறையை மேற் கொண்டவர்கள் தான் சித்தர்கள்..

அதாவது சித்தத்தை கையாளுகிறவர்கள் தான் சித்தர்கள்...

மாற்றம் காணும் சித்தம் உறுதி காணும் போது, முன் ஜென்மங்களில் சேர்த்து வைத்த ஆற்றல்கள் உள் வாங்கும் திறமை அதிகரிக்கப் படுவதால் அளவற்ற ஆற்றலை அடையும் பேறு கிடைக்கிறது...

அதனால் மனிதன் மாமனிதன் ஆகிறான்..

இந்த சித்தர்கள் விசயத்தில் மனிதர்கள் செய்யும் பெரிய தவறு என்ன ?

சித்தர்கள் அடைந்ததாக கருதப்படும் பெரும் செயல்களால் ஈர்க்கப் பட்டு, சித்தர்கள் பால் மிகுந்த ஈர்ப்பு உடையவர்களாக இருக்கிறார்கள்..

இன்றைய திரைபடங்களில் மிக பெரிய செயல்களை செய்வது போல் நடித்துக் கொண்டு இருப்பவர்களையே தெய்வமாக கருதி அவர்களின் பெரிய பேனர் படங்களுக்கு குடம் குடமாக பால் அபிசேகம் செய்யும் காலம் இது...

இது முறையற்று செயல் படும் சித்தத்தால் உருவானது..

மாயா நிலையை அள்ளி தரும் இந்த முறையற்ற சித்தத்தை சீர் செய்பவனே சித்தன்..

மாயா நிலை என்ற மயக்க நிலைவிட்டு தெளிவு நிலை என்னும் ஞான நிலை பெற வேண்டும் என்றால் முறையற்ற சித்தத்தை சீர் செய்யவேண்டிய அவசியம் உள்ளதே அன்றி அப்படி சித்தத்தை சீர் செய்து பெரும் ஆற்றலை பெற்ற சித்தர்களின் பெருமை பேசி பேசி சித்தத்தை சீர் செய்யும் செயலை விட்டு விலகி செல்லும் தந்திரத்தை இந்த உலகம் செய்து கொண்டு இருப்பதை பின் பற்றக்கூடாது ..

உலகின் செயல் பாட்டை விட்டு விலகி உண்மை நிலைக்கு திரும்பவேண்டும் ..

உலகத்தார் ஏன் அப்படி விலகி செல்ல விரும்புகிறார்கள் என்றால் அவர்களிடம் ஆற்றல் இல்லாத தன்மையால் உருவான சோம்பல் என்ற பலவீனமே..

எல்லாவற்றிக்கும் ஆற்றல் பெறுவதே முதல் ஆதாரமாக உள்ளது..

அதுவே எல்லாவற்றிக்கும் மூலமாக இருப்பதால் ஆற்றல் பெறுவதே மூலாதாரம் அதாவது மூல ஆதாரம்..

இதனை தேகத்தில் ஒரு இடத்தை காட்டி குறிக்கோளை விட்டு அப்பால் நகர்ந்து செல்வோரும் உண்டு...

எப்படியோ உண்மையான ஆற்றலை பெறும் வழியை விட்டு தப்பி செல்வதே மனித இயல்பாக உள்ளது..

இப்படி தப்பிக்காமல் பொறுப்பை ஏற்று உண்மையை நோக்கி பயணப் படுவதுதான் சித்தர் வழி..

சித்தத்தை சீர் செய்யும் சித்தர் வழியையும் சித்தராகும் நுணுக்கங்களையும் பார்ப்போமாக...

ஆற்றல் பெருகுவதற்கு சித்தத்தின் பங்கு மற்ற பூதங்களை காட்டிலும் மிக மிக அதிகம்..

எண்ண ஆதிக்கங்களை தந்து நம் மனதில் உள்ள பிரபஞ்ச ஆற்றலின் கனலை வெளிச்சமாக விரையமாக்கி, நம்மை செயலற்ற சவநிலைக்கு அழைத்துச் செல்லும் சித்தத்தை சீர் செய்யாமல் சித்தராக முடியாது..

அதற்கான உளவுகளை பகுதி பகுதியாக பார்ப்போமாக...

பாஜக மோடியின் அடுத்த கொள்ளை....


அஞ்சு அஞ்சு பைசாவா அஞ்சு கோடி திருடுனா தப்பில்லங்கிறத வெறும்ங்கிற வார்த்தைய வச்சி எவ்ளோ விளம்பரங்கள்... எவ்ளோ பித்தலாட்டங்கள்...

அதுவும் உங்களுக்கு பிடிச்ச நடிகர்களை வைத்தே உங்கள ஏமாத்துரான்னா..

உன் அறியாமையே வணிகனுக்கு மூலதனம்... சிந்தித்து செயல்படுவீர்...

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மாநகராட்சி குப்பை லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் தலை நசுங்கி பலி...


மயிலாடுதுறையை சேர்ந்தவர் சுதாகர் (28)இவர் வடபழனியில் தங்கி மணலியில் உள்ள ரசாயண கம்பெனியில் வேலை பார்த்து வந்தார் ,நேற்று இரவு வேளச்சேரியில் உள்ள நண்பரை பாரத்துவிட்டு  வடபழனி நோக்கி  தனது பைக்கில் சென்றுக் கொண்டு இருந்தார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திற்கு மேல்  வந்தபோது, பின்னால் வேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி ஒன்றுபைக் மீது மோதியது. இதில் சுதாகர் தூக்கியெறியப்பட்டு கீழே விழுந்தார்  ஹெல்மெட் அணிந்திருந்த சுதாகர்  தலைமீது  லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் ஹெல்மெட்டுடன் தலை நசுங்கி சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த்தும் பரங்கிமலை விபத்து போக்குவரத்து புலனாய்வு போக்குவரத்து பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று சுதாகரின் சடலத்தை  கைப்ஙற்றி  பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துஇந்த விபத்துக்கு காரணமான ஜாபர்கான்பேட்டையை சேரந்த  லாரிடிரைவர் சங்கரை( 53) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்...

பாஜக மோடி எனும் கேடி...


மச்சு பிச்சு - வியப்பூட்டும் சில தகவல்கள்..


வரலாறு என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவன எவை?

முன்னோர்களின் வாழ்க்கை முறை, மன்னர்களின் ஆட்சிமுறை, பண்பாட்டுச் சின்னங்கள், உருவாக்கிய நகரங்கள், கோட்டைகள், மாளிகைகள் போன்றவற்றைக் கூறலாம்.

இவற்றுள் நமக்குப் பார்த்தவுடனே பிரமிப்பை ஏற்படுத்துவது வரலாற்றுத் தலங்களே..

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், தஞ்சைப் பெரிய கோவில், தாராசுரம் கோவில், மகாபலிபுரம் சிற்பங்கள் மற்றும் இன்னபிற தலங்கள் நம் முன்னோர்களின் சிறப்பைப் போற்றுகின்றன.

இதே போல உலகெங்கும், வரலாற்றுத் தலங்கள் அந்தந்த நாட்டு முன்னோர்களின் சிறப்பை பறைசாற்றி நிற்கின்றன...

மச்சு பிச்சு.. தென்னமெரிக்க நாடான பெருவில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நகரம் தான் மச்சு பிச்சு..

செங்குத்தான ஆண்டிஸ் மலைத் தொடரில், கடல் மட்டத்திற்கு மேல் 2400 மீட்டர் உயரத்தில் கொண்ட இன்கா பேரரசால் கட்டப்பட்டது. ( நம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்கள் கிட்டத்தட்ட இந்த உயரம் தான்) பச்சாகுட்டி (Pachakuti) என்ற இன்கா மன்னரின் ஆட்சிக்காலத்தில் இந்த நகரம் கட்டப்பட்டிருக்கிறது.

பழங்காலத்தில், மலைகளின் நடுவே மக்கள் வாழ்க்கை நடத்தியிருந்தாலும் மச்சு பிச்சு நகரத்திற்கு மட்டும் அப்படி என்ன தனிச்சிறப்பு..

செங்குத்தான மலைத்தொடரின் உச்சியில் 1000 பேர் வாழும்படியாக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் இப்பொழுது இருக்குமளவிற்கு தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத பொழுது எப்படி நிர்மானித்தார்கள்?

மக்களின் உழைப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மலை உச்சியில் ஒரு நகரம் அமைப்பதென்பது அதிசயமானதே...

சீனப் பெருஞ்சுவரும் மலை உச்சியில் தான் கட்டப்பட்டதென்றாலும், அவை மங்கோலியப் படையெடுப்பைத் தடுப்பதற்காகவே பயன்பட்டது.

ஆனால் மச்சு பிச்சு நகரமோ, அடர்ந்த காட்டுக்குள்ளே யாரும் எளிதில் அடைய முடியாத இடத்தில்..

இந்நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள், கற்களால் ஆன வடிவங்கள் ஏதோ சூரிய அல்லது இறை வழிபாட்டிற்கான இடமாக இருந்திருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்....

தேயிலைத் தோட்டங்களில் படிப்படியாக பயிரைச் சாகுபடி செய்ய அமைக்கப்பட்டிருப்பதைப் போல மலைச்சரிவில் படிப்படியாக கட்டடங்களை கட்டியிருப்பது இன்கா மக்களின் கலாச்சாரத்தைப் போற்றுகிறது.

மழைக்காலத்தில் வெள்ளத்தால் கட்டடங்கள் அடித்துச் செல்லாமல் இருக்கும் படியாக வடிகால்களையும், விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரங்களையும் உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது....

இவ்வளவு சிறப்பாக ஒரு நகரை உருவாக்கிய இன்கா பேரரசு என்ன ஆனது...

பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய இன்கா மக்கள் கஸ்கா என்ற தங்கள் நகரத்தை விட்டு அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர்.

கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது. காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது.
ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர்.

வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர். நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். ஸ்பானியர்களும் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள்.

சுமார் முப்பத்து ஆறு ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள்.

இன்கா மக்களை வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள்.

போராளிகள் மட்டுமன்றி கண்ணில் பட்ட அனைவருமே படுகொலை செய்யப்பட்டனர் ஸ்பானிய படைகள் கடைசியில் வில்காபாமாவையும் தாக்கியது.

இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான்.

மன்னனைச் சிறைப்பிடித்த ஸ்பானியர்கள் அவரை கஸ்கோ நகருக்குக் கொண்டு பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வந்து படுகொலை செய்தனர்....

ஸ்பானியர்களின் படையெடுப்பின் காரணமாக இன்கா பேரரசு முழுவதும் சிதைக்கப்பட்டு மக்கள் சிதரடிக்கப்பட்டனர்.

இப்படி ஐரோப்பியர்களின் படையெடுப்பின் காரணமாக உலகெங்கும் அழிந்த கலாச்சாரங்கள் எத்தனையோ?

இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து, இப்படி ஒரு நகரம் இருப்பது தெரியாததால் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது மச்சு பிச்சு..

பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டு பிடித்தார்.

அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது.

1983 முதல் யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார சிறப்புமிக்க இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது....

மச்சு பிச்சு நகரிற்குச் செல்ல குஸ்கோ என்னும் நகரில் இருந்து ஒல்லாண்டயடம்போ என்னும் இடத்திற்கு ரயிலிலும், பிறகு மலைகளின் சரிவில் உள்ள பேருந்து பயணம் மூலம் இடத்தைச் சென்றடைய முடியும்..

2007ல், புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த அமைப்பு தேர்ந்தெடுத்த பொழுது இந்த வரலாற்றுச் சின்னம் நமக்கு அறிமுகமானது....

தென்னமெரிக்க நாடுகளில் நம்மவர்கள் பணியாற்றி வந்தால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடத்தில் மச்சு பிச்சுவைச் சேர்த்தாக வேண்டும்..

பல கஷ்டங்களுக்கிடையில், எங்கெங்கோ, யார் யாரையோ பிடித்து எந்திரன் படத்திற்காக ஒரு டூயட் பாடலை டைரக்டர் ஷங்கர் அவர்கள் படமாக்கி உள்ளார்…...

இந்த இடம் தடைசெய்யப்பட பகுதி என்பதால், படப்பிடிப்புக்கு அவ்வளவு கெடுபிடி...

பாமக அன்புமணி இராமதாஸ் காணொளிகள்...



Subscribe and share the youtube channel....

திருட்டு திராவிடமே தமிழர் நிலம் 70,000 ச.கி.மீட்டர் பறிபோனது யாரால்?


இன்று அப்பகுதியில் நாடற்றவர்களை போல கோடிக்கோடி தமிழர் வாழ வேண்டிய நிலையை உருவாக்கியது யார்?

மூன்று முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகள் பறிபோனது யாரால்?

முக்கிய தமிழரின் வழிப்பாட்டுத் தலங்களை பறித்துக் கொண்டு இன்று, அத்தலங்களுக்கு செல்லும் தமிழர் மீது சுடுதண்ணீர் ஊற்றி விரட்டும் நிலையை உருவாக்கியது யார்?

ஒருங்கிணைய இருந்த தமிழரை கன்னடன் மலையாளி என துண்டாடி பிரித்தெடுத்தது யார்?

தமிழ் மூவேந்தரையும் தூக்கி தலையில் வைக்க வேண்டிய தமிழனை.. தூற்ற வைத்து, தூற்ற வேண்டிய இனப்பகையினரை தலையில் தூக்கி வைத்து ஆடும் நிலையை உருவாக்கியது யார்?

2009ல் மாபெரும் ஈழ இன அழிப்பை நடத்தியும் இன்னும் உணர்வற்று கிடக்கும் நிலையை உருவாக்கியது யார்?

20 தமிழரை துன்புறுத்தி சுட்டுக்கொன்ற பின்னரும் குருதி கொதிக்காமல் முடங்கிக்கிடக்கும் நிலையை உருவாக்கியது யார்?

இது போக இன்னும் ஏராளம் உள்ளது..

தமிழின அழிப்பை துளியும் அஞ்சாமல் திறம்பட செய்து, மாய பிம்பத்தால் பொய்யாக நின்று இன்றும் தமிழர் குடியை அழித்திட துணைபோகும், வடுக இனவெறியன் கன்னட தெலுங்கர் ஈ.வெ. ராமசாமியை அரவணைத்து தமிழர் இன விடுதலை காண்போம் என்பது கானல்நீரே...

இன்றைய தமிழனின் நிலை... தெலுங்கு (திராவிட) மாப்பியா ஆதிக்கத்தில்...


மாதுளையின் மகத்துவம்...


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்...!

ஊடகங்கள் சாமானிய மக்களை மடை மாற்றம் செய்ய உருவாக்கப்பட்டதே...


இனியும் கேளிக்கையில் மூழ்கி கிடப்பீர்களானால் உன்னை இவர்கள் குழியில் தள்ளி மூழ்கடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை...

நாதசுவரம்...


தென்ஆப்பிரிக்கா உலக கோப்பை போட்டியில், உவுசலா என்ற இசைக்கருவியும் முக்கிய இடம் பிடித்துள்ளது. இக்கருவி நாதசுவரம் போன்று இருக்கும். உவுசலா பிளாஸ்டிக்கால் ஆனது. நீல்வான் சால்விக் என்ற 37 வயது தென்ஆப்பிரிக்கக்காரர், 15 வருடங்களுக்கு முன் விளையாட்டாக கண்டு பிடித்த நம் தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி நாதசுவரம் போன்ற இருக்கும்.  நாதசுவரம் வாசிக்க ஞானம் வேண்டும். உவுசலாவுக்கு அதெல்லாம் தேவை இல்லை.

நம்முடைய அனைத்து பாரம்பரிய இசைக்கருவிகளையும் முறையாக கற்றுக் கொண்டு ஸாதகம் செய்தால் மட்டுமே வாசிக்க முடியும். நாம் திருமணம், திருவிழா போன்ற இடங்களில் மிகவும் பரவலாக காணும் ஓர் இசைக்கருவி நாதசுவரம். தவுலும் நாதசுவரமும் ஒன்றாகச் சேர்த்து வாசிப்பர்.

நாதசுவரம் துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி ஆகும். இதனை நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை, மலேசியா போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. மிகவும் இனிமையான இசையைத் தரவல்லது இக்கருவி.

தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலகரமான இசைக்கருவியாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலன கோவில்களில் இந்தக் கருவி வாசிக்கப்படுவதுண்டு. நேரடியாக இசைக்காவிட்டாலும் பல ஆலயங்களில் இவ்விசைப் பதிவு செய்யப்பட்ட குருந்தட்டுகளைப் வழிபாட்டின் போது ஒலிபரப்புச் செய்கின்றனர்.

இதைத்தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.

இது வன்மரத்தினால் செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படும் விரிந்த அடிப் பகுதியையும் கொண்டது.

நாதசுவரம் ஆச்சாமரம் என்னும் மரத்தால் செய்யப்படுகின்றது. இதன் பாகங்கள் வட்டவடிவமாக விரிந்து காணப்படும் அணைசு, உள் கூடான நீண்ட மரக்குழலால் ஆன உடல் , உடலின் மேற் பொருத்தப்படும் கெண்டை (செப்புத் தகடு) அவ்வப்போது வைத்து இசைக்கப்படும் சீவாளி.  உடலின் மேற்பாகத்தில் 12 துளைகள் உள்ளன. மேலிருந்து வரும் 7 துளைகளும் இசைப்பதற்கு ஏற்றவை. மற்றைய ஐந்தையும் அவ்வப்போது மெழுகால் அடைத்தும் திறந்தும் கொள்வார்கள்.

நாதசுவரத்தின் நீளம் சுமார் 2.5 அடி.
நாதசுரத்திற்கு சுருதி கருவியாக விளங்குவது ஒத்து என்ற நாதசுவரத்தைப் போன்றவடிவமுள்ள ஒரு கருவி. இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான் வெளிவரும். இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்பி வருவார். இன்று இந்தக்கருவிக்குப் பதிலாக சுருதிப்பெட்டி பயன்படுத்தப்படுகின்றது.

பெரியமேளம்நாதஸ்வரத்துக்கு தாளக் கருவியாக அமைவது தவில் (அல்லது தவுல்) என்ற தோற்கருவியாகும். இதனால் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பொதுவாகத் தவில் இசைக் கலைஞருடன் சேர்ந்து குழுக்களாகவே செயல் படுவது வழக்கம். நாதஸ்வரக் கலைஞர், ஒத்து வாசிப்பவர், தவில் வித்துவான், தாளக் கலைஞர் (ஜால்ரா) ஆகிய நால்வரும் ஒன்று சேர்ந்த இசைக்குழுவைப் பெரியமேளம் என அழைப்பர்.

நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரி, பாரி. திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்...

உறுப்பு சந்தையான தமிழகம்...


நம் மக்களின் உடல் உறுப்புக்களை
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து பிழைப்பு நடத்தும் சுகாதாரத்துறை...

தூதுவளையில் இவ்வளவு விஷயம் இருக்கா?


இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்ப ம் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. துவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்...

கடலை மிட்டாய் உடம்பிற்கு நல்லத..


சாக்லெட்  நாவிற்கு   ருசியயை  தந்தாலும் உடம்பிற்கு  கெட்டது...

மாற்றம்  இன்னிறிலிருந்து  ஆரம்பமாகட்டும்...

பாஜக - அதிமுக இனைந்து தமிழகத்தை அழிக்கிறது...


ஞாணம்....


மோசசிடம் ஒரு புல்லாங்குழல் இருந்தது

சில சமயம் அதை வாசிக்க அவர் மலைக்கு செல்வதுண்டு.

அவர் வாசிப்பை அவ்வழியில் செல்லும் இடையர்கள் மெய்மறந்து கேட்பர்

மான்கள் அசையாது நிற்கும்

பறவைகள் அவரை சூழ்ந்து கொள்ளும்

மோசஸ் இறந்த பிறகு அவ்விடையர்கள் அந்தப் புல்லாங்குழலை ஒரு மரத்தடியில் வைத்து வழிபட ஆரம்பித்தனர்

ஓரிரு தலைமுறைக்குப்பின் மக்கள்

இந்த மூங்கில் புல்லாங்குழலில் என்ன இருக்கிறது...?

வழிபடுவதற்கு இது மேலும் சிறப்புள்ளதாக இருக்க வேண்டும்.என்று கூறி அதைத் தங்கத்தால் அலங்கரித்தனர்

அடுத்து வந்த மக்கள் அதை வைரத்தால் அலங்கரித்தனர்

சில ஆண்டுகள் கழித்து ஒரு சங்கீதக் கலைஞர் அவ்வழியே வந்தார்

அவர் மோசசின் புல்லாங்குழல் பற்றிக் கேள்விப்பட்டு

ஆவலுடன் அதைப் பார்க்க வந்தார்

தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் புல்லாங்குழலை கையில் எடுத்துப் பார்த்தார்

பின் அதை ஊதிப் பார்த்தார்

அதன் துளைகள் முழுவதும் அடைபட்டிருந்தன

மகாவீரரின் புல்லாங்குழலும்,

புத்தரின் புல்லாங்குழலும்,

இயேசுவின் புல்லாங்குழலும்

இப்படித்தான் மாற்றப்பட்டு விட்டன

அவற்றை வைத்திருப்பவர்கள் அவற்றை அழகற்றவை ஆக்கி விட்டனர்

இதற்கு மகா வீரரோ, புத்தரோ ஏசுவோ பொறுப்பல்ல

நாமே காரணம்...

படம் பார்த்து கதை சொல்!


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


2017 இல் எடுக்கப்பட்ட இந்த படம்; இந்தோனேசியா,போர்னியோவில் சுங்கை புட்ரி காடுகள் ஆகும்.
இங்குள்ள பனை எண்ணெய்க்கு மரங்களை வெட்டும்போது சுமார் 6,000 ஒராங்குட்டானான்கள் தங்கள் வாழ்விடம் பாதிக்கப்பட்ட காரணத்தால் இறந்துவிட்டது.

ஆனால் இந்த தலைமை ஒராங்குட்டானானது, தங்கள்  கிரகத்தில் எஞ்சியிருப்பதை காப்பாற்ற இறுதி முயற்சியில் ஹோமோசெர்ப்பியனின் புல்டோசரை மிகவும் தீவிரமாக அணுகுகிறது. ஏனென்றால் இந்த கிரகம் இவர்களுடையது, இந்த கிரகத்தின் உள்ளுணர்வுடனும்,
இயற்கையுடனும் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்துள்ளனர்.

ஆனால் இந்த விலங்குகள்
தங்குமிடம் தேடி மனித குடியிருப்பாளர்களின் வாழ்வாதாரங்களுக்குள் நுழையும்போது, புகார் செய்யும் உரிமை இந்த வேற்றுகிரகவாசிகளுக்கு உண்டு...

இலவச மேசன்...


ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள்...


தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன...

முதல் படம் காலம் 1325 - 1499.
இரண்டாம் படம் காலம் 1499 - 1649.

மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை..

இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்.

நூல்: Precolonial India in Practice: Society, Region, and Identity in Medieval Andhra
By Cynthia Talbot...

சிரியா போர் திருப்பங்களுடன்...


கொழுப்பைக் கரைக்கும் வெண்டைகாய்...


வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை.

இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும்.

வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது.

இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.

சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.

100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது...

30/12/2018

யார் இந்த நம்மாழ்வார்..?


தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவித்த முனைவர் கோ.நம்மாழ்வார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில் (06 ஏப்ரல் 1938)-ல் பிறந்தார்.

தந்தை பெயர் ச.கோவிந்தசாமி. பள்ளிப்படிப்பை முடித்த பின் தந்தை மற்றும் சகோதர்களின் அறிவுரைப்படி விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண்மை படிப்பை தேர்ந்தெடுத்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார்.

பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டோமினிக் பியர் என்பவர் ஆரம்பித்த Island of Peace என்ற தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து அதன் மூலம் களக்காடு பகுதியில் அடித்தட்டு ஏழை விவசாயிகளுக்கு நவின விவசாய முறைகளில் விவசாயம் செய்யவது, கூட்டுறவுக் கடன்கள் மூலம் கிணறுகள் அமைத்து அவர்களின் வாழ்வை உயர்த்துவது என்று இயங்கினார்.

கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960 ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார்.

ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்கா (Masanabu Fukuoka) ஈர்க்கப்பட்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி ஆனார், முனைவர் கோ.நம்மாழ்வார்.

ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தவர் நம்மாழ்வார். நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வந்தவர். 

இந்தியாவில் உணவு பஞ்சத்தை போக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ’பசுமைப் புரட்சி’யின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க நாடகத்தின் அத்தனை அத்தியாயாங்களையும் தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு மூலமாக அடித்து நொறுக்கினார். 

டெல்டா மாவட்டத்தை சுடுகாடாக மாற்றும் திட்டமான மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராகவும், மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும், வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், நடைப்பயணம் என பல விதமான போராட்டங்களை முன்னெடுத்தார்.

தன்னுடைய முயற்சியால் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும், இயற்கை விவசாயத்தை விதைத்தார். இதன் மூலமாக, லட்சக்கணக்கான இயற்கை விவசாயிகள் இன்றைக்கு உருவாகியுள்ளனர்.

இதுவரை குடும்பம், லீசா உள்ளிட்ட 250க்கும் மேலான என்.ஜி.ஓ.க்களை உருவாக்கியுள்ளார்.

இவரின் பணியை சிறப்பிக்கும் வகையில், 2007-ம் ஆண்டு திண்டுக்கல், காந்திக்கிராம கிராமியப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி கெளவரவித்தது. 

தொடர்ந்து இயற்கை வேளாண் முறைகளை தமிழகத்தில் பிரபலப்படுத்துவற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது.

இயற்கை வேளாண் விழிப்புணர்வுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நம்மாழ்வார், தமிழக இயற்கை உழவர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் என்ற இயக்கங்களையும் நடத்தி வந்தார்.

ரசாயனத்தில் விளைவிக்கப்படும் உணவுகள் அனைத்திலுமே நஞ்சு கலந்திருக்கிறது. இந்த உணவுகளை உட்கொள்வதால் தான் மக்கள் நோயாளிகளாகி, சீக்கிரமே வாழ்வை இழக்கிறார்கள். இயற்கை விவசாயம் தான் ஆரோக்கியமான வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று நாடு கடந்தும் குரல் கொடுத்து வந்தவர், நம்மாழ்வார்.

விவசாயத்தை, விவசாயிகளே வேண்டா வெறுப் பாகப் பார்த்த நிலையில்...

சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் இளைஞர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள்... எனப் பல தரப்பினரையும் விவசாயத்தை நோக்கி ஓடி வரச் செய்தவர், நம்மாழ்வார். 

தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் பயணித் திருக்கும் நம்மாழ்வார், பல்வேறு பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள், போராட்டங்கள் என்று பலவற்றையும் முன்னெடுத்திருக்கிறார்.

குறிப்பாக, மரபணு மாற்றப் பட்ட விதைகள், பூச்சிகொல்லி நச்சுகளைத் தயாரித்து சந்தைப்படுத்தும், அசுர பலமிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக விவசாயிகளைத் திரட்டிப் போராடி யிருக்கிறார்.

இறுதி நிமிடங்கள்...

டிசம்பர் 30 அன்று இரவு, நம்மாழ்வார் இயற்கை எய்தினார்..

தமிழகம் முழுவதிலும் இருந்து விவசாயிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசு சார்பாக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்பையன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

அதன் பிறகு கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள சுருமான்பட்டியில் அவர் உருவாக்கியிருக்கும் 'வானகம்' உயிர்ச்சூழல் பண்ணைக்குக் ஆங்கிலப் புத்தாண்டு அன்று காலை 4 மணிக்கு   எடுத்துச் செல்லப்பட்டு நம்மாழ்வாரின் உடல், அங்கே ஏற்கெனவே அவர் தேர்வு செய்து சொல்லியிருந்த இடத்தில் விதைக்கப் பட்டது...

அந்த இடத்தில் வேப்ப மரக்கன்று ஒன்றும் அவருடைய குடும்பத்தாரால் நடப்பட்டது...