11/01/2018

திருமூலர் சொல்லிய - ஹிக்க்ஸ் போசோன்...


இன்று உலகம் தேடி கொண்டிருக்கும் ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அறிய உண்மையை நாம் காண இருக்கிறோம். அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பு இங்கே பார்போம்..

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-திருமூலர்.

இவர் இங்கு குறிபிட்டுருப்பது சிவனுடைய வடிவை சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை (மயிரை) எடுத்து அதை நூறாக கூறிட்டு பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாக பிரித்து அதில் ஒன்றை நான்கயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.

இப்பொழுது நாம் இதை அறிவோம் ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு...

0 .000000212 mm - ஹைட்ரோஜென்.

சரி இப்பொழுது நாம் அவர் கூற்று படி கணக்கிட்டு பார்போம், ஒரு மனிதனின் முடியானது 30 -80 மைக்ரோன் (micron) அக உள்ளது, எனவே நாம் 50 மைக்ரோன் என்றே வைத்து கொள்வோம்...

மயிரின் சுற்றளவு = 50 மைக்ரோன்.
(size of an hair = 50 micron ).

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்.
(100 micron = 0.1 millimeter).

50 மைக்ரோன் = 0.05 மில்லிமீட்டர்.

இப்பொழுது அவர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்..

0.05/100 = 0.0005 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்.

0.0005/1000 = 0.0000005 மில்லிமீட்டர் (MM).

இப்பொழுது நமக்கு கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தில் வகுத்தால் நான் சிவனின் வுருவத்தின் அளவை காணலாம் என்கிறார் திருமூலர்..

0.0000005/4000 = 0.000000000125 மில்லிமீட்டர் (MM)..

அகவே இவர் கடவுளின் (சிவனின்) அளவாக குறிபிடுவது சராசரியாக 0 .000000000125 மில்லிமீட்டர் (MM).

இப்பொழுது இந்த கடவுள் என கருதப்படும் அளவானது நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்க பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவை விட பன்மடங்கு சிறியதாக உள்ளானது.

சரி அதை விட சிறியதாக என்ன இருக்க முடியும் என்கிறிர்களா..

அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள்.

நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று.

இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாக செயல் படவில்லை அதற்கு உல் அணு ஒன்று உள்ளது அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை. அறியபட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.

ஹிக்க்ஸ் போசோன் உருவம் என்ன?

என் ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக சிவனின் அளவை சொன்ன திருமூலர் சிவனின் வுருவதை சொல்லாமலா இருந்திருப்பார்?

அவ்வளவு சிறிய சிவனின் உருவம் எப்படி இருக்கும் என்று நமக்குள் ஒரு ஆர்வம் உண்டாகிறது அல்லவா, இதோ அவனின் உருவ அழகை சொல்லும் திருமூலரின் வார்த்தைகள்...

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே
-திருமூலர்.

இதில் அவர் கூறியிருப்பது என்னவெனில்...

அனைத்திலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன், கண்ணனுக்கு தெரியாதவன் பரந்த சடையுடையவன் பசும்போன்னிரத்தில் இருப்பவன் , நினைபவர்கேல்லாம் கிடைக்காதவன் , அனைவரயும் மயக்கும் வெண்ணிலவானவானே. இது தான் அவர் சிவனின் வுருவாக சொல்கிறார்.

இதில் இப்பொழுது நாம் சில வரிகளை மீண்டும் ஆராய்ந்து பாப்போம்...

பொதுவாக சிவ பெருமானை நாம் சடாமுடியன், சடையான், என்று கூறுவோம், அதே போல் அவரும் பரந்த சடையுடையவானே என்று கூறியிருக்கிறார்.

இப்பொழுது உங்கள் கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சிடியுடன் நினைத்து கொள்ளுங்கள், நாம் பேச்சு வழக்கில் பரட்டை தலை என்று சொல்லுவோம் அல்லவா அதைபோன்று, அனால் சற்று பெரிய அளவில்.

பின்பு அந்த வுருவம் பொன்னிறத்தில் உள்ளது போல் நினைத்து கொள்ளுங்கள், இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம் வழக்கமாக காணும் சிவ பெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன் காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த வுருவத்தை கண்ணுக்கு புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள். சராசரியாக ஒரு அனுவலவிற்கு..

இப்பொழுது சொல்லுங்கள் ஹிக்க்ஸ் போசோன் சொல்லும் அந்த ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் எப்படி இருக்கும் என்று...

இணையதளத்திலும் தொலைகட்சிகளிலும் நாம் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால், அதை கண்டு விட்டாரே திருமூலர் பல நூற்றாண்டு முன்னரே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.