நாகரிக வளர்ச்சி/ கௌரவம்னு தற்சார்பு வட்டத்துக்குள் இருந்த உணவு , நீர் , மருத்துவம், கல்வி என எல்லாத்தையும் கார்ப்பரேட்டிடம் விட்டு விட்டு கடைசியாக நமக்கான தலைவனையும் இனி நம்மால் தற்சார்பாக தேர்ந்தெடுக்க முடியாது போல...
ஒரு நிலத்துக்கு வெளியிலிருந்து நாம் ஒரு தலைவனை அறிமுகப்படுத்தனும்னா முதல்ல அந்திலத்தில் இருப்பவரை முட்டாளாகவோ, கையாலாகதவனாகவோ கோழையாகவோ மாத்தனும். இதான் அடிப்படை..
தற்போது இதுதாங்க தமிழ்நாட்டில் நடந்துக்கிட்டு வருது... கூத்தாடியை தலைவனாக நம் எண்ணத்தில் பதிய வைப்பதும் இதன் அங்கமே.
கிரிக்கெட்/ சினிமா போதை / செக்குமாட்டு கல்வி / சத்தில்லாத உணவு / ஆன்மீக போதை / பணம் / ஆடம்பர வாழ்க்கை என காட்டிக்காட்டி இங்கே பல இளைஞர்கள் (நல்ல தலைவர்கள்) மழுங்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள்...
இதில் என்ன கொடுமைனா வழக்கம் போல இதையும் பெருமையா சொல்லிக்கறது தான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.