10/01/2018

இரயில் தண்டவாளத்தில் இணைப்பு கழன்றது ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்ப்பு...


வேலூர் மாவட்டம் காட்பாடி முதல் ஜோலார்பேட்டை வரை செல்லும் ரயில் மார்க்கத்தில் குடியாத்தம் அடுத்த காவனூர் பகுதியில் இரயில் தண்டவாளத்தின் இணைப்பு கழன்றதால் அந்த வழிதடத்தில் செல்லும் இரயில்கள் நிறுத்தப்பட்டு பழுது சரி செய்த பின்னர் பின்னர் காலதாமதமாக சென்றன.

காவனூர் இரயில் நிலையத்தில் இருந்து பணியாளர்கள் இன்று காலை வழக்கமான  தண்டவாள ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த போது காவனூர் இரயில் நிலையத்திற்க்கு சற்று தூரத்தில் ஜோலார்பேட்டை மார்க்கத்தில் தண்டவாளத்தின் இணைப்பு கழன்று இருப்பதை கண்டு விரைவாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில்.  அந்த மார்க்கத்தில் இரயில்கள் நிறுத்தப்பட்டு, காட்பாடியில் இருந்து அதிகாரிகள் விரைந்து வந்து பழுதான தண்டவாள இணைப்பை  தற்காலிகமாக சரி செய்தனர்.

அதன் பின் நிறுத்தப்பட்டிருந்த இரயில்கள் சுமார் இரண்டு மணிநேரம்  கால தாமதமாக  மிகவும்  நிதானமாக  சென்றன.  சரக்கு இரயில்கள் மற்றும்  சென்னை  பெங்களூர் விரைவு  இரயில்  மற்றும் இரண்டு  அடுக்கு  விரைவு  இரயிலும்  இதில்  அடக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.