தனிமனித தகவலான கை ரேகை, கண்விழிப் படலங்களை ஏற்கனவே ஆதார் நிறுவனம் மக்களிடம் இருந்து கட்டாயமாக பெற்றுவிட்டது என்பதை நாம் அறிவோம்.
இவற்றை தனியார் நிறுவங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டது என்பதையும் அறிவோம்.
இந்நிலையில் இந்த ஆண்டு முதல் அனைத்து குடிமக்களின் முக அடையாளத்தையும் துல்லியமாக பதிவு செய்து அதை சரிபார்த்த பின்னரே சேவைகள் வழங்க வேண்டுமென திட்டமிட்டுள்ளது ஆதார் நிறுவனம்.
கைரேகை கண்விழிப் பதிவுகளை நீங்கள் ஒருவருக்கு விரும்பிக் கொடுத்தால் தான் அதை சரி பார்க்க இயலும். ஆனால் முக அடையாளப் பதிவு என்பது நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் உங்கள் படத்தை வைத்து உங்கள் ஒட்டு மொத்த தகவலையும் சரி பார்த்து விடலாம்.
சாலையில் நடப்பவர் முதற்கொண்டு வீடுகளில் வசிப்பவர் வரை எவரது தகவலையும் அவரது ஒளிப்படத்தை வைத்து வெகு எளிமையாக சேகரித்து விடலாம்.
இது தனிமனிதர்களின் அடிப்படை அகவுரிமையை மீறும் செயலாகும்.
கண் ரேகை கண் பதிவுகளே தனிமனித உரிமை மீறல் என்று நாம் உச்சநீதிமன்றம் வரை சென்று நியாயம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்திய அரசோ அதை பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் இப்போது முக அடையாளப் பதிவுகளை சேகரிக்கும் வேலையை தொடங்கி உள்ளது கண்டனத்திற்குரியது.
இதை எதிர்த்து ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டுமென்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.