12/02/2018

பழ மருத்துவம்...


திராட்சை...

உடல் வறட்சி நீங்கி தோல் மென்மையாகும்.
மலச்சிக்கலை நீக்கும்.
நரம்புத் தளர்ச்சி காரணமாக ஏற்படும் உடல் நடுக்கத்தை சீர் செய்யும்.
குடல் கோளாறுகள், நாக்குப் புண், வாய்ப்புண், தொண்டைப் புண் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

ஆப்பிள்...

உடல் குளிர்ச்சியாகும்.
இதயத்திற்கு வலிவைத் தரும்.
உணவை ஜீரணிக்கச் செய்யும்.
இரைப்பையிலிருந்து மலக்குடல் வரை பலத்தைக் கொடுக்கும்.

கொய்யா...

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
இரத்த சோகை உள்ளவர்கள் கொய்யாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
பற்களுக்கு வலுவூட்டும்.
எலும்புகளுக்கு வலுவூட்டும்.
விஷக்கிருமிகளைக் கொல்லும்.

ஆரஞ்சு...

தோல்நோய் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
மேனியை அழகாக்கும்.
பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது.
வாய் துர்நாற்றம், குடல் வறட்சி, அஜீரணம், மலக்கட்டு, கணைச்சூடு, பித்த மயக்கம், தலைச்சுற்றல், உடல் மெலிதல் முதலியவற்றை நீக்கும்.

சப்போட்டா...

தொண்டைப் புண்ணை ஆற்றும்.
இருமலைத் தடுக்கும்.
குடல்புண்ணை ஆற்றும்.
பெண்களின் கர்ப்பப் பை கோளாறுகளை நீக்கும்.
சர்க்கரை நோயாளிகள் உண்ணத் தகுந்தது.
சீறுநீரகக் கோளாறுகளை நீக்கும்.
மூல நோயைத் தணிக்கும்.

பேரிக்காய்...

எலும்புகளை உறுதிப்படுத்தும்.
பற்களை பலப்படுத்தும்.
இரைப்பை, குடலைப் பலப்படுத்தும்.
பசியைத் தூண்டும்.
குழந்தை பெற்றவர்கள் இதனை உட்கொண்டால் தேவையான பால் சுரக்கும்.

மாதுளை...

நினைவாற்றலை அதிகரிக்கும்.
மயக்கம், நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, சீதபேதி, ஆஸ்துமா ஆகியவற்றிற்கு அருமருந்தாகும்.
மூலம், முடக்குவாதத்திற்கு நல்ல மருந்தாகும்.

பலா...

நரம்புகள் பலப்படும்.
ரத்தத்தை விருத்தி செய்யும்.
பற்களை கெட்டிப்படுத்தும்.
பற்கள் சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும்.

அன்னாசி...

அன்னாசிப்பழச் சாறு மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும்.
ரத்தத்தைச் சுத்தி செய்து, ரத்த விருத்தியை உண்டாக்கும்.
ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தி, மலக்குடலை சுத்தப்படுத்தும்.

விளாம்பழம்...

நோய்க்கிருமிகளை அழிக்கும்.
எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.
இளைஞர்களின் ஞாபக மறதியைப் போக்கும்.
வயோதிகர்களின் ஜீரணத்தை செம்மைப் படுத்தும்.
மூல நோய்க்குச் சிறந்த மருந்து.
இதயத்துடிப்பை சீராக வைத்திருக்கும்.

பப்பாளி...

வைட்டமின் "சி' சத்து அதிகமாக உள்ளது.
குடல் பகுதியில் புற்றுநோய் தாக்குவதைத் தடுக்கும்.
காதில் நோய்த்தொற்று, சளி, காய்ச்சல் தாக்காமல் பாதுகாக்கும்.
பப்பாளியின் விதை மற்றும் இலைகள் குடலில் புழுக்களை நீக்குவதற்கான மருந்தாகச் செயல்படுகிறது.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.